ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு... "இனி கரெக்ட்டா இருந்துக்கங்க" என எச்சரிக்கை..
ஓலா உபேர் போன்ற கார்ப்பரேட்கால்டாக்ஸி நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை மாற்ற சொல்லி நுகர்வோர் விவகாரத்துறை நடத்திய கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்

இந்தியாவில் பெருநகரங்களில் வாழும் மக்கள் மத்தியில் கார்ப்பரேட் கால் டால்சிகளின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. அந்நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு செல்போன் ஆப்களை கொடுத்து அதன் மூலம் அவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வாடகை கார்களை புக் செய்யும் வசதியை வழங்குகின்றனர்.

வாடகை கார்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் கார்களை அந்நிறுவனத்துடன் இணைப்பது மூலம் மக்கள் ஆப்பில் புக் செய்யும் போது வாடகை கார் டிரைவர்கள் அவர்களுக்கான சவாரியை பெறுகின்றனர். இந்த சவாரிக்கான தொகையையும் அந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிவு செய்து நேரடியாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கிறது. அந்த பணத்தில் தனக்கான கமிஷனை எடுத்துக்கொண்டு மீதம் உள்ள பணத்தை கார் ஓட்டுநர்களுக்கு வழங்குகிறது.

இப்படியாக இந்நிறுவனத்தின் வாடகை கார் பயணங்களை எளிதாகவும், விலை மலிவாகவும் வழங்கியதால் வாடிக்கையாளர்கள் பலர் இந்த ஆப்பை டவுண்லோடு செய்து பயன்படுத்த துவங்கினர். அதிகமான புக்கிங் கிடைத்ததால் பல வாகன ஓட்டுநர்களும் தங்கள் கார்களை இந்த நிறுவனங்களுடன் இணைக்க துவங்கினர்.

இந்நிலையில் இந்நிறுவனம் பயணத்திற்கான கட்டணத்தை ஃபுளோட்டிங் முறையில் வசூலிக்க துவங்கியது. கட்டணம் சராசரியாக எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் வாடகை காரை பயன்படுத்தியுள்ளோம் என்பதை வைத்து நிர்ணயம் செய்தாலும், அந்நிறுவனம் அதிக பயன்பாடு உள்ள நேரங்களில் வாடகை தொகையை உயர்த்தி வசூலிக்க துவங்கியது.

உதாரணமாக காலை 8-10 மணிக்கு அதிகமான மக்கள் புக்கிங் செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வழக்கத்தை விட அதிக பணம் வசூலிக்கப்படுகிறது. இந்த விவகாரம் ஏற்கனவே சர்ச்சையாக இருக்கும் நிலையில் அடுத்தடுத்து இந்நிறுவனங்கள் குறித்து பல புகார்கள் எழுந்து வந்தன.

இதில் மிக முக்கியமான புகார் இந்த ஆப் மூலம் புக்கிங் செய்யப்பட்டவுடன் புக்கிங் செய்தவரின் போன் நம்பரும், வாடிக்கையாளரின் போன் நம்பரும் பரஸ்பரம் பகிரப்படும். இந்நிலையில் காரின் டிரைவர்கள் வாடிக்கையாளருக்கு போன் செய்து எங்கு பிக்கப் செய்ய வேண்டும் எங்கு டிராப் செய்ய வேண்டும் போன்ற தகவலை கேட்டுவிட்டு, பயணத்திற்கான பணத்திலிருந்து அதிக பணம் வேண்டும், அல்லது பயணத்திற்கான பணத்தை நேரடியாக கார்ப்பரேட்நிறுவனங்ளுக்கு கொடுக்காமல் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

இந்த கோரிக்கையை வாடிக்கையாளர்கள் நிரகரிக்கும் நிலையில் அவர்கள் அந்த புக்கிங்கை கேன்சல் செய்துவிடுகின்றனர். வாடிக்கையாளர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவசரமாக செல்ல இந்த காரை புக் செய்யும் நிலையில் அவர்களின் அவசரத்தை பயன்படுத்தி கார் ஓட்டுநர்கள் சட்ட விரோதமாக சம்பாதிப்பதாக புகார்கள் எழுந்தது.

இப்படியாக பல பிரச்சனைகள் குறித்து நுகர்வோர் விவகாரத்துறையிடம் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அந்த துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் சமீபத்தில் இந்த புகார்களுக்கு தீர்வு காண இத்துறை சார்ந்த நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சு வார்த்தையில் ஒலா, உபேர், மெரு, ரேப்பிடோ போன்ற ஆன்லைன் மூலம் போக்குவரத்தை நடத்தும் பல நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த பேச்சுவார்த்தையின் போது நுகர்வோர் துறைக்கு வந்த புகார்களின் பட்டியலை அவர்களிடம் கொடுத்த அதிகாரி இந்த பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காணும்படியும். இதற்கான நடவடிக்கைகளை நிறுவனங்களே எடுக்காவிட்டால் அந்த நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளார்.

மேலும் நியாமற்ற முறையிலான கட்டண நிர்ணயத்தை நுகர்வோர் துறையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதை அனைத்து நேரங்களிலும் ஒரே கட்டணமாக வைக்க வேண்டும் என பேசியுள்ளனர். இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு கார்ப்பரேட் கால்டாக்ஸி நிறுவனங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கால்டாக்ஸி டிரைவர்கள் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக அவர்களை பணம் தரச் சொல்லி கேட்பதற்கு கார்ப்பரேட் கால்டாக்ஸி நிறுவனங்கள் இவர்களுக்கு பணம் வழங்க கால தாமதம் செய்வது முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது.

அதே போல தற்போது பெட்ரோல் டீசல் விலை மற்றும் கார் பராமரிப்பு செலவுகள் அதிகரித்துவிட்ட நிலையில் கட்டணம் ஒரே மாதிரியாக இருப்பது தற்போது அவர்களுக்கு கட்டுப்படியாகவில்லை அதனால் சில டிரைவர்கள் அதிக பணம் கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. நுகர்வோர் துறையின் இந்த பிரச்சனைக்கு விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பலாம்


Click it and Unblock the Notifications








