டாடா, மஹிந்திரா கார்களுக்கு டோல் கிடையாதா?.. குஷியில் கார் உரிமையாளர்கள்..

'டோல் கட்டணம்' நீண்ட காலமாக மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. சொல்லப்போனால் கட்டுவதற்கு மனசே இல்லாமலேயே பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த கட்டணத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவன கார்களுக்கு டோல் கட்டணத்தில் இருந்து விலக்கு வழங்கப்பட இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் அந்தந்த நிறுவன கார்களைப் பயன்படுத்தி வருபவர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

மேலே பார்த்த நிறுவன கார்களுக்கு மட்டுமல்ல எம்ஜி (MG), மாருதி (Maruti) மற்றும் ஹூண்டாய் (Hyundai) நிறுவன கார்களுக்கும் டோல் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. டோல் வரி விலக்கு என்பது அனைத்து கார்களுக்கும் பொருந்தாது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

Toll exemptions for ev

மின்சாரத்தில் இயங்கும் கார் (Electric Car)களுக்கு மட்டுமே இந்த வரிவிலக்கு என்பது அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. மேலே பார்த்த நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களுக்கு மட்டுமல்ல வேறு எந்த பிராண்டின் மின்சார காராக இருந்தாலும் டோல் வரி விலக்கு அளிக்கப்பட இருக்கின்றது. மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி மக்களை நகர்த்தும் ஓர் முயற்சியாகவே இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கிய எக்ஸ்பிரஸ் சாலையிலேயே இந்த திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதற்கான கோரிக்கையே தற்போது முன்மொழியப்பட்டு இருக்கின்றது. விரைவிலேயே இந்த திட்டம் சோதனையோட்டமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மும்பை - புனே எக்ஸ்பிரஸ்-வே மற்றும் மும்பை - நாக்பூர் சம்ருத்தி எக்ஸ்பிரஸ்-வே ஆகிய சாலைகளிலேயே மின்சார கார்களுக்கு டோல் கட்டணம் ரத்து செய்யப்பட இருக்கின்றது.

Toll exemptions for electric vehicles proposed

ஏற்கனவே மின்சார கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அரசுகள் ஆர்டிஓ கட்டணத்தை ரத்து செய்து இருக்கின்றது. இதுமட்டுமல்ல, மானியம் போன்ற சிறப்பு சலுகைகளையும் அரசுகள் இ-வாகனங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மற்றுமொரு சிறப்பு சலுகையாக இந்த டோல் வரி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் விதமாக இன்னும் பல்வேறு திட்டங்களை அரசுகள் அறிவித்துக் கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. அரசுகள் மட்டுமல்ல மின்சார வாகன உற்பத்தியாளர்களும் இ-வாகன பயன்பாட்டின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

விலை தள்ளுபடி, குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதி உள்ளிட்டவற்றை அறிவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, இ-வாகனங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு அதிக ஆண்டுகள் வாரண்டி திட்டங்களையும் சில நிறுவனங்கள் அறிவித்துக் கொண்டிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹாராஷ்டிராவில் அறிவிக்கப்பட்டு இருப்பதைப் போலவே மற்ற மாநிலங்களிலும் இந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. இந்த நடவடிக்கை நாடு முழுக்க எடுக்கப்படும் எனில் இப்போது விற்பனையாகிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இரட்டிப்பான வரவேற்பை இ-வாகனங்கள் இந்தியாவில் பெறும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 22, 2025, 18:41 [IST]
English summary
Government plans toll exemptions for ev s on two major expressways to encourage adoption
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+