இனி கார்ல ஸ்பீடா போனா கூகுள் மேப்பே போட்டு குடுத்துடும்! வருகிறது புது டெக்னாலஜி!
இந்தியாவில் போக்குவரத்து நெருக்கடி மிகப்பெரிய தலைவலியாக இரகு்கிறது. சாலைகளில் பயணிகள் பயணிக்கும் போது மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடியை சந்திக்கின்றனர். இதனால் சாலை விபத்துக்களும் அதிகம் நடக்கிறது. போக்குவரத்து நெருக்கடியால் உயிரிழிப்புகளும் அதிகம் நடக்கிறது. இதைதடுக்க கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உ.பி மாநில டிராஃபிக் போலீசார் சில முன்னெடுப்புகளை கையில் எடுத்துள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் உள்ள போக்குவரத்து நெருக்கடியை குறைக்க அரசு பல்வேறு முன்னெடுப்புகளை கையில் எடுத்துள்ளது.அரசு மற்றும் அல்லாமல் என்ஜிஓக்களும் இதில் தீவிரமாக பங்காற்றி வருகின்றனர். இந்நிலையில் உ.பி மாநிலம் நொய்டாவில் போலீசார் மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து போக்குவரத்து நெருக்கடி மற்றும் சாலை விபத்தை குறைக்க புதிய முன்னெடுப்பு ஒன்றை கையில் எடுத்துள்ளனர்.

அதன்படி நொய்டாவின் குறிப்பிட்டபகதியில் உள்ள சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் போது அவர்கள் கூகுள் பயனராக இருந்தால் அவர்கள் வாகனம் வேகமாக சென்றால் அதற்கான அலர்ட் அவர்கள் செல்போனிலேயே வரும் வகையில் புதிய அம்சம் அறிமுகப்படுத்துகிறது. இதற்காக கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட சாலைகளில் உள்ள அதிகபட்ச வேக அளவுகள் குறித்த தகவல்கள்களை போலீசாரிடம் பெற்று அதை கூகுள் மேப்ஸ் மூலம் கண்காணித்து இதை செயல்படுகிறது.
இது மட்டுமல்லாமல் விபத்து அதிகம் நடக்கும் பகுதிக்கு அருகே செல்லும் போது அந்த பயனருக்கு விபத்து பகதி குறித்த எச்சரிக்கையும் கூகுள் மேப்ஸ் மூலம் வழங்கப்படும் வகையில் இந்த சிஸ்டம் வேலை செய்கிறது. உ.பி மாநிலத்தில் 53 சதவீத விபத்துகளுக்கு முக்கியமான காரணம் அதிக வேகம் தான் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆண்டிற்கு 22000 பேர் உயிரிழக்கின்றனர். இந்த முன்னெடுப்பு வெற்றி பெற்றால் நிச்சயம் விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக அளவு பயணிகள் கூகுள் மேப் வசதியை பயன்படுத்துவதால் இந்த முன்னெடுப்பு நிச்சயம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் மக்கள் பலர் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருப்பார்கள். கூகுள் நிறுவனம் இந்த முன்னெடுப்பை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த சோதனை திட்டம் வெற்றி பெற்றால் நடு முழுவதும் இந்த திட்டதை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
சாலைகளில் செல்லும் போது மக்கள் பலர் விழிப்புர்ணர்வு இல்லாமல் அதிக வேகத்தில் பயணிக்கின்றனர். ஆங்காங்கே அதற்கான எச்சரிக்கை பலகைகள் வைத்தாலும் அது குறித்தசரியான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. ஆனால் கூகுள் மேப் மூலம் இந்த எச்சரிக்கைகள் விடுக்கும்பட்சத்தில் இந்தியாவில் இது நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
உ.பி மாநிலத்தில் உள்ள டிராஃபிக் போலீசார் சாலை போக்குவரத்து பாதுகாப்பிற்கான மாதமாக இந்த மாதத்தை பின்பற்றுவதால் அதன் ஒரு முயற்சியாக இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதனால் சாலையில் மக்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சாலைவிபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் பலர் இந்த முன்னெடுப்பை அங்கிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் இது மிகப்பெரிய அளுவில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








