சுங்கசாவடியில் ரூ10,000 கோடி வசூலை அதிகரிக்க செம பிளான்! இப்படி பண்ணுவாங்கனு நினைக்கலயே!
இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளை நீக்கிவிட்டு ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை அமலுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து வருகிறது. தற்போது சர்வதேச அளவில் இதற்கான ஒப்பந்தம் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த செயல்முறை நடைமுறைக்கு வரும்போது ரூ 10,000 கோடி வரை வருமானம் அதிகரிக்கும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவின் முதுகெலும்பு என்றே சொல்லலாம். உள்நாட்டுக்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதற்கு வேகமாக வழியாக அதே நேரம் குறைந்த செலவிலான வழியாக இந்த தேசிய நெடுஞ்சாலைகள் தான் இருக்கிறது. இதனால் இதில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடைசில ஆண்டுகளாக இந்த சுங்க கட்ட வசூல் முறையை ஃபாஸ்ட்டேக் கார்டு மூலம் வசூல் செய்யப்படும் முறையாக மாற்றி தற்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகனங்களில் ஃபாஸ்ட் டேக் முறையில் தான் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஃபாஸ்ட் டேக் கார்டு அறிமுகப்படுத்துவதற்கு முக்கியமான காரணமே சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தான் ஆனால் இது பெரிய அளவில் பலன் தரவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு சுங்கச்சாவடிகளை முழுமையாக நீக்கி விட்டு ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு வாகனம் எந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகளில் வருகிறது. எந்த பகுதி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்கிறது என்பதை கணக்கிட்டு அவர்கள் பயணம் செய்த தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணத்தை வசூல் செய்வதற்கான வழிமுறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இதற்காக சர்வதேச அளவில் ஒப்பந்த புள்ளி கூறப்பட்டுள்ள நிலையில், விரைவில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் செய்து இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை ஒவ்வொரு கட்டங்களாக அமலுக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசும் போது சில முக்கியமான தகவல்களை கூறினார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் சுங்க கட்டண வசூல் முறையில் ஏகப்பட்ட லீக்கேஜ் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதாவது லோக்கல் பகுதியில் இருப்பவர்கள் அல்லது அதிகார அந்தஸ்து படைத்தவர்கள் பலர் சுங்க கட்டணம் செலுத்தாமலேயே சுங்கச்சாவடியை கடந்து செல்கிறார்கள். சட்ட விதிமுறைகள் இல்லாவிட்டாலும் இவர்கள் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கிறார்கள்.

புதிய ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல்முறை வரும்போது இப்படியான வசூல் பாதிப்புகள் எல்லாம் 99 சதவீதம் குறைந்து விடும் என அவர் தெரிவித்தார். இதன்மூலம் இந்தியாவில் உள்ள சுங்க கட்டண வசூல் ரூ10,000 கோடி வரை அதிகமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுங்கச்சாவடிகளில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பேச்சு எழுந்து வந்த நிலையில், தற்போது வசூலை அதிகரிப்பது குறித்து அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறை வரும்போது சுங்கச்சாவடிகளில் இனி வாகனங்களை நிறுத்த வேண்டிய தேவையில்லை. ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கருவிகள் வாகனங்கள் செல்லும் பகுதியை முழுவதுமாக டிராக் செய்து எவ்வளவு தூரம் அந்த வாகனங்கள் பயணம் செய்துள்ளது என்பதை பார்த்து வாகனத்தின் உரிமையாளரின் வங்கி கணக்கிலிருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்த விரிவான விபரங்கள் எல்லாம் தனியார் நிறுவனமும் அரசும் சேர்ந்து தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்ற முடிவை எடுத்த பின்பு தான் நமக்கு முழுமையாக தெரியவரும். இதற்கான ஆய்வுகளை தற்போது மத்திய அரசு துவங்கியுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் எல்லாம் தெரியவரும் ஆனால் முக்கியமாக சுங்கச்சாவடிகளில் நிறுத்த வேண்டிய தேவை மட்டும் இருக்காது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்கிவிட்டு ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறையை கொண்டு வருவது நிச்சயம் மக்களுக்கு நல்ல பலனைத் தரும். அதே நேரம் சுங்கச்சாவடிகளுக்கு அரசால் அதிகம் செலவு செய்ய வேண்டிய தேவை இருக்காது. இந்த செலவின் பலனை மக்களுக்கு சுங்க கட்டண குறைப்பில் கொண்டு வந்து மக்களுக்கு பலனை தர வேண்டும்.


Click it and Unblock the Notifications









