ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெறும் ரூ. 3 கோடி வருவாய் ஈட்டுவதற்காக பொதுமக்களின் தரவுகளை விற்பனைச் செய்ததாக தகவல்கள் வெளியாகியது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

உங்களைப் பற்றிய அனைத்து தகவலையும் அறிந்த ஒரு டெலிமார்க்கெட்டர், உங்களை இன்னும் ஒரு சில தினங்களில் அழைக்கலாம். அதில், நீங்கள் ​​ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், வாகன பதவி மற்றும் ஓட்டுநர் உரிமத்தின்போது, உங்களைப் பற்றி நீங்கள் வழங்கிய அனைத்து தகவல்களையும் இந்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனைச் செய்யத் தொடங்கியுள்ளது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

இதனை வருவாய் ஈட்டும் விதமாக இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த மசோதாவிற்கான ஒப்புதல் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. மேலும், பாராளுமன்றத்தின் மேல் சபையில் சமீபத்தில் நடைபெற்ற அமர்வில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி, வாகன பதிவு தரவுகளை விற்பனை செய்து வருமானம் ஈட்டும் திட்டத்தை தொடங்கியிருப்பதாக அறிவித்திருந்தார்.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

இந்நிலையில், ஏற்கனவே 87 தனியார் நிறுவனங்கள் மற்றும் 32 அரசு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் வாஹன் மற்றும் சாரதி ஆகிய தகவல் சேகரிப்பு தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக இந்தியா டுடே ஆங்கில செய்தி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

வாஹன் மற்றும் சாரதி ஆகிய இரு தளங்களும், நாடு முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களால் பராமரிப்பு மற்றும் தகவல்கள் சேகரித்தல் செய்யப்பட்டு வருகின்றது. இத்திட்டமானது முதல்முறையாக கடந்த 2011ம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருந்து வருகின்றது. ஆகையால், தற்போது நாட்டில் இயங்கும் அனைத்து இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் குறித்த தகவலையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதில், வாஹன் என்பது வாகனங்கள்குறித்த அனைத்து தகவல்களையும், சாரதி என்பது ஓட்டுநர் உரிமத்தின்போது வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

அவ்வாறு, வாஹன் மென்பொருளில் வாகனம் பதிவு செய்தல், வரி, ஃபிட்னஸ், அமலாக்கம் (செல்லாண்) மற்றும் பெர்மிட் உள்ளிட்ட தகவலையும், சாரதி தரவுத்தளம் ஓட்டுநர் உரிமங்கள், கட்டணம், நடத்துனரின் உரிமம் மற்றும் சில விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கின்றது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

தற்போது, இந்த அனைத்து தகவல்களையும்தான் இந்திய அரசு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விற்பனைச் செய்து வருகின்றது. இவ்வாறு, விற்பனைச் செய்ததில் இதுவரை மத்திய அரசு எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளது என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

இருப்பினும், இந்த தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள, மத்திய அரசு ரூ. 3 கோடி கட்டணமாக வசூலிப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இதுவரை ரூ.65 கோடி வரை வருவாய் ஈட்டியிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

அதேசமயம், இதனை 87 தனியார் நிறுவனங்களும், 32 அரசு நிறுவனங்களும் தற்போது பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

அதேபோன்று, இந்த இரு தகவல் தளங்களிலும் எவ்வளவு எண்ணிக்கையிலான தரவுகள் இருக்கின்றன என்ற தகவலும் முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால், வாஹன் தளத்தில் சுமார் 25 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்களின் தகவல்கள் இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இதேபோன்று, சாரதி தளத்திலும் சுமார் 15 கோடி ஓட்டுநர் உரிமதாரர்களின் தகவல்கள் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

இதுகுறித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அவர் கைப்பட மடல் ஒன்றை எழுதி மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில், "மொத்த தரவு பகிர்வு கொள்கை மற்றும் செயல்முறை திட்டம், அரசின் வாஹன் மற்றும் சாரதி தகவல்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கின்றது. இத்திட்டத்தின்முலம், 2019 மற்றும் 2020 நிதியாண்டு வரை ரூ. 3 கோடி செலுத்தி தரவு பயன்படுத்திக் கொள்ளலாம். கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் உள்பயன்பாட்டிற்காக அணுகினால் சிறப்பு சலுகையில் குறைவான தொகையில் இதற்கு அனுமதி வழங்கப்படும். அவ்வாறு, ரூ. 5 லட்சம் என்ற தொகையில், அதே காலக்கெடுவுடன் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும்.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

இந்த புதிய தரவு தளங்கள் தேசிய குற்றப் பிரிவு பணியகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, வாகன திருட்டு மற்றும் வாகனம் சார்ந்த குற்றச் சம்பவங்களின்போது போலீஸாருக்கு உதவியாக இருக்கும்" என அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

மத்திய அரசின் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகள், இத்திட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால், அதற்கு அமைச்சர் நிதின் கட்காரி பதிலளிக்கவில்லை என கூறப்படுகின்றது.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கையின்மூலம், வாகனம் பற்றிய அனைத்து தகவலையும் உள்ளடக்கிய 28 துறைகளின் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இதில், வாகனத்தின் பதிவு எண், வாகனத்தின் முகவரி, கடன் விவரங்கள், காப்பீட்டு விவரங்கள் மற்றும் காரைப் பற்றிய பல முக்கியமான தகவல்களும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, ஓட்டுநர் உரிமத்தின்போது வழங்கிய தனிநபரின் புகைப்படமும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

இதனால், வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் பலரின் தகவல்கள் எந்தவொரு பாதுகாப்புமின்றி தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த தரவுகளை வாங்கும் தனியார் நிறுவனங்கள், பல வழிகளில் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

ரூ. 3 கோடிக்காக இந்தியர்களின் தகவல்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசு...

அதேபோன்று, மத்திய அரசின் இத்திட்டத்தின்மூலம், உற்பத்தியாளர்கள் கூட, ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர்குறித்த அனைத்து தகவலையும் அறிந்துகொள்வதற்கும், அவரை குறிவைப்பதற்கும், தரவுகள் வாங்கப்படலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தங்கள் சொந்த நலனுக்காக தரவுகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்து முழுமையான தகவல் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Govt Selling Vehicle & DL Data Of Indians For Rs 3 Crore. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X