வாங்கினதோ 1.5 லட்ச ரூபா சம்பளம்! வச்சிருக்க கார்களோட மதிப்போ 14கோடியாம் பேய் மாதிரி கொள்ளையடிச்சிருப்பாரு போல!

அரசு ஊழியர் ஒருவர் வருமானத்திற்கு மிஞ்சிய சொத்துகளைச் சேகரித்து வைத்திருப்பதற்காக ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மிக முக்கியமாக 1.5 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கும் அவரிடத்தில் ரூ. 14 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார்கள் மற்றும் சூப்பர் பைக்குகள் மீட்கப்பட்டு இருப்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, அவரிடத்தில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர், டிரையம்ப் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற பிராண்டுகளின் டூ-வீலர்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டு இருப்பது நாட்டையே உலுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

மாத சம்பளம் 1.5 லட்சத்தில் எப்படி ஒரு நபரால் இந்த அளவிற்கு ஆடம்பர வாகனங்களை வாங்க முடிந்தது என்பதே பலரின் கேள்வியாக மாறி இருக்கின்றது. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே சத்தர்பால் சிங் எனும் நபர் தற்போது ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

Government employee owning rs 14 crore vehilces

ராஜஸ்தான் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சமீபத்தில் சத்தர்பால் சிங் வழக்கு தொடர்பாக அவருக்கு சொந்தமான சில இடங்களில் அதிரடி சோதனையை நடத்தினர். ஜெய்பூர், ஹனுன்கர், டெல்லி மற்றும் காசியாபாத் உள்ளிட்ட இடங்களிலேயே அவர்கள் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போதே சத்தர்பால் சிங் வருமானத்தைவிட மிக மிக அதிகமாக சம்பாதித்து இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

சத்ரபால் சிங், ராஜ்காம்ப் இன்ஃபோ சர்வீசஸ் லிமிடெட்-இன் தொழில்நுட்ப பிரிவின் பொது மேலாளர் ஆவார். இது ஓர் அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும். இந்த நிலையிலேயே அவர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை குவித்திருப்பதாக ராஜஸ்தான் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு புகார் வந்திருக்கின்றது.

Government employee owning porsche car

இதன் அடிப்படையிலேயே சமீப சில நாட்களாக சத்தர்பால் சிங்-கிற்கு சொந்தமான மற்றும் நண்பர்கள் வீடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்விலேயே பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அனைத்தும் சட்டத்திற்கு புறம்பாக ஈட்டப்பட்டவை ஆகும். ஈட்டப்பட்ட இந்த பணத்தில் அவர் ஆடம்பர வாழ்க்கை வாந்திருக்கின்றார்.

சொல்லப்போனால் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் ஆடம்பர ரக கார்களையம், மிக மிக விலையுயர்ந்த பைக்குகளையும் அவர் பயன்படுத்தி வந்திருக்கின்றார். அதிகாரிகள் அறிவித்திருப்பதன்படி, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender), செவ்ரோலட் க்ரூஸ் (Chevrolet Cruze), மஹிந்திரா தார் (Mahindra Thar) மற்றும் ஸ்கார்பியோ (Scorpio) உள்ளிட்ட கார் மாடல்களை அவர் வைத்திருந்தது தெரிய வந்திருக்கின்றது.

Government employee owning land rover defender car

இதுமட்டுமில்லைங்க அவரிடத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ஷே கெயன்னே (Porsche Cayenne SUV) காரும் இருந்தது தெரிய வந்திருக்கின்றது. இத்துடன், டிரையம்ப் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் பிராண்டுகளின் ஆடம்பர வகை டூ-வீலர்களையும் சத்தர்பால் சிங் பயன்படுத்தி வந்திருக்கின்றார். இந்த தகவல் ஒட்டுமொத்த நாட்டையே பேரதிர்ச்சிக்குள் ஆளாக்கி இருக்கின்றது.

மிக முக்கியமாக போர்ஷே கெயன்னே கார் மாடலின் ஒன்றின் விலை மட்டுமே ரூ. 2 கோடியை நெறுங்கும். இதை செகண்ட் ஹேண்டில் வாங்க வேண்டும் என்றால் பல லட்சங்களை முதல் வைக்க வேண்டும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், லேண்ட் ரோவர் டிஃபெண்ட் கார் மாடலின் விலையும் கோடியிலேயே உள்ளது.

இதன் இப்போதைய மதிப்பு ஒன்றரை கோடி ரூபாக்கும் அதிகமாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், தற்போது சத்தர்பால் சிங்-கிடம் இருந்து கைப்பற்றப்பட்டு இருக்கும் மொத்த வாகனங்களின் மதிப்பு ரூ. 14 கோடி இருக்கும் என ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அவரிடத்தில் இருந்த பெரும்பாலான வாகனங்கள் பிராண்ட் நியூ கார்கள் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அந்தவகையில், மஹிந்திரா ஸ்கார்பியோ என் 4x4 மற்றும் தார் 4x4 கார்களையும் அவர் வைத்திருக்கின்றார். இந்த இரண்டு கார்களின் மதிப்பு மட்டுமே ரூ. 45 லட்சத்தை நெருங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. சத்தர்பால் சிங்-கை போலவே இன்னும் பலரிடத்தில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனையிட இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஊழல்வாதிகளிடம் இருந்து சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக வங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள், நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் என பலரை கைது செய்து அவர்களிடம் இருந்து பெரும் மதிப்பிலான வாகனங்களை அதிகாரிகள் மீட்டெடுத்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 22, 2024, 17:24 [IST]
English summary
Government employee with rs 1 5 lakh salary accused of owning rs 14 crore worthsble vehilces
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X