தங்கத்தாலான அஸ்டன் மார்ட்டின் ஸ்கேல் மாடல் ரூ.55 லட்சத்துக்கு ஏலம்!

By Saravana

கோல்டு ஃபிங்கர் என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக வெளியிடப்பட்ட தங்கத்தாலான அஸ்டன் மார்ட்டின் காரின் ஸ்கேல் மாடல் ரூ.55 லட்சத்திற்கு ஏலம் போனது.

ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் வெளிவந்த கோல்டுஃபிங்கர் திரைப்படம் வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த படத்தில்தான் முதல்முறையாக அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் டிபி5 கார் பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தின் ஆஸ்தான காராக பல படங்களில் அஸ்டன் மார்ட்டின் டிபி5 பயன்படுத்தப்பட்டது.

கோல்டுஃபிஃங்கர் வெளிவந்து 50 ஆண்டுகள் நிறைவடைவதை பொன்விழாவாக கொண்டாடுகின்றனர். இதற்காக, தங்க முலாம் பூசி தயாரிக்கப்பட்ட அஸ்டன் மார்ட்டின் டிபி5 காரின் ஸ்கேல் மாடலை ஆன்லைன் மூலம் ஏலத்திற்கு விட்டனர்.


ஸ்கேல் மாடல்

ஸ்கேல் மாடல்

கோல்டுபிஃங்கர் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரிஜினல் அஸ்டன் மார்ட்டின் டிபி5 காரை 3டி ஸ்கேன் செய்து, அதில் மூன்றில் ஒருபங்கு மாடலாக இதனை வடிவமைத்துள்ளனர்.

 ரிமோட் கன்ட்ரோல்

ரிமோட் கன்ட்ரோல்

ஏலத்தில் விடப்பட்ட ஸ்கேல் மாடலுக்கான ரிமோட் கன்ட்ரோல்.

 கைக்கடிகாரம்

கைக்கடிகாரம்

கோல்டுஃபிங்கர் படத்தின் ஆர்ட் டைரக்டர் சர் கென் ஆடமின் கையெழுத்தும் இந்த காரில் பொறிக்கப்பட்டிருக்கும். அத்துடன் ஒமேகா நிறுவனம் உருவாக்கித் தந்த ஜேம்ஸ்பாண்ட் கைக்கடிகாரமும் இந்த காருடன் வழங்கப்பட உள்ளது.

 தங்கத் தகடுகள்

தங்கத் தகடுகள்

இந்த காரில்24 கேரட் தங்கத்தை முலாம் பூசியுள்ளனர். இந்த காரில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் எந்திர துப்பாக்கி, புல்லட் ப்ரூப் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் நம்பர் பிளேட் கூட படத்தில் பயன்படுத்தப்பட்ட காரில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்கொடை

நன்கொடை

கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம் இந்த காரை ஆன்லைன் மூலம் ஏலம் விட்டுள்ளது. ஏலம் மூலம் கிடைத்த தொகை குழந்தைகள் நல நிதிக்காக வழங்கப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Friday, September 26, 2014, 15:38 [IST]
English summary
A one-third scale model, it features a host of remote controlled working gadgets and is even gold-plated as a nod towards Goldfinger, the Bond film in which the car made its cinematic debut and also a reference to the method in which its titular villain dispatched of his victims.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+