கூகுள் மேப்பை பார்த்து காரில் போன 3 பேர் பரிதாப பலி! இதை நம்பி இப்படியெல்லாம் செய்யாதீங்க!

கூகுள் மேப்பை பார்த்து காரில் சென்ற மூன்று பேர் பாலம் வேலை நடந்து கொண்டிருப்பது தெரியாமல் பாலத்தில் சென்று தலை குப்புற காருடன் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சமீபத்தில் உபி மாநிலத்தில் நடந்துள்ளது. இது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது? இதில் பயணித்தவர்கள் எப்படி மரணம் அடைந்தார்கள்? இதுபோன்ற தவறுகளை நாம் எப்படி செய்யாமல் இருக்க வேண்டும்? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.

உபி மாநிலம் கூர்கான் பகுதியைச் சேர்ந்தவர்கள் நித்தின் குமார், அஜித்குமார் மற்றும் அமித் குமார் இவர்கள் 3 பேரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் வேலை சம்பந்தமாக ஃபரிதூர் என்ற பகுதிக்கு செல்ல வேண்டியது இருந்தது. இதற்காக இவர்கள் காரில் பயணம் செய்தார்கள். இரவு நேரத்தில் இவர்கள் பயணம் மேற்கொண்ட நிலையில் இவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி தெரியாமல் கூகுள் மேப் மூலம் வழியை பார்த்து சென்று கொண்டிருந்தார்கள்.

up google map accident

இவர்கள் கூகுள் மேப் மூலம் வழியை பார்க்கும் போது ஒரு பாலத்தை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கூகுள் மேப்பும் அந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும் என காட்டியுள்ள நிலையில் அதை நம்பி இவர்கள் தங்கள் காரில் அந்த பாலத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் அது கட்டுமானத்தில் இருக்கும் பாலமாக இருக்கிறது. அந்த பாலம் முழுமையாக முழுமை அடையாமல் இருக்கும் நிலையில் இவர்கள் அந்த பாலத்தில் பயணம் செய்தார்கள்.

இந்நிலையில் காரில் பயணித்த மூவரும் பாலம் முழுமையாக கட்டுமானத்தில் இல்லை என்பது அறியாமல் காரில் சென்று பாலத்தில் இருந்து தலை குப்புற கீழே உள்ள ராம் கங்கா நதி கரையில் விழுந்துள்ளார்கள். பாலத்தின் மேலிருந்து கார் தலை குப்புற கீழே வந்ததால் காரில் பலத்த அடி ஏற்பட்டது. இதன் காரணமாக காருக்குள் இருந்த மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

up google map accident

ஆனால் இந்த சம்பவம் நள்ளிரவு நேரத்தில் நடந்ததால் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அக்கம் பக்கத்தில் யாருக்கும் தெரியவில்லை. சுற்றிலும் எந்த நபர்களும் இல்லை. பாலம் வேலை நடக்கும் பகுதி என்பதால் இங்கு ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் இவர்கள் விபத்தில் சிக்கியவுடன் அங்கு இவர்களுக்கு உதவி செய்ய எந்த நபர்களும் இல்லை.

காலையில் தான் பாலத்துக்கு கீழே இப்படி ஒரு கார் விபத்தில் சிக்கி கிடப்பதை அப்பகுதியில் உள்ள மக்கள் சென்று பார்த்து உடனடியாக அருகில் உள்ள போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள். அதன்படி போலீசார் அங்கு வந்து பார்த்தபோது காரில் பயணம் செய்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்கள். அதன் பிறகு காரில் இருந்த பொருட்களை வைத்து இவர்களை அடையாளம் கண்டார்கள். இவர்கள் கையில் இருந்த செல்போனில் கூகுள் மேப் மூலம் இவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு மேப் போட்டு சென்றது தெரியவந்தது.

up google map accident

வேலை முடியாத பாலத்தின் வழியாக பயணம் செய்ய சொல்லி கூகுள் மேப் அறிவுறுத்தியதை நம்பி இவர்கள் பாலத்தில் பயணம் செய்த நிலையில், இவர்கள் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நம்மில் பலர் தெரியாத இடத்திற்கு செல்லும் போது இப்படியாக கூகுள் மேப்பை பயன்படுத்தி தான் பயணம் செய்வோம். ஆனால் அதில் தவறான தகவல் கூட இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

கூகுள் மேப்பை பார்த்து தவறான வழிக்கு சென்று விபத்தில் சிக்கிய சம்பவம் நடப்பது இந்தியாவில் இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்னர் பல சம்பவங்கள் இப்படியாக நிகழ்ந்துள்ளன. இதுகுறித்து செய்திகள் எல்லாம் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. நீங்கள் பயணம் செய்யும்போது கூகுள் மேப்பை பயன்படுத்தினாலும் அதில் உள்ள தகவல்களை முழுமையாக நம்பாமல் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

முடிந்த அளவுக்கு அருகில் உள்ள உள்ளூர் நபர்களிடம் தகவலை கேட்டு கூகுள் மேப்பில் காட்டியுள்ள தகவல் சரியான தகவல் தானா என்பதை உறுதி செய்த பின்பு நீங்கள் பயணம் செய்தால் நிச்சயம் உங்களுக்கு பாதுகாப்பான பயணம் ஏற்படும். கூகுள் மேப்பை மட்டும் நம்பி பயணம் செய்வது எப்பொழுதும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கூகுள் மேப்பை பயன்படுத்தி கார் பெரிய பாலத்தில் இருந்து தலை குப்புற கீழே விழுந்து மூன்று பேர் பலியான சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நி1லையில், இந்த சம்பவத்தின் மூலமாகவாவது நாம் பாடம் கற்றுக் கொண்டு இனி மேலும் கூகுள் மேப்பை மட்டுமே நம்பி வாகனம் ஓட்டுவதை நிறுத்த வேண்டும் எப்போதும் வாகனம் ஓட்டும்போது கவனமுடன் விழிப்புணர்வுடன் வாகனம் ஓட்டினால் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 25, 2024, 17:40 [IST]
English summary
Google map accident car crash know how to avoid to this
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X