டிக்டாக் புகழ் ஜிபி முத்து இத்தன லட்ச ரூபா காரை வாங்கி இருக்காரா! பிக்-பாஸ்க்கு அப்புறம் செம்ம மாற்றம்!
டிக்டாக் என்கிற ஒற்றை செயலி பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? அதை உருவாக்கிய சீன நிறுவனம் மட்டுமில்லைங்க, அந்த செயலியைப் பயன்படுத்திய பலரும் அதனால் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையை அடைந்திருக்கின்றனர். இதற்கு மிக சிறந்த உதாரணமாக பிரபல யுட்யூபராக மாறி இருக்கும் ஜிபி முத்து-வைக் கூறலாம்.
இவர் வெளி உலகிற்கு தெரிய வந்ததே இந்த செயலியின் வாயிலாகதான். ஆனால், இந்த செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதனால் செய்வதறியாது தவித்து வந்தவருக்கு உதவும் விதமாக ரீல்ஸ் எனும் தனி வசதியை இன்ஸ்டாகிராம் செயலி அறிமுகப்படுத்தியது. டிக்டாக் பயன்பாட்டாளர்கள் பலருக்கு வரபிரசாதமாக இது அமைந்தது.

இந்த தளத்திலும் ஒரு கை பார்க்க ஆரம்பித்துவிட்டார், ஜிபி முத்து. இதற்கிடையிலேயே பிக் பாஸ் சீசன் 6 இல் பங்கேற்பும் வாய்ப்பு ஜிபி முத்துவிற்குக் கிடைத்தது. இதன் பின்னர் இவரின் புகழ் இன்னும் பலமடங்கு அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். ஓர் திரைப்படத்தில் கூட அவர் நடித்திருக்கின்றார்.
இந்த நிலையிலேயே, ஜிபி முத்து விலை உயர்ந்த கார் மாடல் ஒன்றை தற்போது வாங்கி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை ஜிபி முத்துவும் உறுதி செய்திருக்கின்றார். அவர் ஓர் யுட்யூப் சேனலை நடத்திக் கொண்டிருக்கின்றார். அந்த சேனலில் ஓர் வீடியோவை வெளியிட்டு அதன் வாயிலாக அவர் இந்த தகவலை உறுதி செய்திருக்கின்றார்.

கியா நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றான கேரன்ஸ் எம்பிவி ரக காரையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்த காரில் ஆறு முதல் ஏழு பேர் வரை மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அளவு அதிக இருக்கை தன்மையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அந்த காரை அவர் வாங்கி இருக்கின்றார்.
முன்னதாக வைத்திருந்த காரில் அவரால் குடும்பத்துடன் பயணிக்க முடியவில்லை என்றும், குடும்பத்துடன் பயணிக்க வேண்டியே கியா கேரன்ஸ் காரை தான் வாங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கின்றார். அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் குடும்பங்களைக் கவரும் நோக்கில் கியா கொண்டு வந்த காரே கேரன்ஸ் ஆகும்.

இந்த கார் அதிக இருக்கைகளை மட்டுமல்ல அதிக சிறப்பு வசதிகளையும் தாங்கிய வாகனமாக இருக்கின்றது. இந்த காரை எம்பிவி ரக வாகனமாக கியா உருவாக்கி இருந்தாலும் அதன் தோற்றம் எஸ்யூவி கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருந்தது. அந்தவகையில், நாட்டின் மிக முக்கியமான எஸ்யூவி கார்களாக காட்சியளிக்கும் டாடா சஃபாரி , மஹிந்திரா 700 மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் உள்ளிட்ட கார்களுக்கு இதன் வருகை போட்டியாக அமைந்துள்ளது.
கியா கேரன்ஸ் ஆறு மற்றும் ஏழு ஆகிய இரு விதமான இருக்கைகள் தேர்விலும், ஐந்து விதமான வேரியண்டுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆறு இருக்கை தேர்வானது லக்சூரி ப்ளஸ் ட்ரிம்மில் மட்டுமே கிடைக்க இருக்கின்றது. அதிக சொகுசு வசதிகளை விரும்புவோர்களை ஈர்க்கும் பொருட்டு இந்த உயர்நிலை தேர்வில் மட்டும் ஆறு இருக்கை வழங்கப்பட இருக்கின்றது.
கேரன்ஸ் எம்பிவி ப்ரெஸ்டீஜ், ப்ரெஸ்டீஜ் ப்ளஸ், லக்சூரி, லக்சூரி ப்ளஸ் ஆகிய ஐந்து ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அனைத்து வேரியண்டுகளிலும் ஏழு இருக்கை தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பன்முக நிற விருப்ப தேர்வுகளும் வழங்கப்பட இருக்கின்றது.
64 நிறங்கள் கொண்ட ஆம்பியண்ட் மின் விளக்கு, 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்டது), 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஓடிஏ மேப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர, மூன்றாவது வரிசை இருக்கையாளர்களும் எளிதில் பயனடையும் வகையில் ஏசி துவாரங்கள், மிக சிறந்த மற்றும் அதிக சௌகரியமான வசதிகள் கொண்ட இருக்கை உள்ளிட்டவை கேரன்ஸில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த இருக்கை அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் வசதியையும் கொண்டிருக்கின்றது. பாதுகாப்பு அம்சங்களுக்காக மிக உறுதியான ஸ்டீல் இக்காரை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்துடன், ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராக்கள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், டவுன்ஹில் பிரேக்கிங் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஐசோஃபிக் சைல்டு சீட்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
கேரன்ஸ் காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக ஏர் ப்யூரிஃபையர், ஏர் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் (முன் பக்கத்தில்) கியா கேரன்ஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர கார் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கியா கேரன்ஸ் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிபி முத்து இப்போது மிகப் பெரிய யுட்யூப் பிரபலமாக மாறி இருக்கின்றார். இவருக்கு 1.60 மில்லியன்களுக்கும் அதிகமான ஃபாலோவர்கள் யுட்யூபில் இருக்கின்றனர். இந்த நிலையிலேயே யுட்யூப் வருமானத்தில் சற்று விலை உயர்ந்த காரான கேரன்ஸை வாங்கி இருக்கின்றார். இதன் விலை ஆரம்ப விலை ரூ. 10.45 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications









