கூகுள் மேப் வேற லெவல்ல மாற போகுது! ரோடு டிராஃபிக் பிரச்சனை இருக்காது - எல்லாம் டெக்னாலஜி மாயம்!!

ரோடு டிராஃபிக் எப்படி இருக்கு? என்பன போன்றவற்றை கூகுள் மேப்பில் 3டி-இல் காட்டும் வசதியை விரைவில் கொண்டுவருவது என கூகுள் நிறுவனம் சமீபத்திய தனது கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது. வேறு என்னென்ன விஷயங்களை இந்த கூட்டத்தின்போது கூகுள் தெரிவித்தது? 3டி மேப் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும்? என்பது போன்றதான கேள்விகளுக்கான பதில்களை இனி பார்க்கலாம்.

கூகுள் இல்லையென்றால், இந்த உலகமே இயங்காது என்ற அளவிற்கு வந்துவிட்டது. குறிப்பாக, கூகுள் வரைப்படத்தை பயன்படுத்தாதவர்களே நம்மில் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஒரு 10 வருடத்திற்கு முன்னர் கூகுள் வரைப்படம் எப்படி இருந்தது, இப்பொழுது எப்படி உள்ளது? என கேட்டால், கூகுள் வரைப்படங்களும், அவை வழங்கும் சேவைகளும் பல்வேறு வழிகளில் மேம்படுத்தப்பட்டுள்ளன.

google maps immersive view

கூகுள் வரைப்படத்தை பயன்படுத்தியே இலட்சக்கணக்கிலான மொபைல் செயலிகள் பிழைப்பு நடத்தி வருகின்றன. அப்படிப்பட்ட கூகுள் வரைப்படத்தையே விரைவில் மிகவும் கவர்ச்சிக்கரமானதாக, 3டி தோற்றத்தில் உலகத்தை காட்ட உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதைவிட முக்கியம், வரைப்படத்தில் எல்லா இடங்களையும் பறவை கண் பார்வையில் பார்க்க முடியும் என கூறியுள்ளது கூகுள்.

இதனால் வரைப்படத்தில் சாலைகளை பறவையை போல் குறிப்பிட்ட உயரத்தில் இருந்து, சற்று சாய்வாக பார்க்க முடியும். இது உண்மையில் பார்வையாளர்களுக்கு நல்ல உணர்வை தரும் என கூகுள் நம்பிக்கை கொண்டுள்ளது. இத்தகைய பறவை கண் பார்வை மட்டுமின்றி, வேறு சில பார்வைகளிலும் கூகுள் வரைப்படத்தை காணும் விதமாக தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.

google maps immersive view

இதுவரையில் கிடைக்கப் பெற்ற சாலை மற்றும் வான்வெளி படங்களை கொண்டு நவீன செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் மற்றும் கம்யூட்டர் விஷன் தொழிற்நுட்பத்தின் உதவியுடன் இந்த வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. இதில், நவீன செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தின் பெயர் நியூரல் ரேடியன்ஸ் ஃபீல்ட்ஸ் (NeRF) ஆகும். ஒவ்வொரு இடத்திலும் ஒளியின் வெளிச்சத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் இந்த தொழிற்நுட்பம் பொருட்களின் அமைப்பையும் தெளிவாக காட்டும்.

சாலைகளில் பைக்கிற்கான பாதைகள், நடைப்பாதைகள், சாலை குறுக்கீடுகள் மற்றும் பார்க்கிங் தேர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் புதிய அப்டேட் செய்யப்பட்ட கூகுள் மேப்பில் அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட பகுதி எந்தெந்த நேரத்தில் எவ்வளவு பிசியாக இருக்கும் என்பதையும் மொபைல் போனிலேயே தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தை நீங்கள் உள்ளீடு செய்தால், அதே சாலையில் கார்கள் கற்பனையாக உருவாக்கப்பட்டு காட்டப்படும்.

google maps immersive view

அத்துடன், மற்ற இடங்களில் சரியாக அதேநேரத்தில் வெப்பநிலை மற்றும் காற்றின் தரம் எப்படி உள்ளது என்பதையும் யூஸர்ஸ் அறியலாம். இதற்காக கூகுள் மேப் செயலியில் டைம் ஸ்லைடர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய கூகுள் மேப் உலகில் 15 நகரங்களில் முதற்கட்டமாக இந்த 2023ஆம் வருடத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்த 15 நகரங்களில் எந்த இந்திய நகரமும் இல்லை. ஆதலால், இந்தியாவிற்கான அப்டேட் செய்யப்பட்ட கூகுள் மேப்பை அடுத்த 2024இல் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சமீப காலமாக கூகுள் மேப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாகவே இத்தகைய அசத்தலான அப்டேட்களை கூகுள் கொண்டுவருகிறது என நினைக்கிறோம். ஆதலால், ரியல்-டைமில் உலகின் வேறொரு பகுதியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கூகுள் மேப்பின் வழியாக பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Article Published On: Friday, May 12, 2023, 16:29 [IST]
English summary
Google maps immersive view updates coming soon
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X