பெட்ரோல், டீசல் செலவு இருக்காது!! பல கிமீ தொலைவிற்கு எலக்ட்ரிக் கேபிள் - மத்திய அரசின் ஸ்மார்ட் ஐடியா!

டெல்லி (Delhi) - ஜெய்பூர் இடையேயான தொலைவை வெறும் 2 மணிநேரங்களில் கடந்துவிடக் கூடிய வகையில் நெடுஞ்சாலையில் எலக்ட்ரிக் கேபிள் போக்குவரத்து சேவையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலமாக, ஜெய்பூரில் இருந்து தலைநகர் டெல்லியை அடையும் பயண நேரம் வெகுவாக குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது.

நாட்டிற்குள் போக்குவரத்தை எவ்வாறு பசுமையானதாக மாற்றுவது என்பதை யோசிக்கும் அதேநேரம், வாகனங்களின் பயண நேரத்தை எவ்வாறு விரைவுப்படுத்துவது என்பதையும் மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. இதன் ஒரு முயற்சியாகவே, டெல்லி - ஜெய்பூர் இடையே எலக்ட்ரிக் கேபிள் போக்குவரத்து சேவையை கொண்டுவர மத்திய அரசு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

govt brings electric cable highway

இதற்கான வேலைகளில் ஏற்கனவே மத்திய அரசு இறங்கிவிட்டதாக கூறும் மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய போக்குவரத்து அமைச்சகம் விரைவில் எலக்ட்ரிக் கேபிள் நெடுஞ்சாலை போக்குவரத்து சேவையை கொண்டுவருவதாகவும், இதன் மூலமாக எலக்ட்ரிக் ஆற்றலை வாகனங்களுக்கு வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த எலக்ட்ரிக் கேபிள் சேவை பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் டெல்லி- ஜெய்பூர் இடையேயான தொலைவை வெறும் 2 மணிநேரங்களில் கடந்துவிடலாம். இந்த புதிய திட்டம் குறித்து மேலும் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, இது பயண நேரத்தை குறைப்பது மட்டுமின்றி, செலவாகும் எரிபொருளின் அளவையும் கணிசமாக குறைக்கும் என நம்பிக்கை உடன் தெரிவித்துள்ளார்.

govt brings electric cable highway

இந்த கேபிள் சேவை முக்கியமாக எலக்ட்ரிக் பேருந்துகளுக்காக கொண்டுவரப்படுகிறது. எலக்ட்ரிக் பேருந்துகளில் 30% எரிபொருள் செலவை இதன் மூலமாக குறைக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது. அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்து பேசுகையில், "டெல்லியில் இருந்து மீரட்டை 45 நிமிடங்களில் கடந்துவிடலாம் என நாங்கள் கூறிய போது ஊடகவியலாளர்கள் சிரித்தனர்.

இன்று, மீரட்டில் இருந்து டெல்லிக்கு ஐஸ் க்ரீம் சாப்பிடுவதற்காக வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், ஜெய்பூரில் இருந்து மக்களை ஐஸ் க்ரீன் சாப்பிடுவதற்காக டெல்லிக்கு அழைத்துவரவும், டெல்லி மக்களை கச்சோரி சாப்பிடுவதற்காக ஜெய்பூருக்கு அழைத்துவரவும் விரும்புகிறேன். நாட்டின் மக்கள் தங்களது முழு ஆதரவை பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கினால் இது நிஜமாக வாய்ப்புள்ளது" என்றார்.

govt brings electric cable highway

எலக்ட்ரிக் கேபிள் நெடுஞ்சாலைகள் மிகவும் ஸ்மார்ட்டான ஐடியா என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வகை போக்குவரத்தில் வாகனங்களை இயக்க எலக்ட்ரிக் ஆற்றல் பயன்படுத்தப்படும். இந்த எலக்ட்ரிக் ஆற்றலை வழங்க வாகனங்களுக்கு மேலே எலக்ட்ரிக் கேபிள் வழங்கப்படும். இந்த அமைப்பானது கிட்டத்தட்ட இரயில் போக்குவரத்தை போன்றதே.

ஆனால், இரயில் போக்குவரத்தில் இரயில் என்ஜின் & பெட்டிகள் தண்டவாளத்தில் இயக்கப்படும். ஆனால், எலக்ட்ரிக் கேபிள் நெடுஞ்சாலையில் வாகனங்கள் வழக்கம் போல் சாலையில் இயக்கப்படும். இந்த வகை போக்குவரத்து முதன்முறையாக 2019ஆம் ஆண்டில் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நாட்டில் ஏற்கனவே எலக்ட்ரிக் கேபிள் நெடுஞ்சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

govt brings electric cable highway

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில், இவ்வாறான போக்குவரத்தை முன்னர் காலத்தில் கூறியிருந்தால், நிச்சயமாக எவர் ஒருவரும் ஏற்றுக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஏனெனில், இந்த போக்குவரத்தில் நிறைய குறைப்பாடுகள் இருக்கும் என நினைத்திருப்பர். ஆனால் இன்றோ, தொழிற்சாலையில் இவ்வாறான வாகன போக்குவரத்து சாத்தியமாகி உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியாது என்கிற குறையை எலக்ட்ரிக் கேபிள் போக்குவரத்து தவிர்க்கும்.

Note: Images are representative purpose only.

More from DriveSpark

Article Published On: Monday, November 20, 2023, 15:32 [IST]
English summary
Govt brings electric cable highway on delhi jaipur route check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X