அவர் பெத்த பொண்ணா இது! சினிமால நடிக்க மட்டும் வந்தாங்கன்னா அத்தனை நடிகைகளுக்கும் தூக்கம் போயிரும்!
இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த கார்களை அதிகளவில் வாங்குவதில், திரையுலக நட்சத்திரங்களுக்கு மிகவும் முக்கியமான பங்கு உள்ளது. ஒரு சில நடிகர், நடிகைகள் எளிமையான வாழ்க்கை முறையை கடைபிடித்தாலும் கூட, பெரும்பாலான நடிகர், நடிகைகள் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் வலம் வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த நடிகர், நடிகைகள் வாங்கும் புதிய கார்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம், வாசகர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்த வரிசையில் பிரபலமான நடிகரின் மகள் ஒருவர், புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கும் தகவல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.
இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் ஒருவர் கோவிந்தா (Govinda). நடிகர் என்பதை கடந்து, அரசியல்வாதி என்ற முகமும் கோவிந்தாவிற்கு உள்ளது. இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அது தவறுதலாக வெடித்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் கோவிந்தாவின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சூழலில், கோவிந்தாவின் மகளும் (Daughter), காஸ்ட்யூம் டிசைனருமான டினா அகுஜா (Tina Ahuja) புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video) தற்போது யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

டினா அகுஜா நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, காஸ்ட்யூம் டிசைனர் ஆவார். எனினும் அவர் ஒரு சில திரைப்படங்களில் அரிதாக நடிக்கவும் செய்துள்ளார். இந்த சூழலில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், டினா அகுஜா பார்ப்பதற்கு நடிகை போல் இருப்பதால், நடிப்பில் தீவிரம் காட்ட வேண்டும் என 'கமெண்ட்' செய்து வருகின்றனர்.
டினா அகுஜா வாங்கியிருப்பது, பிஎம்டபிள்யூ ஐ5 (BMW i5) கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஒரே ஒரு வேரியண்ட்டில் (Variant) மட்டுமே இந்த கார் கிடைத்து கொண்டுள்ளது. அது எம்60 எக்ஸ்டிரைவ் (M60 xDrive) ஆகும். இந்த வேரியண்ட்டைதான், டினா அகுஜா வாங்கியுள்ளார்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் விலை 1.25 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரில், 81.2 kWh பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 516 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் என்பதால், அதற்கு ஏற்ப ஏராளமான அதிநவீன வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
இதில், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் பிரபல மனிதர்கள் எல்லாம், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத எலெக்ட்ரிக் கார்களை வாங்குவது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம் ஆகும். ஏனெனில் பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்களை பிரபலமாக்க இது உதவி செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








