கூகுளில் வேலை... பெற்று வளர்த்த தாய், தந்தைக்கு விலையுயர்ந்த கார் பரிசு!! என்ஜினீயரிங் படித்தால் போதும் போலயே!

கூகுளில் பொறியியலாளராக பணியாற்றும் இளம்பெண் ஒருவர் அவரது பெற்றோருக்கு விலையுயர்ந்த எம்ஜி காரை பரிசாக வழங்கி சர்பிரைஸ் கொடுத்துள்ளார். யார் இந்த கூகுள் என்ஜினீயர்? பெற்றோருக்கு அவர் வழங்கியுள்ள எம்ஜி கார் என்ன? அதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெற்று வளர்த்து ஆளாகிவிட்ட தாய், தந்தைக்கு பரிசளிப்பது எவரொருக்கும் மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும். அந்த உணர்வே தனி சுகம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், கூகுளில் பொறியியலாளராக பணியாற்றும் பெண் பொறியியலாளர் ஒருவர் தனது பெற்றோருக்கு விலையுயர்ந்த பிராண்ட்-நியூ காரை பரிசாக வழங்கியுள்ளார்.

google engineer gifted mg hector

உலகின் மிக பெரிய இணைய தேடல் தளமான கூகுளில் பணியாற்றும் இந்த பெண் பொறியியலாளரின் பெயர் சைலீ படேல். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின் துவக்கத்தில், சைலீ தனது கணவருடன் தனது பெற்றோரை எம்ஜி டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றிற்கு அழைத்துவரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இவர்கள் ஷோரூமுக்கு வந்தது வெள்ளை நிறத்திலான எம்ஜி ஹெக்டர் காரில் ஆகும். வீட்டில் இருந்து ஷோரூம் வரையில் பெற்றோரின் கண்களை துணியால் கட்டி அவர்களை சைலீ மற்றும் அவரது கணவர் அழைத்து வந்துள்ளனர். ஷோரூமை அடைந்ததும், பெற்றோரின் கண்களில் கட்டியிருந்த துணியை கழற்றிய சைலீ, பின்னர் அவர்களை சிவப்பு நிற துணியால் மறைக்கப்பட்டு இருந்த காருக்கு அருகில் அழைத்து சென்றார்.

google engineer gifted mg hector

துணியை நீக்கி பார்த்ததில் அதனுள் பிராண்ட்-நியூ எம்ஜி ஹெக்டர் கார் மறைந்திருந்தது. பளபளக்கும் கருப்பு நிறத்தில் புத்தம் புதிய காரை பார்த்ததும் சைலீயின் பெற்றோர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களிடம் காருக்கான சாவியை நீட்ட, அவர்கள் சைலீயை கட்டி அணைத்து கொண்டு அன்பு மழையை பொழிய ஆரம்பித்தனர். வீடியோவின் இறுதியில், புதிய காருக்கு சைலீயின் அம்மா இந்து முறைப்படி பூஜை செய்வதை காணலாம்.

ஏற்கனவே கூறியதுபோல், சைலீ தனது பெற்றோருக்கு பளபளக்கும் கருப்பு நிறத்திலான எம்ஜி ஹெக்டர் காரை பரிசளித்துள்ளார். மார்க்கெட்டில் எம்ஜி ஹெக்டர் கார் பிளாக் ஸ்டோர்ம் எடிசனிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எடிசனில் ஹெக்டர் கார் முற்றிலும் கருப்பு நிறத்தில் கிடைக்கும். ஆனால், சைலீ வாங்கியிருப்பது ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் கிடையாது.

google engineer gifted mg hector

வழக்கமான ஸ்டாண்டர்ட் ஹெக்டர் காரையே முற்றிலுமாக கருப்பு நிறத்தில் சைலீ தேர்வு செய்துள்ளார். இவ்வாறு, ஸ்டாண்டர்ட் ஹெக்டர் காரை கருப்பு நிறத்தில் வாங்குவதை காட்டிலும், ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிசன் இன்னும் அருமையானதாக இருக்கும் என்பது எங்களது கருத்து. ஏனெனில், எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிசன் கார் இந்திய சந்தையில் சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.

5-சீட்டர், 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்களில் ஹெக்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிசன் கார் விற்பனைக்கு கிடைக்கிறது. வழக்கமான ஹெக்டர் காருடன் ஒப்பிடுகையில், பிளாக் ஸ்டோர்ம் எடிசன் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. அதாவது, காரின் க்ரில், ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவையும் கருப்பு நிறத்தில் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஹெட்லேம்ப்களுக்கு பியானோ கருப்பு நிறத்தில் பெஸல்ஸ் கொடுக்கப்படுகிறது.

google engineer gifted mg hector

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், பெற்றோருக்கு பரிசு பொருட்களை வழங்குவது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம் ஆகும். சைலீ ஒருபடி மேலே போய் காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த எம்ஜி காரின் விலை எப்படியிருந்தாலும் ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். சைலீயின் குடும்பத்தாரிடம் ஏற்கனவே வெள்ளை நிறத்தில் ஹெக்டர் கார் உள்ள நிலையில், அதற்கு மேட்ச்சாக கருப்பு நிறத்தில் புதிய ஹெக்டர் காரை வாங்கி உள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 4, 2024, 19:19 [IST]
English summary
Google engineer gifted mg hector car to her parents check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X