விபத்தில் சிக்கிய ஜிபி முத்து கார்! 20 லட்ச ரூபாய் காருக்கு என்ன ஆச்சு தெரியுமா?
பிரபல யூட்யூபர் ஜி பி முத்து சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. வாகன விபத்தின் போது ஏற்படும் ஒரு முக்கியமான சிக்கல் குறித்து இவர் பேசியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகத்தில் பிரபல யூடியூபராக இருப்பவர் ஜி பி முத்து. இவரது வெகுளித்தனமே இவரை மிகப்பெரிய பிரபலமாக மாற்றியது. சமூக வலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு பின்னர் டிவி மீடியாவிற்கு சென்று தற்போது சினிமாக்களில் கூட இவர் நடித்து வருகிறார். தற்போது இவரை சாலையில் பார்த்தாலே பலர் இவருடன் செல்பி எடுக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். இன்றும் இவர் டிவி நிகழ்ச்சிகள் சினிமாக்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் கியா நிறுவனத்தின் கேரன்ஸ் காரை சொந்தமாக வாங்கினார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடக்கும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு இவர் கலந்து கொண்டார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாமல் பாதியிலேயே இவர் வெளியேறினார். நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறினாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்றது. இவருக்கு பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் டிவி நிகழ்ச்சி வாய்ப்புகள் எல்லாம் வந்தன. இதனால் இவர் வாழ்க்கையை மேம்படுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கியா நிறுவனத்தின் கேரன்ஸ் காரை வாங்கினார். இந்நிலையில் இவர் தனது காரில் குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு பாலத்தின் அருகே காரை நிறுத்தி தனது சொந்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது வழியாக பைக்கில் வேகமாக வந்த நபர் ஒருவர் தெரியாமல் இவருக்கு காரில் மோதி விட்டனர். இதனால் இவரது காருக்கும் பைக்கில் வந்த நபருக்கும் பலத்தை சேதம் ஏற்பட்டது. பைக்கில் வந்தவர் குழந்தையுடன் வேறு வந்திருந்தார். அவர் வேகமாக வந்து காரின் பின்புறத்தில் மோதியதில் பைக்கில் வந்தவர்கள் கீழே விழுந்தனர்.
இதனால் பதறிப்போன ஜிபி முத்து உடன் பயணித்த நபர்கள் காரில் இருந்து இறங்கி விபத்தில் சிக்கியவர்களுக்கு என்ன நேர்ந்தது என பார்த்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. ஜிபி முத்துவின் காரும் அவர்களது பைக்கும் லேசான சேதம் மட்டுமே ஆகியிருந்தது.

பைக்கில் வந்தவரும் தனது மீதுதான் தவறு என்பதை ஒப்புக்கொண்டதாக ஜிபி முத்து கூறுகிறார். ஆனால் இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த மக்கள் கூட்டமாக கூடி இந்த சம்பவத்தை பெரும் பிரச்சனையாக்க முயற்சி செய்துள்ளனர். இதை ஜிபி முத்து ஒரு விளக்கமாக தனது வீடியோவில் வெளியிட்டுள்ளார். விபத்தில் சம்பந்தப்பட்ட இருவருமே சமாதானமான பிறகும், சம்பவத்தை பார்த்தவர்கள் இதை ஒரு பிரச்சினையாக மாற்ற வேண்டும் என கருதி இதை செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.
தனது கார் விபத்தில் சிக்கியது குறித்து அவர் பேசி வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் இந்த வீடியோவின் மூலம் நாம் விழிப்புணர்வு அடைய வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. நீங்கள் சாலையில் செல்லும்போது வாகனம் விபத்தில் சிக்கிவிட்டால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் உதவ வேண்டும் யார் மீது தவறு என்பதை பின்னர் பேசி தீர்த்துக் கொள்ளலாம் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிச்சய உதவி தேவை.
விபத்து குறித்து நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தும்போது நிச்சயம் விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதில் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் போலீசார் மட்டுமே இதில் பங்கேற்கும்படி நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். வெளிநபர்கள் இது தலையிடும் பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு தேவையில்லாத பிரச்சனையை இழுத்து விட வாய்ப்புள்ளது. இதன் மூலம் அவர்கள் லாபமடையவும் திட்டமிட வாய்ப்புள்ளது.
இதனால் நீங்கள் சாலையில் செல்லும்போது உங்கள் வாகனம் விபத்தில் சிக்கினால் உங்கள் வாகனத்துடன் விபத்தில் சிக்கிய வாகனத்தின் உரிமையாளர் அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பதை அறிந்து அவர்களுடன் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மற்றவர்களை இதில் நுழைக்க முயற்சி செய்யக் கூடாது. இதனால் பெரும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிபி முத்து விஷயத்தில் சில நபர்கள் தலையிட்டு பிரச்சனையை பெரிதாக்க நினைத்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் சமாதானமாக பேசி விட்டதால் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் சமாதானம் செய்து கொண்டதால் அவர்களால் லாபம் பெற முடியவில்லை. நீங்கள் விபத்தில் சிக்கினாலும் இதுபோல சாதுரியமாக நடந்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications









