உலகிலேயே மிகவும் சுலபமான வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது
உலகிலேயே மிகவும் சுலபமான வேலையான கூகுள் செல்ஃப்-டிரைவிங் காரின் டிரைவர் பணிக்கு கூகுள் நிறுவனம் பணியாளர்களை தேர்வு செய்கிறது.
கூகுள் நிறுவனம் மேற்கொள்ளும் டிரைவர்களுக்கான தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

தானியங்கி கார் தொழில்நுட்பம்;
காலம் செல்ல செல்ல புதிய கார் தொழில்நுட்பங்கள் வள்ர்ந்து கொண்டே இருக்கின்ற நிலையில், தானியங்கி கார் தொழில்நுட்பமும் மிக முக்கியமாக உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தில், டிரைவர் கார்களை இயக்காமலேயே கார்கள் தானாகவே இயங்குகிறது.

டிரைவர் இல்லாத கார்கள்;
மென்பொருள் நிறுவனமான கூகுள், ‘டிரைவர்லெஸ் கார்ஸ்' எனப்படும் டிரைவர் இல்லாத கார்களை உருவாக்கி கொண்டு வருகிறது.
கூகுள் நிறுவனம் மட்டுமல்லாமல், பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஆடி, நிஸான் மற்றும் மெர்சிடிஸ் உள்ளிட்ட ஏராளமான முன்னோடி கார் உற்பத்தி நிறுவனங்களும் டிரைவர் இல்லாத கார்களை தயாரித்து வருகிறது.

கூகுள் வழங்கும் பணி;
கூகுள் நிறுவனம், வெஹிகிள் சேஃப்டி மேனேஜர் (Vehicle Safety Manager) என அழைக்கபடும் வாகன பாதுகாப்பு மேனேஜர் பணிக்கு தான் ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர்.
இந்த வெஹிகிள் சேஃப்டி மேனேஜர்கள், கூகுள் டிரைவர்லெஸ் கார்களுக்கு பாதுகாவளர்களாகவே செயல்படுவர்.

யாருக்கு வாய்ப்பு;
கூகுள் நிறுவனம், வெஹிகிள் சேஃப்டி மேனேஜர்கள் பணிகளுக்கு, அமெரிக்காவின் அரிஸோனா பிராந்தியத்தில் உள்ள ஷாண்ட்லர் (Chandler) என்ற இடத்தில் வசிப்பவவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கபடுவர்.

இதர எதிர்பார்ப்புகள்;
இந்த வெஹிகிள் சேஃப்டி மேனேஜர்கள் பணிக்கு விண்ணப்பிகும் நபர்கள், சுத்தமான டிரைவிங் சாதனை கொண்டிருக்க வேண்டும்.
மேலும், இவர்கள் எந்த விதமான குற்ற பதிவுகளும் இல்லாமல் இருக்க வேண்டும்.
கூகுள் நிறுவனம் தேர்வு செய்யும் பணியாளர்கள் தாங்கள் தேர்வு செய்யும் வெஹிகிள் சேஃப்டி மேனேஜர்கள், ஒரு நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைபிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்;
கூகுள் நிறுவனம், தாங்கள் தேர்வு செய்யும் பணியாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 டாலர்கள் ($20 (Rs. 1,337)/hour - இந்திய மதிப்பில் 1,337 ரூபாய்) சம்பளமாக வழங்கபடுகிறது.
இவர்களின் முக்கியமான பணியே, இந்த டிரைவர்லெஸ் கார்களில் ஏதாவது கோளாறுகள் (எமெர்ஜென்ஸி) நடந்தால், அப்போது இந்த கார்களை கட்டுபடுத்தும் பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டும்.

முக்கியமான பணிகள்;
2 வெஹிகிள் சேஃப்டி மேனேஜர்கள், குழு போல் பணியாற்ற வேண்டி இருக்கும். ஒருவர் வாகனத்தை இயக்கும் பொறுப்பையும், ஒருவர் பயணியர் சீட்டில் அமர்ந்து கொண்டு லேப்டாப்களில் குறிப்புகள் எடுத்து கொண்டிருக்க வேண்டும்.

பணி காலம்;
கூகுள் நிறுவனம் தேர்ந்தெடுக்கபடும் வெஹிகிள் சேஃப்டி மேனேஜர்கள், தாங்கள் கையெழுத்து இடும் ஒப்பந்தத்தை பொருத்து, ஒரு நாளில் 6 - 8 மணி நேரம் என்ற விகிதத்தில் 12 முதல் 24 மாதங்கள் காலம் வரை பணி செய்ய வேண்டி இருக்கும்.

விண்ணப்பிக்கலாம்;
கூகுள் நிறுவனம் தேர்ந்தெடுக்கபடும் வெஹிகிள் சேஃப்டி மேனேஜர்கள் பணிக்கு, அமெரிக்காவின் அரிஸோனா பிராந்தியத்தில் உள்ள ஷாண்ட்லர் (Chandler) பகுதியில் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என கேட்டு கொள்ளபடுகிறது.
உலகில் மிகவும் சுலபமான பணிகளில் ஒன்றான வெஹிகிள் சேஃப்டி மேனேஜர்கள் பணிகளுக்கு மக்கள் அதிக அளவில் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
கூகிள் வழங்கும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ பிளாட்ஃபார்ம் இந்தியாவில் அறிமுகம்
ஆன்ட்ராய்டு இன்போடெயின்மென்ட் சிஸ்டம்... கூகுளுடன் கூட்டணி அமைக்கும் ஆடி!
கூகுள் இதர தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








