தகதகக்கும் தங்க சைக்கிள்... விலை ஜஸ்ட் ரூ.2.42 கோடி மட்டுமே!
தங்கத்தின் மீதான ஈர்ப்புக்கு காரணம் சொல்ல தேவையில்லை. ஆபரணங்கள் மட்டுமின்றி, இதர பொருட்களிலும் தங்கத்தை பூசி பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றனர். இந்தநிலையில், ஆடம்பர பொருட்கள் மீது தங்க முலாம் பூசி விற்பனை செய்யும் இங்கிலாந்தை சேர்ந்த கோல்டுஜெனி நிறுவனம் சமீபத்தில் தங்க சைக்கிள் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
தங்க நிற சைக்கிளில் ஆங்காங்கே கருப்பு வண்ணத்தில் பூச்சு கொடுத்து சைக்கிளின் வசீகரித்தை பன்மடங்கும் அதிகரித்துள்ளனர். இந்த சைக்கிளின் அனைத்து பாகங்களிலும் 24 காரட் தங்க முலாம் பூச்சுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.2.42 கோடியாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தங்க சைக்கிள் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

மாடல்
ஜெயன்ட் நிறுவனத்தின் சைக்கிளின் அலுமினிய ஃப்ரேமில் தங்க முலாம் பூசியுள்ளனர்.

செயினிலும்..
சங்கிலியும் தங்க முலாமில் தகதகக்கிறது. ஓட்டினால் தேய்ந்து போகும் என்று கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், இதுபோன்ற தங்க முலாம் பூசப்பட்ட விலையுயர்ந்த பொருட்கள் காட்சிப்பொருளாக மட்டுமே வைக்கப்படுகின்றன.

ஹேண்டில்பார்
ஹேண்டில்பாரில் தங்க முலாம் தவிர்த்து கருப்பு நிற வண்ணப் பூச்சையும் கொடுத்துள்ளனர்.

ஸ்போக்ஸ்
ஸ்போக்ஸ் தங்க முலாம் பூசப்பட்டிருப்பதை காணலாம்.

ஆபரணமா?
ஆபரணம் போன்று தோற்றமளிக்கும் கியர் ஹப் கண்கொள்ளா காட்சியாக தெரிகிறது.

டயர்
இந்த சைக்கிளில் எஸ்ஆர்- 4 ரேஸிங் டயர் பொருத்தியுள்ளனர்.

இரண்டு சைக்கிள்கள்
இதுபோன்று தங்க முலாம் பூச்சுடன் இரண்டு இருசக்கரவாகனங்களை உருவாக்கி வருவதாக கோல்டுஜெனி தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன் விற்பனையில் பிரசித்தம் பெற்றது என்பது கொசுறுத்தகவல்.


Click it and Unblock the Notifications








