தகதகக்கும் தங்க நிற நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் கார்: துபாயில் தரிசனம்!
தரமான தங்க விற்பனைக்கு உலகிலேயே பெயர் பெற்ற நகரம் துபாய். அங்கு தங்கத்தின் மீதான ஈர்ப்பால் பலர் தங்களது விலையுயர்ந்த கார்களை தங்க நிறத்தில் மாற்றி வைத்திருப்பதை காண முடியும்.
இந்த நிலையில், துபாய் செல்வந்தர்களின் தங்க மோகத்தை மனதில் கொண்டு தங்க நிறத்திலான நிசான் ஜிடிஆர் கார் ஒன்றை ஜப்பானை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியதுடன், அதனை சமீபத்தில் துபாயில் நடந்த வாகன கண்காட்சியிலும் பார்வைக்கு வைத்தது. அந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த காரின் படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு நிறுவனம்
ஜப்பானை சேர்ந்த குல் ரேஸிங் நிறுவனம் இந்த தங்க நிற நிசான் ஜிடிஆர் காரை உருவாக்கியது. இதில் நுணுக்கமான வேலைப்பாடுகளை பிரபல ஆபரண வடிவமைப்பு நிபுணரான தகஹிகோ இசவா செய்துள்ளார்.

கண்காட்சி
சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த டோக்கியோ ஆட்டோ சலூன் என்ற கண்காட்சியிலும் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த காருக்கான உண்மையான மார்க்கெட்டாக கருதப்பட்ட துபாயில் நடந்த ஆட்டோமெக்கானிக்கா 2016 கண்காட்சியில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

பாடி கிட்
இந்த காருக்கு ஃபைபர் கிளாஸாஸ் ஆன விசேஷ பாடி கிட் பொருத்தப்பட்டிருந்தது. இந்த விசேஷ வடிவமைப்பு கொண்ட பாடி கிட்டில் க்ரோம் பூச்சு பூசிய பின்னர் விசேஷமான தங்க நிற வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. மேலும், எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் பகுதியும் கூட விசேஷ வண்ணத்தில் தகதகக்கிறது.

நுணுக்கமான வேலைப்பாடுகள்
வீல் ஆர்ச்சுகள், சைடு ஸ்கர்ட்டுகள், முன்புறம் மற்றும் பின்புற பம்பர்கள் மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக கவர்கிறது.

பார்வையாளர்கள் சிலிர்ப்பு
தங்க நிறத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கார் தனது ஜொலி ஜொலிப்பால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், அதில் செய்யப்பட்டிருந்த மிக நுணுக்கமான வேலைப்பாடுகளை கண்டு பலர் வியந்து பாராட்டினர்.

மதிப்பு
பல மாதங்கள் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும், இந்த நிசான் ஜிடிஆர் கார் 1.1 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை
இந்த கார் துபாயை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த காரை இனி பொது பார்வைக்கு எதிர்பார்க்க முடியாது.

விருப்பமான மாடல்
சச்சின் டெண்டுல்கர் முதல் உசேன் போல்ட் வரை விளையாட்டு வீரர்கள், மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் துறையில் இருப்பவர்களின் மிகவும் விருப்பமான ஸ்போர்ட்ஸ் கார் மாடல் நிசான் ஜிடிஆர்.

ட்யூனர்களுக்கும்...
பிரபலங்களுக்கு மட்டுமல்ல, மோட்டார்ஸ் பந்தய துறை மற்றும் கார்களை மாறுதல் செய்யும் நிறுவனங்களும் இந்த காரை முதன்மையான சாய்ஸாக வைத்திருக்கின்றன.

எஞ்சின்
சாதாரண நிசான் ஜிடிஆர் காரில் இருக்கும் 3.8 லிட்டர் வி6 எஞ்சின் அதிகபட்சமாக 545 பிஎச்பி பவரை அள்ளிக்கொணரும் திறன் படைத்தது. ஆனால், இந்த கார் இரண்டு டர்போசார்ஜர்கள் உதவியுடன் 820 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

பேடில் ஷிப்ட் வசதி
இந்த கார் 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொண்டது. மேலும், பேடில் ஷிஃப்ட் வசதி மூலமாக மேனுவலாகவும் கியரை மாற்றும் வசதி உள்ளது.

டாப் ஸ்பீடு
இந்த கார் மணிக்கு 311 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.


Click it and Unblock the Notifications








