இந்த பாஸை வாங்கிட்டா டோல் கட்டணம் செலுத்தாமலே போகலாம்.. பஸ் பாஸ், டிரெயின் பாஸ் போல 'டோல் பாஸ்' வர போகுது!

பேருந்து மற்றும் ரயில் பயணங்களுக்கு பாஸ் வழங்கப்படுவதைப் போல சுங்கச் சாவடிகளைப் பயன்படுத்தவும் விரைவில் பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாதாந்திர பாஸ் ரூ. 3 ஆயிரம் கட்டணத்திற்கும், வாழ்நாள் முழுக்க பயன்படுத்துவதற்கான பாஸ் ரூ. 30 ஆயிரம் கட்டணத்திலும் கார் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் பிரைவேட் கார் பயன்பாட்டாளர்களுக்கு உதவும் விதமாகவே இந்த பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய அரசு தற்போது திட்டமிட்டு இருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி ஒவ்வொரு முறையும் டோல்கேட்டைக் கடக்க நூறு ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கார்களுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே 3 ஆயிரம் ரூபாய் கட்டணத்திலேயே அளவற்ற பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கும் விதமான பாஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

Annual toll pass for national highways

Source: TOI வாழ்நாள் பாஸ்-ஸை 15 ஆண்டுகள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். இப்போது இந்த திட்டம் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. விரைவில் இதை சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் நடைமுறைப்படுத்தலாம் என தெரிகின்றது. ஆனால், எப்போது என்கிற துள்ளியமான நாள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

மாதாந்திர பாஸ் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால், இப்போதைய நிலவரப்படி மாதாந்திர பாஸ் உள்ளூர் வாசிகளுக்கும், ஒற்றை டோல்கேட்டை மட்டும் அடிக்கடி பயன்படுத்தி வருபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. இதற்கு முகவரி சான்று மற்றும் மேலும் சில ஆவணங்களை குறிப்பிட்ட டோல்கேட் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த பாஸ்-ஸை மாதம் அல்லது ஓராண்டுக்கு என வாங்கிக் கொள்ள முடியும். அந்தவகையில் ரூ. 340 கட்டணத்தில் மாதாந்திர பாஸ்-ம், ரூ. 4,080 கட்டணத்தில் ஓராண்டிற்கான பாஸ்-ம் உள்ளூர் வாசிகளுக்கு வழங்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அனைவருக்கும் மாதாந்திரா மற்றும் லைஃப்-டைம் டோல் பாஸ்-ஸை வழங்குவதற்கான பரிந்துரை சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு வந்திருக்கின்றது.

இதன் வாயிலாக தனிநபர் கார் உரிமையாளர்கள் தடையில்லாமல் எந்த டோல்பிளாசாவையும் கடந்துச் செல்ல முடியும். ஒவ்வொரு ஆண்டும் டோல் பிளாசாக்கள் வாயிலாக அரசுக்கு கிடைக்கும் வருமானம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இப்போது ஃபாஸ்டாக் வாயிலாக அரசு டோல் வரி வசூலித்து வருகின்றது.

புள்ளி விபரங்களின்படி கடந்த 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் வாயிலாக ரூ. 55 ஆயிரம் கோடி வருமானத்தை அரசு ஈட்டியது. இதில், பிரைவேட் கார்களால் மட்டும் கிடைத்த வருமானம் 8 ஆயிரம் கோடி ஆகும். மொத்த வாகனங்களில் 53 சதவீதம் பிரைவேட் கார்களே டோல்பிளாசாக்களைப் பயன்படுத்தி வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய பாஸ் திட்டத்தால் வரும் நாட்களில் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் இன்னும் பன்மடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், தனி நபர் கார்களுக்கு மட்டுமே இந்த பாஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. வாடகை கார்களுக்கு வழங்கப்படுமா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. அரசு இதை நடைமுறைக்குக் கொண்டு வரும்போது திட்டம் பற்றிய தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2025, 16:32 [IST]
English summary
Government plans to introduce annual toll pass for rs 3000 unlimited use on national highways
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+