இனிமே வெளியூர் போகனும்னா டோல்கேட் பத்தி கவலையே இல்லை! கூகுள் கொண்டுவந்த இந்த அப்டேட் செம யூஸ்ஃபுல்லா இருக்கே
கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்பில் டோல்கேட் கட்டணம் குறித்த அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ஒரு காலத்தில் தெரியாத ஊருக்குச் சென்றால் தொலைந்து போய்விடுவோம் எனப் பெரியவர்கள் நமக்கு அறிவுரை சொல்லுவார்கள். ஆனால் இன்று அதற்கெல்லாம் சாத்தியமே இல்லை. தெரியாத ஊருக்கு மட்டுமல்ல இந்த உலகில் எங்குச் சென்றாலும் நம் கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் நிச்சயம் நாம் தொலையமாட்டோம். அதில் உள்ள மேப் வசதியைப் பயன்படுத்தி நாம் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்குச் சரியான வழியில் செல்ல முடியும்.

மேப் வசதியைப் பொருத்தவரை பல நிறுவனங்கள் மேப் தொழிற்நுட்பத்தை வழங்கினாலும் மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவது கூகுள் மேப் வசதியைத் தான் அதில் தான் ஏராளமான தகவல்கள், இருப்பதிலேயே துல்லியமான தகவல்களை எல்லாம் வழங்குகிறது. குறிப்பாக நமக்கு வழியாத ஒரு இடத்திற்குச் செல்ல இந்த மேப் வசதி பெரிய அளவில் உதவுகிறது.

இந்த மேப் வசதி வழிகளை அறிவதற்கு மட்டுமல்ல வழிகளில் உள்ள தடங்கல்கள் சிக்கல்கள், உள்ளிட்ட விஷயங்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது. நாம் செல்லும் வழியில் ஏதாவது சாலை வேலை நடந்து கொண்டிருந்தால் அதை அறிந்து கொள்ள உதவுகிறது. நாம் செல்லும் பாதையில் போக்குவரத்து நெருக்கடி இருந்தால் அதை அறிந்து கொள்ள உதவுகிறது. நாம் செல்லும் இடத்திற்கு அருகில் பார்க்கிங் வசதி குறித்த தகவல்களும் இதில் கிடைக்கிறது.

நம்மூரில் பலர் இவ்வாறாகக் கூகுள் மேப்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவ்வப்போது கூகுள் நிறுவனம் எச்சக்க அப்டேட்களை வழங்கி வருகிறது. தற்போது அதன் பயனர்கள் மிக அதிக நாட்களாக எதிர்பார்த்து வந்த ஒரு அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் போது நெடுஞ்சாலைகளைப் பயணித்தால் அங்கு சுங்கச்சாவடிகள் இருக்கும் அதற்கான கட்டணத்தைக் கட்டிவிட்டுச் செல்ல வேண்டியது இருக்கும்.

தற்போது கூகுள் மேப்பில் நாம் செல்லும்படி திட்டமிட்டுள்ள ரூட்டில் எந்தெந்த பகுதியில் சுங்கச்சாவடிகள் இருக்கிறது என்ற தகவல் தான் இருக்கிறது. ஆனால் நாம் அதைக் கடந்து செல்ல எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என் தகவல் இல்லை. இதை தற்போது புதிய அப்டேட்டாக கூகுள் மேப் ஆப்பில் அந்நிறுவனம் கொடுக்கிறது.

அதன்படி நாம் ஒரு ரூட்டில் செல்ல வேண்டும் என்றால் அதில் எத்தனை சுங்கச்சாவடிகள் இருக்கிறது. ஒவ்வொன்றிலும் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட விபரங்களையும் மேப்பிலேயே பெற்றுக்கொள்ளலாம். வெளிநாடுகளில் சில சுங்கச்சாவடிகள் வாகனங்கள் அந்த பகுதியைக் கடக்கும் நேரத்திற்குத் தந்தார் போல் கட்டணம் வசூலிக்கிறது.

இந்த மாதிரியான இடங்களில் வாகனங்கள் நாம் போட்ட ரூட் மற்றும் வேகத்தின் படி எத்தனை மணிக்கு அந்த சுங்கச்சாவடியைக் கடப்போம் என்பதை அறிந்து அதற்கான கட்டணத்தை அப்டேட் செய்கிறது. அதனால் நாம் சுங்கச்சாவடிகளை எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என முன்னரே அறிந்து கொள்ளலாம்.

இது மட்டுமல்ல இந்த மேப்பில் சுங்கச்சாவடிகளைக் கடக்காமல் வேறு பாதை வழியாகச் செல்லவும் கூகுளிடம் கோர முடியும். அது ஒவ்வொரு சுங்கச்சாவடிகளையும் பணம் கட்டாமல் கடக்கும் வழியையும் காண்பிக்கும் ஆனால் அது குறிப்பிட்ட வழியில் செல்லும் பயண தூரத்தை விட அதிக தூரம் மற்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த டோல்கேட்களுக்கான கட்டணத்தைக் கணக்கிடும் முறையில் சரியான கட்டண கணக்கீடு முறை வேண்டும் என்பதற்காக அரசிடமிருந்தே இந்த கட்டண தகவல்களைப் பெற்று பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த சேவையை அந்நிறுவனம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

இது மட்டுமல்ல கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் காற்றின் தரத்தை அறிவிக்கும் (AQI) எண்களையும் கூகுள் மேப் உடன் வழங்குகிறது. உதாரணமாக ஒருவர் வீட்டிலிருந்து வெளியே வரும் முன் அவர் வெளியில் உள்ள காற்றில் தரம் எப்படி இருக்கிறது? இது பாதுகாப்பானதா இல்லையா என்பதை அறிந்து கொண்டு ஒருவர் வெளியில் வர முடியும். இந்த வசதி இன்னும் இந்தியாவிற்கு அறிமுகமாகவில்லை.

தற்போது சுங்கச்சாவடி கட்டணம் குறித்து வெளியான அப்டேட் பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது. தற்போது அதைக் கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும். இப்படியாகக் கூகுள் மேப்பில் என்னென்ன அப்டேட்களை எல்லாம் வந்தால் உங்கள் பயணம் சுலபமாக அமையும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications