டோல்கேட் கட்டணத்தை நீங்கள் ரொக்கமாக செலுத்துபவரா? அப்படியானால் இது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...

வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்படாது எனவும், அதற்கு பதிலாக கால நீட்டிப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டோல்கேட் கட்டணத்தை நீங்கள் ரொக்கமாக செலுத்துபவரா? அப்படியானால் இது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதற்கான சுங்க கட்டணத்தை செலுத்துவதற்கு, வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல், அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே வாகன உரிமையாளர்களும் அனைவரும் தற்போது பாஸ்டேக்கை பெற்று வருகின்றனர்.

டோல்கேட் கட்டணத்தை நீங்கள் ரொக்கமாக செலுத்துபவரா? அப்படியானால் இது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூட வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என தெரிவித்திருந்தார். எனவே இதனை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

டோல்கேட் கட்டணத்தை நீங்கள் ரொக்கமாக செலுத்துபவரா? அப்படியானால் இது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...

இந்த சூழலில் பாஸ்டேக் கட்டாயமாக்கப்படுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படலாம் என தெரிகிறது.

டோல்கேட் கட்டணத்தை நீங்கள் ரொக்கமாக செலுத்துபவரா? அப்படியானால் இது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...

இந்த தகவலை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு வரும் ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வராது. அதற்கு பதிலாக வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்படலாம்.

டோல்கேட் கட்டணத்தை நீங்கள் ரொக்கமாக செலுத்துபவரா? அப்படியானால் இது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...

அதுவரை சுங்க சாவடிகளில் ரொக்கமாக கட்டணத்தை செலுத்த முடியும். வாகன உரிமையாளர்கள் பலர் இன்னமும் பாஸ்டேக்கிற்கு மாறவில்லை. இதன் காரணமாகவே ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இதுபற்றி விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். வாகன உரிமையாளர்கள் மத்தியில் பாஸ்டேக் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

டோல்கேட் கட்டணத்தை நீங்கள் ரொக்கமாக செலுத்துபவரா? அப்படியானால் இது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...

தற்போதைய நிலையில் 75 முதல் 78 சதவீதம் வரையிலான சுங்க கட்டணம் மட்டுமே பாஸ்டேக் பரிவர்த்தனைகள் மூலமாக செலுத்தப்படுகிறது. எனவே இன்னமும் பலர் சுங்க கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி வருகின்றனர் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். எனவேதான் காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோல்கேட் கட்டணத்தை நீங்கள் ரொக்கமாக செலுத்துபவரா? அப்படியானால் இது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...

ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வர நாளை ஒரு நாள் மட்டுமே இடைவெளி இருப்பதால், காலக்கெடு நீட்டிப்படுமா? அல்லது நீட்டிக்கப்படாதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

டோல்கேட் கட்டணத்தை நீங்கள் ரொக்கமாக செலுத்துபவரா? அப்படியானால் இது உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்...

டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே பாஸ்டேக் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வாகன ஓட்டிகளின் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும். அத்துடன் பாஸ்டேக் மூலமாக காகித பயன்பாடும் குறைக்கப்படும். கொரோனா வைரஸ் பரவி வரும் தற்போதைய காலகட்டத்தில், பாஸ்டேக் பயன்படுத்தினால் சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Government Mulling Over FASTag Deadline Extension - Here Are All The Details. Read in Tamil
Story first published: Wednesday, December 30, 2020, 16:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X