37 வருடம் ஒன்றாக வாழ்ந்த மனைவியை விவகாரத்து செய்யப்போகும் நடிகர் இவ்வளவு காஸ்ட்லி காருக்கு சொந்தகாரரா?
பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் குறித்த செய்திகள் தற்போது அதிகம் வலம் வருகின்றன, குறிப்பாக அவரது மனைவி சுனிதாவை விட்டுப் பிரிந்ததாகக் கூறப்படும் வதந்திகள் குறித்து தற்போது பாலிவுட் வட்டாரம் அதிகம் பேசி வருகிறது. இந்த யூகத்தின் மத்தியில், கோவிந்தாவின் சொத்து குறித்தும், குறிப்பாக அவரது பல டாப் மாடல்களை கொண்ட கார்களின் கலெக்ஷன் குறித்தும் மக்கள் அதிகம் தேடி வருகிறார்கள். கோவிந்தாவுக்கு சொந்தமான வாகனங்களில் ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் மற்றும் மெர்சிடிஸ் C220D ஆகிய கார்கள் உள்ளன இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்
பாலிவுட்டில் பிரபலமான நடிகர் கோவிந்தா இவர் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்னர் சுனிதா என்பவரை மணந்தார். இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட காலமாக இனிமையாக இருந்து வந்தது. நீண்டகாலமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலுடன் இருந்து வந்தனர். இந்நிலையில் தற்போது இருவரும் பிரியப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இந்த செய்தி தற்போது பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில் பலர் இவர்களின் சொத்துக்கள் குறித்தும் பேசி வருகின்றனர்.

கோவிந்தாவுக்கு சொகுசு மற்றும் அதிக செயல்திறன் இரண்டையும் வழங்கும் வாகனங்கள் மீது விருப்பம் உள்ளது என்பது பல்வேறு கார் கலெக்ஷனில் தெளிவாகிறது. ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் மற்றும் மெர்சிடிஸ் C220D போன்ற கார்களை இவர் சொந்தமாக வைத்திருக்கிறார். இது விலைகள் மற்றும்அதிக திறன்களை வெளிப்படுத்தும்.
எடுத்துக்காட்டாக, டெல்லியில் ஹூண்டாய் கிரெட்டாவை 12.82 இலட்சம் ரூபாய் முதல் 23.93 இலட்சம் ரூபாய் வரை ஆன்-ரோடுவிலையில் வாங்கலாம், இது வேரியன்டை பொறுத்து, 17.4 முதல் 21.8 kmpl வரை மைலேஜ் தரும் காராக உருவாக்கப்பட்டுள்ளது, டிரைவிங் ஸ்டைலை பொருத்து மைலேஜ் விபரம் மாறுபடும்.

வலிமை மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் 33.78 இலட்சம் ரூபாயில் தொடங்குகிறது, அதன் பிரீமியம் மாடல் 51.94 இலட்சம் ரூபாயில் விற்பனையாகி வருகிறது. இது எரிபொருள் வகை மற்றும் குறிப்பிட்ட வேரியன்டை பொறுத்து 11 முதல் 14 கிலோமீட்டர் / லிட்டர் மைலேஜை உறுதியளிக்கிறது. அதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான ஃபோர்டு எண்டெவர் 50 இலட்சம் ரூபாய் அளவில் விற்பனையானது, வேரியன்ட் மற்றும் மாடல் விவரக்குறிப்புகளைப் பொறுத்து 10.6 முதல் 14.2 kmpl வரை மைலேஜை வழங்குகிறது.
கோவிந்தாவின் சேகரிப்பில் மிகவும் பிரபலமானது 60.30 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் C-Class C 220d கார் ஆகும். இந்த மைல்டு ஹைப்ரிட் வாகனம் எலெக்ட்ரிக் மற்றும் டீசல் சக்தியை இணைத்து, ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன் உடன் கிடைக்கிறது, இது செயல்திறன் மற்றும் ஆடம்பரத்தின் கலவையாக இருப்பதனால் தனித்து நிற்கிறது. இந்த வாகனங்கள் கோவிந்தாவின் வாழ்க்கையின் ஆரம்பரத்தை பிரதிபலிக்கும் போது, அவை தற்போதைய விவாகரத்து வதந்திகளின் மத்தியில் அவற்றின் எதிர்காலத்தைப் பற்றிய ஆர்வத்தையும் எழுப்புகின்றன.

கோவிந்தா மற்றும் சுனிதாவின் விவாகரத்து உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த ஆடம்பர வாகனங்களின் உரிமை எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பொதுவாக, சட்ட அமைப்பு இந்த சொத்துக்களின் பிரிவை தீர்மானிக்கும், முக்கிய அளவுகோல் கார் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கும். இந்த விதி, பதிவு ஆவணங்களில் யார் பெயர் இருந்தாலும், விவாகரத்துக்குப் பிறகு வாகனத்தின் உரிமையை அவருக்கே வழங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோவிந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில், அவருடைய கார் கலெக்ஷன் அவரது வாழ்க்கை முறை மற்றும் ஆப்ஷன்களை பற்றி நிறைய பேசுகிறது. பிராக்டிக்கல் மற்றும் ஸ்டைலான ஹூண்டாய் கிரெட்டாவிலிருந்து ஆடம்பரமான மெர்சிடிஸ் C220D வரை, அவரது கேரேஜில் உள்ள ஒவ்வொரு காரும் அதன் தனித்துவமான ஈர்ப்பைக் கொண்டுள்ளது. அவரது திருமண நிலை பற்றி பொதுமக்கள் பேசி வரும் நிலையில், இந்தப் கார்களின் எதிர்காலம் சட்ட நடவடிக்கைகள் மற்றும் பதிவு விவரங்களைப் பொறுத்து உரிமை கொண்டாட அனுமதிக்கப்படும்


Click it and Unblock the Notifications









