புதிய கோப்ரோ ஹீரோ12 பிளாக்-ன் விலை இவ்ளோதானா! இதுல என்னென்ன செய்ய முடியும்னு தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க!
அதி நவீன வசதிகள் கொண்ட புதிய கேமிராவை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது கோப்ரோ (GoPro) நிறுவனம். அதில் இடம் பெற்றிருக்கும் புதிய அம்சங்கள் என்ன? இதைக் கொண்டு என்ன எல்லாம் செய்ய முடியும்? அதன் விலை எவ்வளவு? என்பது போன்ற அனைத்து முக்கிய தகவல்களையுமே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
வாகன ஓட்டிகளுக்கு என பிரத்யேகமாக கேமிரா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனம் கோப்ரோ (GoPro). இந்த நிறுவனமே தற்போது ஓர் புதிய கேமிராவை பல்வேறு நவீன சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஹீரோ 12 பிளாக் (HERO12 Black) மாடலையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இன்றைய கால ரைடர்ஸ்களுக்கு (வாகன ஓட்டிகளுக்கு) ஏற்ற ஓர் கோப்ரோ கேமிராவே இதுவாகும். இரு மடங்கு நீடித்து உழைக்கும் திறன், 5.3கே மற்றும் 4 கே எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் வசதி, ஆப்பிள் ஏர்பாட்டுக்கான ஒயர்லெஸ் ஆடியோ சப்போர்ட் வசதி என ஏகப்பட்ட அம்சங்களை இந்த கேமிராவில் கோப்ரோ சேர்த்து இருக்கின்றது.
இதுதவிர, ப்ளூடூத் இணைப்பு வசதியும் கோப்ரோ ஹீரோ 12 பிளாக்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், ப்ரோ ரைடர்களுக்கு மிகுந்த பலனளிக்கக் கூடிய ஓர் கோப்ரோ கேமிராவாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, இதனை கேஷுவல் பயன்பாட்டாளர்களுக்கும் நல்ல பலனை வழங்கும்.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 45 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த கேமிராவைக் கொண்டு 177 டிகிரியில் வீடியோவை பதிவு செய்துக் கொள்ள முடியும். குறிப்பாக, 60 ஃப்ரேம்கள் ஒரு செகண்டுக்கு என 4கே ரெசொல்யூஷனில் வீடியோவை பதிவு செய்துக் கொள்ள முடியும் என்பது இந்த கேமிராவின் கூடுதல் சிறப்பாகும்.
இந்த சூப்பரான வசதிக்காக ஹீரோ 12 பிளாக்கில் மேகஸ் லென்ஸ் மோட் 2.0 (Max Lens Mod 2.0 Accessory) கருவியை கோப்ரோ பயன்படத்தி இருக்கின்றது. இதுவே பரந்த பார்வையில் காட்சிப்பதிவை செய்ய கேமிராவிற்கு உதவுகின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த கருவியைக் கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொள்ள முடியும்.

ஆகையால், தேவைப்பட்டால் வீடியோ மற்றும் புகைப்படம் என இரண்டையும் புதிய கோப்ரோ ஹீரோ 12 பிளாக் வாயிலாக எடுத்துக் கொள்ள முடியும் என தெரிகின்றது. மேக்ஸ் வொயிட் (Max Wide), மேக்ஸ் சூப்பர் வியூவ் (Max SuperView) மற்றும் ஹைப்பர் இம்மர்சிவ் மேக்ஸ் ஹைப்பர் வியூ (hyper-immersive Max HyperView) ஆகிய மூன்று விதங்களில் இந்த கேமிரா வாயிலாகக் காட்சிகளைப் பதிவுச் செய்துக் கொள்ள முடியும்.
தற்போது விற்பனையில் இருக்கும் வழக்கமான ஹீரோ12 பிளாக்குடன் ஒப்பிடுகையில் புதிய ஹீரோ 12 பிளாக் 36 சதவீதம் கூடுதல் அகலமாகவும், 48 சதவீதம் கூடுதல் உயரமாகவும் படம் பிடிக்கும் வசதியைக் கொண்டிருக்கின்றது. இதன் இந்த திறனுக்கு எக்ஸ்ட்ரா லார்ஜ் 8:7 சென்சாரே காரணமாக இருக்கின்றது.
சில நேரங்களில் அட ச்சே இந்த கார்னர் சரியா கேமிராவோட ஃப்ரேமுக்குள்ள வரலையே என நாம் நினைப்பதுண்டு. ஆனால், புதிய ஹீரோ12 பிளாக்கில் இந்த மாதிரியான சிக்கல் என்பதே ஏற்படாது. நீங்கள் விரும்பிய காட்சிகளை தவர விடாமல் படம் பிடிக்கும் திறனை முழுவதுமாக ஹீரோ 12 பிளாக் கொண்டிருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, இந்த கேமிராவில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மேக்ஸ் லென்ஸ் மோட் 2.0 எளிதில் கீறல்களைச் சந்திக்காது என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. சாதாரண பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் கேமிராக்களில் பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் காட்டிலும் அதிக திறன் மற்றும் கீறல் எதிர்ப்பு தன்மைக் கொண்டதாக இந்த கேமிராவை கோப்ரோ வடிவமைத்து இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, இது நீடித்து உழைக்கும் தன்மைக் கொண்டதாகவும் இருக்கின்றது. ஹைட்ரோஃபோபிக் லென்ஸ் பூச்சு இதன் லென்ஸ்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. எனவே இந்த கேமிரா இருந்தால் தடையில்லா மற்றும் மிக சிறந்த விளாக்களை சுலபமாக செய்ய முடியும் என தெரிகின்றது. இதன் கன்ட்ரோல்களும் யூசர் ஃப்ரெண்ட்லியாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
ஆகையால், முதல் பயன்பாட்டிலேயே தடுமாறாமல் அதை பயன்படுத்த முடியும் என்றும் தெரிகின்றது. மேலும், 9:16 வீடியோக்களை எடுக்க புதிய செங்குத்து கேப்சர் பயன்முறை இந்த கேமிராவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் யுட்யூப் ஷார்ட் போன்ற வீடியோக்களை எடுக்க இந்த பயன்முறை மிகுந்த உதவியாக இருக்கும்.
மேலும், இந்த வீடியோக்களை நேரடியாகவும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துக் கொள்ளவும் முடியும். இந்தியாவில் இந்த கேமிரா இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஹீரோ12 பிளாக் மற்றும் ஹீரோ 12 பிளாக் கிரியேட்டர் எடிசன். இதன் விலை ரூ. 65 ஆயிரம் ஆகும். முதல் ஒன்றின் விலையே ரூ. 45 ஆயிரம் ஆகும்.
இப்போது இதற்கான ப்ரீ ஆர்டர்கள் தொடங்கி இருக்கின்றன. ஆன்லான் வாயிலாக இதை ப்ரீ ஆர்டர் செய்துக் கொள்ள முடியும். அமேசான், ஃப்ளிப்கார்ட், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் விஜய் சேல்ஸ் ஆகியவற்றின் வாயிலாக இந்த கேமிராவை ஆர்டர் செய்துக் கொள்ள முடியும்.
வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி முதலே இந்த கேமிரா விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் விற்பனைக்குக் கிடைக்கும். ஓராண்டு வாரண்டி இந்த கேமிராவிற்கு வழங்கப்படும். இன்டர்நேஷன் வாரண்டியும் இதற்கு உண்டு. நிறுவனத்தின் தளத்தில் பார்கோடை வைத்து பதிவு செய்வதன் வாயிலாக இதை கிளைம் செய்துக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இணையத்தின் வாயிலாக லட்சக் கணக்கான ரூபாயை சம்பாதிக்க முடியும் என்கிற சூழல் தற்போது உருவாகி இருக்கின்றது. பலர் சம்பாதித்துக் கொண்டும் இருக்கின்றனர். இதற்கு தனித்துவமான வீடியோக்களை பதிவு செய்தாலே போதும். பார்வையாளர்களை அந்த வீடியோ கவர கவர பணம் தானாக வந்து சேரும்.
இந்த மாதிரியான சூழலில் மிகவும் குவாலிட்டியான வீடியோவை பதிவு செய்ய இந்த புதிய கோப்ரோ மிகுந்த உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. குறிப்பாக ரைடர்கள் தாங்கள் காணும் அழகிய பயணங்கள் மற்றும் இயற்கை சூழலை அப்படியே பதிவு செய்ய இந்த கேமிரா மிகுந்த உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









