கூகுள் மேப்பை கிண்டல் பண்ணவங்க எல்லாம் லைன்ல வாங்க! செம அப்படேட்டை கொண்டு வந்து மாஸ் காட்டப்போறாங்க!

கூகுள் மேப் பார்த்து கார் பைக்குகளில் பயணிக்கும் நபர்களுக்கு அவர்களது பெட்ரோலை மிச்சப்படுத்த கூகுள் மேப் ஆப்பில் புதிய அப்டேட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதனால் கூகுள் மேப்பை பயன்படுத்தி பயணிப்பவர்களுக்கு இனி பெட்ரோல் டீசல் செலவு குறைய வாய்ப்புள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது
என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் இதுவரை செல்லாத ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் அங்கு உள்ள மனிதர்களிடம் வழி கேட்டு தான் ஒவ்வொரு இடமாக செல்ல வேண்டும். அல்லது நாம் செல்ல வேண்டிய இடத்தில் இருக்கும் நபருக்கு போன் செய்து அவர் சொல்லும் வழியில் தான் நாம் பயணிக்க வேண்டும். தற்போது செல்போனில் லோகேஷனை பகிர்ந்தால் போதும் அதை வைத்தே எப்படி செல்ல வேண்டும் என்ற வழியை கூகுள் மேப் காட்டிவிடும்.

google maps fuel save update

கூகுள் நிறுவனம் இந்த அப்டேட்டை ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே கொடுத்துள்ளது. இந்தியாவிற்கும் இந்த அப்டேட் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட்டின் படி நமது வாகனம் குறித்த தகவல்களை முதலில் உள்ளீடு செய்ய வேண்டும். நாம் எந்த வாகனத்தில் பயணிக்கிறோம், அதன் இன்ஜின் திறன் உள்ளிட்ட விபரங்களை நாம் உள்ளீடு செய்த பின்பு நாம் எங்கிருந்து எங்கு பயணம் செய்ய வேண்டும் என உள்ளீடு செய்ய வேண்டும்.

தற்போது இருக்கும் கூகுள் மேப்பில் விரைவாக குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல எந்த வழி சிறந்த வழியோ அந்த வழியவே நமக்கு பரிந்துரை செய்யும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதை இனி அடுத்த அப்டேட் வந்தவுடன் நாம் பெட்ரோல் டீசலை சேமிக்க முடியும்.

google maps fuel save update

இந்த வகையிலான வழியை தேர்வு செய்யும் ஆப்ஷனையும் பெற்றுக் கொள்ள முடியும். அந்த ஆப்ஷனை பயன்படுத்துவதன் மூலம் நாம் இருக்கும் இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வழியாக சென்றால் பெட்ரோல், டீசல் செலவு குறையும் என கணக்கிட்டு அந்த வழியை நமக்கு பரிந்துரை செய்யும்.

தற்போது இந்த அப்டேட் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு விரைவில் இந்த அப்டேட் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் வந்தவுடன் இந்திய மக்கள் பெற்றுக் கொள்ள முடியும். இது மட்டுமல்லாமல் இந்த அப்டேட்டில் சில தகவல்கள் இல்லாமல் இருக்கின்றன. இந்த வழியாக வாகனத்தில் செல்லும்போது பெட்ரோல் நிரப்புவது, ரீசார்ஜ் செய்வது எங்கே என்ற தகவல்கள் கூகுள் மேப்பில் அப்டேட் செய்யப்படவில்லை.

google maps fuel save update

மேலும் இந்த எரிபொருள் சிக்கன செலவை வைத்து வழங்கும் ரூட் என்பது ஒவ்வொரு வாகனத்திற்கு மாறுபடும். அதனால் நீங்கள் உங்கள் வாகனங்கள் குறித்த தகவல்களை உள்ளீடு செய்யும் போது உங்களிடம் உள்ள சரியான வாகனத்தை உள்ளீடு செய்ய வேண்டும். நீங்கள் காரில் சென்றால் எந்த ரூட்டு வழியாக சென்றால் பெட்ரோல் செலவு மிச்சமாகும் பைக்கில் செல்லும்போது எந்த ரூட் வழியாக சென்றால் பெட்ரோல் மிச்சமாகும் உள்ளிட்ட தகவல்கள் தனித்தனியாக கிடைக்கிறது.

இது நீங்கள் பயணிக்கும் நேரத்தில் அங்கு ஏற்படும் டிராபிக் மற்றும் ரோடு கண்டிஷன் ஆகியவற்றை கணக்கீடு செய்வது தான் இந்த தரவுகளை உங்களுக்கு ரியல் டைமில் வழங்கும். சில நேரங்களில் எரிபொருள் சிக்கன ரூட்டில் நீங்கள் பயணித்தால் வேகமாக பயணிக்கும் ரூட்டை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். இது நீங்கள் பயணிக்கும் இடம் மற்றும் பயணிக்கும் நேரத்தை பொருத்து மாறுபடும்.

நீங்கள் எவ்வளவு பெட்ரோலை சேமித்துள்ளீர்கள் என்பது நீங்கள் டிரைவ் செய்யும் திறனை பொறுத்து மாறுபடும். ஒவ்வொருவருக்கு டிரைவிங் ஸ்டைலுக்கும் ஒவ்வொரு விதமான பெட்ரோல் டீசல் செலவு என்பது இருக்கும். அதனால் இதை கூகுள் மேப் ஆப்பால் சரியாக கணக்கிட முடியாது. ஆனால் சராசரியான டிரைவிங் செய்யும் நபர்கள் இந்த மேப் பரிந்துரை செய்யும் வழியாக பயணித்தால் நிச்சயம் பெட்ரோல் டீசல் செலவை மிச்சப்படுத்த முடியும்.

கூகுள் நிறுவனத்தின் இந்த அப்டேட் நிச்சயம் இந்தியா உட்பட பல நாடு மக்களுக்கு மிக முக்கியமான அப்டேட்டாக இருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல் தேவையை குறைக்க மத்திய அரசு பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு துணை செய்யும் வகையில் இந்த அப்டேட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட் வந்தால் அது நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழில்நுட்ப ரீதியாக இப்படியான அப்டேட் வருவது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான். இந்த அப்டேட்டுகளை வாகனங்களில் இருக்கும் மேப்புகளில் வழங்குவதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் கூகுள் நிறுவனம் தொடர்ந்து இந்த வழியாக பயணிக்கும் பயணிகளின் தரவுகளை கண்காணித்து அவர்களது பரிந்துரை விஷயத்தை சரி செய்ய வேண்டும் அப்பொழுதுதான் இது நீண்ட காலத்துக்கு பலன் தரும்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 16, 2023, 11:22 [IST]
English summary
Google maps fuel save update how it works
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X