சர்க்கஸ்ல கூட இப்படி ஒரு சம்பவம் நடக்காது! கட்டி முடியாத பாலத்தில் இந்த கார் எப்படி போனது தெரியுமா?
கூகுள் மேப்பை பயன்படுத்தி வாகனம் ஓட்டுபவர்கள் சமீபகாலமாக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் தவறான, பாதையிலோ அல்லது இல்லாத பாதை வழியாகவோ பயணிக்க வேண்டும் என கூகுள் மேப் வழிகாட்டுகிறது. அதை நம்பி பயணிக்கம் பலர் ஆபத்தில் சிக்கி விடுகின்றனர். இது குறித்த வீடியோ மற்றும் செய்திகள் சமீபகாலமாக அதிகமாக இருந்து வரும் நிலையில் தற்போதும் அப்படியான சம்பவம் நடந்து வருகிறது.
சமீபத்தில் உ.பி மாநிலத்தில் ஹூண்டாய் வெர்னா காரில் கூகுள் மேப் பார்த்து பயணித்த ஒருவர் முடிக்கப்படாத பாலத்தில் ஏறி காரில் குப்புற கவிழ்ந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கார் ஓட்டுநர் கூகுள் மேப் காட்டிய வழியில் நம்பி பயணித்த போது இந்த சம்பவ நடந்துள்ளது. இந்த சம்பவத்தி்ல அதிர்ஷ்ட வசமாக காரில் இருந்தவர்கள் தப்பியுள்ளனர். இந்த கார் எப்படி விபத்தில் சிக்கியது என விரிவாக பார்ப்போம்.

நோபலில் இருந்து கோரக்பூருக்கு ஹூண்டாய் வெர்னா காரில் சிலர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு கூகுள் மேப்பை பார்த்து பயணித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் உ.பி மாநிலம் மஹரான்கங் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்குள்ள பாலத்தில் ஏறி செல்லும் படி கூகுள் மேப் அறிவுறுத்தியுள்ளது.
இதை நம்பி அவர்களும் காரில் வேகமாக பாலத்தின் மீறி ஏறி வந்துள்ளன். ஆனால் அந்த பாலம் கட்டி முடிக்கப்படாமல் இருந்துள்ளது. இவர்கள் இரவு நேரத்தில் பயணித்ததால் பாலம் கட்டி முடியாதபடாதது இவர்களுக்கு தெரியவில்லை. காரில் வேகமாக வரும் போது முன்பக்க ஹெட்லைட் மூலம் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் சாலை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து டிரைவர் உடனடியாக பிரேக்கை அழுத்தியுள்ளார். இவர்கள் வேகமாக வந்ததால் உடனடியாக காரை நிறுத்த முடியவில்லை. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் பாலம் இல்லாத பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் பள்ளத்தில் கவிழும் போது வேகம் குறைந்ததால் காரின் முன்பக்கம் மட்டும் கீழே தொங்கியபடி பாலத்தில் கார் தொங்கி கொண்டிருந்தது.
சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அப்பகுதிக்கு வந்தனர். உடனடியாக காருக்குள் இருந்தவர்களை மீட்டனர். இந்த கார் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்தவர்கள் எந்த வித பிரச்சனையும் இன்றி உயிர் தப்பினர். பின்னர் விடிந்தபிறகு காரை கிரேன் மூலம் மீட்டனர்.
இந்த விபத்திற்கு ஒரு காரணம் கூகுள் மேப் என்றாலும் மற்றொரு முக்கியமான காரணம் அந்த பாலத்தை கட்டும் நிறுவனம். இந்நிறுவனம் பாலத்தின் ஆரம்ப பகுதியில் எந்த விதமான தடுப்புகளையும் வைக்கவில்லை. எந்த எச்சரிக்கை பலகையும் இல்லை. இதனால் காரில் வந்தவர்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று பாலத்தில் வேகமாக வந்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனால் நீங்கள் காரில் வேகமாக பயணிக்கும் போது, கூகுள் மேப் போன்ற விஷயங்களை மட்டும் நம்பி பயணிக்க கூடாது. நீங்கள் செல்லும் பாதை குறித்து முன்னரே அறிந்து வைத்திருப்பது நல்லது. கூகுள் மேப் ஒரு நம்பகமான தளமாக பல நேரங்களில் இயக்கவில்லை என நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








