இனி ரோட்ல ஒரு பழைய வண்டிய கூட பாக்க கூடாது! திடீர் அறிவிப்பை வெளியிட்ட அரசு... மொத்தமா ஒழிச்சு கட்ட போறாங்க...

இந்தியாவில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்களால், காற்று மிக கடுமையாக மாசடைந்து வருகிறது. குறிப்பாக பழைய வாகனங்கள் எல்லாம், காற்றை மிக கடுமையாக மாசடைய செய்து கொண்டுள்ளன. எனவே பழைய வாகனங்களை ஒழித்து கட்ட தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது பொதுமக்களுக்கு அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் பார்க்கலாம்.

என்சிஆர் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியாவின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR - National Capital Region), பல்வேறு மாநிலங்களின் மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அவை டெல்லி (Delhi), ஹரியானா (Haryana), ராஜஸ்தான் (Rajasthan) மற்றும் உத்தர பிரதேசம் (Uttar Pradesh) ஆகிய மாநிலங்கள் ஆகும்.

Scrapping

இதில், உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில், அம்மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 75 மாவட்டங்கள் உள்ளன. இதில், 8 மாவட்டங்கள் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் கீழ் வருகின்றன. அங்கு காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக உத்தர பிரதேச மாநில அரசு தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அது பழைய வாகனங்களை ஸ்கிராப் (Vehicle Scrapping) செய்வது தொடர்பாக, அதாவது பழைய வாகனங்களை அழிப்பது தொடர்பான அறிவிப்பு ஆகும். இதன்படி 2003ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஸ்கிராப் செய்ய முன்வரும் நபர்களுக்கு, புதிய வாகனங்களை வாங்கும்போது, வரிகளில் 75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

Scrapping Of Vehicles

அதே நேரத்தில் 2008ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஸ்கிராப் செய்தால், புதிய வாகனங்களை வாங்கும்போது, வரிகளில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இதன் மூலம் புதிய வாகனங்களை வாங்கும்போது வரியாக செலுத்த வேண்டிய தொகையில் பெரும் பகுதியை பொதுமக்களால் சேமிக்க முடியும்.

இதன் காரணமாக பழைய வாகனங்களை அழித்து விட்டு, புதிய வாகனங்களை வாங்க பொதுமக்கள் பலர் முன்வருவார்கள் என அரசு எதிர்பார்க்கிறது. பழைய வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து, புதிய வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், காற்று மாசுபாடு பிரச்னை ஓரளவிற்கு கட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன் புதிய வாகனங்களின் எண்ணிக்கை உயர்வது என்பது, நாட்டின் பொருளாதார ரீதியிலான முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும். இதன் காரணமாகவே உத்தர பிரதேச மாநில அரசு தற்போது இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகும். அங்கு பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை இயக்குவதற்கு ஏற்கனவே மிக கடுமையான கட்டுப்பாடுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT - National Green Tribunal) விதித்துள்ளது.

இதன்படி தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களையும், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில்தான் தற்போது உத்தர பிரதேச மாநில அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, தேசிய தலைநகர் பிராந்தியத்தை காற்று மாசுபாடு பிரச்னைகளில் இருந்து பாதுகாக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 1, 2024, 13:01 [IST]
English summary
Government offers tax exemption on scrapping of old vehicles read full details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+