இதை செய்யாத அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது.. முறைகேட்டை தடுக்க முதல்வர் அதிரடி

அரசாங்க வாகனங்களை அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு அதிரடியான உத்தரவுகளை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார்.

அரசாங்க வாகனங்களை அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு அதிரடியான உத்தரவுகளை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதை செய்யாத அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது.. முறைகேட்டை தவிர்க்க முதல்வர் அதிரடி

அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் டெல்லி மாநில அதிகாரிகள் சிலர், அரசு வழங்கிய வாகனங்களை, முறைகேடாக பயன்படுத்தி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இதை செய்யாத அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது.. முறைகேட்டை தவிர்க்க முதல்வர் அதிரடி

ஒரு சில துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தி வருவதாகவும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம், நேரடியாக புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே முறைகேடுகளை தவிர்ப்பதற்காக பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதை செய்யாத அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது.. முறைகேட்டை தவிர்க்க முதல்வர் அதிரடி

இதன்படி ஒரு அரசு அதிகாரி, ஒரு அரசாங்க வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதுதான் முதலாவது உத்தரவு. கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதை காரணம் காட்டி, ஒன்றுக்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்களை பயன்படுத்த கூடாது.

இதை செய்யாத அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது.. முறைகேட்டை தவிர்க்க முதல்வர் அதிரடி

இரண்டாவது உத்தரவு ஜிபிஎஸ். அரசு அதிகாரிகள் பயன்படுத்தி வரும் வாகனங்கள் அனைத்திலும், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள், ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அக்டோபர் 1ம் தேதி முதல், அந்த வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்படாது.

இதை செய்யாத அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது.. முறைகேட்டை தவிர்க்க முதல்வர் அதிரடி

எனவே அதிகாரிகள் பயன்படுத்தி வரும் அனைத்து அரசு வாகனங்களிலும், செப்டம்பர் 30ம் தேதிக்கு உள்ளாக, ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தி விடும்படி, அனைத்து துறைகளின் தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்தான் பிறப்பித்துள்ளார்.

இதை செய்யாத அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது.. முறைகேட்டை தவிர்க்க முதல்வர் அதிரடி

முதலில் இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதனை நிராகரித்து விட்டார். ஜிபிஎஸ் டிவைஸ் பொருத்தப்படுவதன் மூலமாக, அரசு அதிகாரிகள் வாகனங்கள் எங்கெங்கு செல்கிறது? என்பதை எளிதாக கண்காணிக்க முடியும்.

இதை செய்யாத அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது.. முறைகேட்டை தவிர்க்க முதல்வர் அதிரடி

அத்துடன் ஒரு அதிகாரி ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும் இது உதவும். டெல்லி மாநில தலைமை செயலகத்தில், அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பாக, கண்ட்ரோல் அறை ஒன்றை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதை செய்யாத அதிகாரிகளின் வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது.. முறைகேட்டை தவிர்க்க முதல்வர் அதிரடி

அங்கிருந்தபடி அரசு அதிகாரிகளின் வாகனங்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அதிரடி உத்தரவுகள், அரசு அதிகாரிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளன. அதே சமயம் இந்த உத்தரவுகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் லான்ச் செய்த மராஸ்ஸோ காரின் ஆல்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
GPS Device Mandatory For Government Cars From October 1. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X