டோல் வரி வசூலிக்க ஃபாஸ்ட்டேக்கிற்கு பதில் புதிய சிஸ்டம்... இதுக்காகவா மக்களை அவசரகதியா மாத்தினாங்க!
டோல் கட்டணத்தை வசூலிக்க தற்போது ஃபாஸ்ட்டேக் (FASTag system) திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு பதிலாக புதிய திட்டத்தை மத்திய அசு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சுங்கச் சாவடி கட்டண வசூலிப்பு முறையை சீர்படுத்தும் விதமாக ஃபாஸ்டாக் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தாத வாகனங்கள்மீது அபராதம் மற்றும் கூடுதல் கட்டணம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஆகையால், வாகன உரிமையாளர்கள் அரசின் புதிய திட்டத்திற்கு அவசரகதியாக மாற தொடங்கினர். இந்த மாதிரியான சூழலில் விரைவில் மத்திய அரசு ஃபாஸ்ட்டேக் (FASTag system) திட்டத்தைக் கைவிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிதாக ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வரி வசூலிப்பு முறையை பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

ஏற்கனவே, இதுகுறித்த தகவலை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி உறுதிப்படுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேலையில் தற்போது இந்த பணிகளை அரசு தற்போது அதி-தீவிரப்படுத்தியிருக்கின்றது. ஆகையால், வெகு விரைவில் ஃபாஸ்ட்டேக் திட்டம் வழக்கற்றுப் போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய நெடுஞ்சாலை துறை ஏற்கனவே ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டணம் வசூலிப்பு முறையை சோதனையோட்டம் முறையில் செயல்படுத்தியிருப்பதாக ஸ்டேட்ஸ்மேன் தளம் தெரிவித்துள்ளது. ஆனால், பைலட் திட்டத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த திட்டம் எந்த பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய துள்ளியமான விபரம் கிடைக்கவில்லை. தற்போது 97 சதவீத வாகனங்கள் ஃபாஸ்டேக்கை பயன்படுத்துகின்றன. இதன் வாயிலாக அரசுக்கு வருவாய் முன்பை காட்டிலும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஃபாஸ்ட்-டேக் எப்படி செயல்படுகின்றது?
ஃபாஸ்ட்டேக் ஓர் ரோடியோ அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பம் ஆகும். இதுவே வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து டோலுக்கு உரிய கட்டணத்தை ஆட்டோமேட்டிக்காக எடுத்துக் கொள்ள உதவுகின்றது. இந்த செயலுக்காக பிரத்யேகமான க்யூ-ஆர் கோடு அந்த ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரில் இருக்கும்.

இந்த செயலை தடையின்றி செய்ய வேண்டும் என்பதற்காகதான் அனைத்து வாகனங்களின் விண்ட்-ஷீல்டில் வெளிப்படையாக அந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகின்றது. இது, ஒவ்வொரு முறையும் சுங்கசாவடியைக் கடக்கும்போது உரிய கட்டணத்தை தானே வழங்கிவிடும். இந்த செயல்பாடு கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெறும்.

இந்த அதி-வேக திறனே அரசு ஃபாஸ்டேக்கை நடைமுறைக்குக் கொண்டு வர காரணமாக இருக்கின்றது. ஆனால், பல இடங்களில் தற்போது வாகன நெரிசில் டோல்கேட்டுகளில் இருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக, வாகன நெரிசலைக் குறைத்து, ஆன்லைன் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் பொருட்டே ஃபாஸ்ட்டேக் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

இதனை கைவிடும் முயற்சியிலேயே அரசு தற்போது களமிறங்கியிருக்கின்றது. இதற்கு பதிலாக ஜிபிஎஸ் டோல் கட்டணம வசூலிப்பு முறையை அது கையிலெடுக்க இருக்கின்றது. இந்த திட்டம் எப்படி செயல்படும் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.

ஜிபிஎஸ் சிஸ்டம் எப்படி வேலை செய்யும்?
நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்கள் அவர்கள் பயன்படுத்தும் தூரத்திற்கு ஏற்ப கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என்கிறது இந்த ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் கட்டண முறை. அதேவேலையில், தற்போது செயல்பாட்டில் இருக்கும் டோல் கட்டண முறையானது, நாம் கடக்கும் ஒவ்வொரு டோலுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறது.

இதனால் பயன்படுத்தாத கிமீட்டர்களுக்கும் தேவையில்லாமல் பணம் செலுத்தப்படுகின்றது. இதனை தவிர்க்கும் பொருட்டே ஜிபிஎஸ் சிஸ்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றது. இந்த சிஸ்டம் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது. அங்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

எனவேதான் இந்திய அரசும் ஜிபிஎஸ் டோல் கட்டண திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும் செயல்பாட்டில் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது. ஓர் வாகனம் நெடுஞ்சாலையில் பயணத்தைத் தொடங்கியது முதல் அதுகுறித்த தகவலை ஜிபிஎஸ் சிஸ்டம் பதிவு செய்ய தொடங்கிவிடும்.

வாகனம் நெடுஞ்சாலையை விட்டு வெளியேறிய பின்னர் ஒட்டுமொத்தமாக எத்தனை கீமீ நெடுஞ்சாலை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது கணக்கிடப்பட்டு, அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். ஆகையால், இந்தியாவில் இந்த வகை டோல் கட்டண வசூலிப்பிற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








