Just In
- 58 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சத்தமே இல்லாம வேலைய முடிச்சுட்டாங்க... மத்திய அரசு செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
மத்திய அரசு தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு நாட்டின் பொருளாதார ரீதியிலான வளர்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் அவசியம். சரக்குகளை சுமந்து செல்லும் வாகனங்களின் விரைவான போக்குவரத்திற்கு உதவும் தேசிய நெடுஞ்சாலைகள், நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. எனவே இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்கரியும், புதிய தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதிலும், ஏற்கனவே உள்ள சாலைகளின் தரத்தை உயர்த்துவதிலும் ஆர்வத்துடன் உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதில் அரசு எவ்வளவு தீவிரமாக உள்ளது? உணர்த்தும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஐந்து மாத கால கட்டத்தில், மொத்தம் 3,181 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைத்துள்ளதாக அரசு தற்போது அறிவித்துள்ளது. ஆனால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ வெறும் 2,771 கிலோ மீட்டர்களுக்கு மட்டும்தான். அதாவது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அரசு கடந்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக, உலகமே மிக சவாலான சூழலை எதிர்கொண்டு வருகிறது. ஊரடங்கு, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை கடந்து தேசிய நெடுஞ்சாலைகளை அரசு கட்டமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாலைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.

அத்துடன் நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளின் நீளமானது, கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டு மடங்கிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளையும் விரைந்து முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் (MoRTH-Ministry of Road Transport and Highways) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதில் கடந்த வாரம் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கடந்துள்ளது.

கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில், 3,181 கிலோ மீட்டர்கள் நீளத்திற்கான தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக இந்த காலகட்டத்திற்கு என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த 2,771 கிலோ மீட்டர்கள் இலக்கு கடக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 2,104 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் மாநிலங்களின் பொதுப்பணித்துறையால் (PWDs-Public Works Department) கட்டமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 879 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் (NHAI- National Highways Authority of India) கட்டமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 198 கிலோ மீட்டர்கள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மூலமாக (NHIDCL-National Highways and Infrastructure Development Corporation Ltd) முடிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு பணிகளை வேகப்படுத்தி வரும் அதே நேரத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்களை குறைக்கவும் அரசு முயன்று வருகிறது.
Note: Images used are for representational purpose only.