துபாய்காரர்களுக்கு சவால்விடும் நம் இந்தியர்கள்!! யூஸ்டு காரின் விலையை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க!
துபாயை போன்று, இந்தியாவில் சிலர் தங்களது கார்களுக்கு கவர்ச்சிக்கரமான கோல்டன் நிற பெயிண்ட்டை கொடுத்துள்ளனர். இதில் மேலும் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், இந்த கார்களை அவர்கள் வெறும் ரூ.10 லட்சத்திற்கு உள்ளாக விலையை நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகளவில் தங்கத்தை அதிகளவில் பயன்படுத்துபவர் என்றால், அது அரேபியர்கள் தான். குறிப்பாக, பொருளாதாரத்தில் அசூர வளர்ச்சி அடைந்துவரும் துபாயில் மக்கள் சர்வ சாதாரணமாக தங்கத்தை பயன்படுத்துகின்றனர். ஏனெனில், அந்த அளவிற்கு துபாயில் செல்வந்தர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். இதன் காரணமாகவே, துபாயில் தங்கத்திலான பொருட்களை எளிதாக காண முடிகிறது.

முழுவதும் தங்கத்திலான செல்போன், ஷீ என சொல்லிக்கொண்டே போகலாம். காரின் வெளிப்பக்க பேனல்களை முற்றிலும் தங்கத்தில் கொண்டிருப்பவர்களும் துபாயில் இருக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த டிரெண்ட் நம் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதன் வெளிப்பாடாக, இந்தியாவில் சிலர் தங்களது கார்களை கோல்டன் நிறத்தால் அலங்கரித்துள்ளனர்.
இதுதொடர்பாக யூடியுப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின்படி பார்க்கும்போது, டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள ஒரு யூஸ்டு கார் டீலரிடம் இவ்வாறு கோல்டு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட இரு கார்கள் விற்பனைக்கு உள்ளன. இவை உண்மையான தங்கம் கிடையாது. இவர்களிடம் இருப்பதில் ஒன்று, 2012ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் என்கிற லக்சரி செடான் கார் ஆகும்.

இந்த பென்ஸ் காரின் முன்பக்க கிரில், ஹெட்லைட்ஸ் & டெயில்லைட்ஸ் மற்றும் சக்கரங்களை தவிர்த்து மற்றவை அனைத்தும் தங்க நிறத்திலான வ்ராப்-ஆல் ஒட்டப்பட்டுள்ளன. காருக்கு உள்ளேயும் இவ்வாறு அலங்கரிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியவில்லை. அதேபோல், இந்த பென்ஸ் காருக்கு இதற்குமுன் என்ன நிறம் வழங்கப்பட்டு இருந்தது? என்பதையும் வீடியோவில் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும், காரின் நம்பர் பிளேட்டை வைத்து இணையத்தில் ஆராய்ந்து பார்த்ததில், இந்த இ-கிளாஸ் கார் சிட்ரைன் பிரவுன் நிறத்தில் இருந்துள்ளது. 2012ஆம் ஆண்டு சமயத்திலேயே ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், எலக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் இருக்கைகள், எலக்ட்ரிக் சன்ரூஃப், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் மல்டி-ஃபங்க்சன் உள்ளிட்டவை இ-கிளாஸ் காரில் வழங்கப்பட்டன.
இதுவரையில் கிட்டத்தட்ட 75 ஆயிரம் கிமீ தொலைவு ஓடியுள்ள இந்த இ-கிளாஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி என்சிஆரை சேர்ந்த இந்த யூஸ்டு கார் டீலர், கோல்டன் நிறத்தில் வைத்திருக்கும் மற்றொரு கார், ஹோண்டா அக்கார்ட் ஆகும். ஒரு சமயத்தில் இந்தியாவில் மக்கள் அதிக பேரால் வாங்கப்படும் செடான் ரக காராக இருந்த அக்கார்டை நிறைய பேர் மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
தங்க நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட ஹோண்டா அக்கார்ட் காரும் 2012ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டது ஆகும். இந்த காருக்கு இப்போதுவரையில் ஒரே ஓனர் தான். மேலே கூறிய பென்ஸ் காரை போன்று, இந்த ஹோண்டா காரின் உட்புறத்தையும் காண முடியவில்லை. இதற்கு முன் சில்வர் நிறத்தில் இருந்த இந்த ஹோண்டா அக்கார்ட் காருக்கு விலை ரூ.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது உண்மையான தங்கம் கிடையாதுதான் என்றாலும், ரூ.10 இலட்சம் என்பது குறைவு ஆகும். விலை இவ்வளவு குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு காரணம், இந்த கார்கள் தயாரிக்கப்பட்டு 12 வருடங்கள் ஆகிவிட்டன. விலையை குறைவாக நிர்ணயித்தாலும், இந்த தோற்றத்தில் இந்த கார்களை வாங்க எத்தனை பேர் தயாராக இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. இருந்தாலும், இந்த யூஸ்டு கார் நிறுவனத்திடம் 2 கார்கள் மட்டுமே இவ்வாறு உள்ளதால், இரண்டும் விற்பனையாகிவிடும்.


Click it and Unblock the Notifications








