ஏலத்திற்கு வந்த தங்கத்தாலான அஸ்டன் மார்ட்டின் டிபி5 காரின் ஸ்கேல் மாடல்...!!

By Saravana

ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் வெளிவந்த கோல்டுஃபிங்கர் திரைப்படம் வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த படத்தில்தான் முதல்முறையாக அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் டிபி5 கார் பயன்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தின் ஆஸ்தான காராக பல படங்களில் அஸ்டன் மார்ட்டின் டிபி5 பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கோல்டுஃபிஃங்கர் வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவடைவதை பொன்விழாவாக கொண்டாடுகின்றனர். இதற்காக, தங்க முலாம் பூசி தயாரிக்கப்பட்ட அஸ்டன் மார்ட்டின் டிபி5 காரின் ஸ்கேல் மாடல் ஆன்லைன் மூலம் ஏலத்திற்கு வந்துள்ளது.


ஸ்கேல் மாடல்

ஸ்கேல் மாடல்

கோல்டுபிஃங்கர் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரிஜினல் அஸ்டன் மார்ட்டின் டிபி5 காரை 3டி ஸ்கேன் செய்து, அதில் மூன்றில் ஒருபங்கு மாடலாக இதனை வடிவமைத்துள்ளனர்.

இதர சிறப்புகள்

இதர சிறப்புகள்

கோல்டுஃபிங்கர் படத்தின் ஆர்ட் டைரக்டர் சர் கென் ஆடமின் கையெழுத்தும் இந்த காரில் பொறிக்கப்பட்டிருக்கும். அத்துடன் ஒமேகா நிறுவனம் உருவாக்கித் தந்த ஜேம்ஸ்பாண்ட் கைக்கடிகாரமும் இந்த காருடன் வழங்கப்பட உள்ளது.

தங்கத் தகடுகள்

தங்கத் தகடுகள்

இந்த காரில்24 கேரட் தங்கத்தை முலாம் பூசியுள்ளனர். இந்த காரில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் எந்திர துப்பாக்கி, புல்லட் ப்ரூப் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் நம்பர் பிளேட் கூட படத்தில் பயன்படுத்தப்பட்ட காரில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலம்

ஏலம்

இந்த பிரத்யேக காரை ஆன்லைன் மூலம் கிறிஸ்டி ஏல நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. வரும் 17ந் தேதி வரை இந்த காரை ஆன்லைனில் ஏலம் எடுக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

நன்கொடை

நன்கொடை

ரூ.60 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரையிலான விலையில் இந்த தங்க முலாம் கார் ஏலத்தில் விற்பனையாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை குழந்தைகள் நலநிதிக்கு வழங்கப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 12, 2014, 11:10 [IST]
English summary
A one-third scale model, it features a host of remote controlled working gadgets and is even gold-plated as a nod towards Goldfinger, the Bond film in which the car made its cinematic debut and also a reference to the method in which its titular villain dispatched of his victims.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+