ஜிபிஎஸ் தகவலை நம்பி சென்ற இளம்பெண்... ஏரியில் பாய்ந்த கார்... !!
தொழில்நுட்பங்கள் எந்தளவு உதவிகரமாக இருந்தாலும், அவை சமயத்தில் பேராபத்தை உண்டு பண்ணி விடுகின்றன. இதற்கு உதாரணமாக, ஜிபிஎஸ் வழிகாட்டு சாதனத்தின் உதவியுடன் கார் ஓட்டிச் சென்ற பெண், பாதை தெரியாமல் குளத்தில் கொண்டு போய் காரை இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், தொழில்நுட்பங்களை பயன்படுத்துகையில் எந்தளவு உஷாராக இருக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது. நடந்தது என்ன என்பதை ஸ்லைடரில் காணாலம்.

சம்பவம்
கனடா நாட்டை சேர்ந்த 23வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன் காரில் சென்று கொண்டிருந்தார். மிக மோசமான சீதோஷ்ண நிலையில், இருளான சமயத்தில் அவர் காரை செலுத்தியிருக்கிறார்.

ஜிபிஎஸ் உதவி...
அவருக்கு அது பரிட்சயமில்லாத சாலை என்பதால், ஜிபிஎஸ் வழிகாட்டு சாதனத்தின் உதவியுடன் அவர் காரை சாலையில் செலுத்தியிருக்கிறார்.

திருப்பம்...
ஒன்டோரியா நகரின் டோபர்மோரி என்ற இடத்தில் வலது பக்கம் அவர் திரும்ப வேண்டியிருந்தது. ஆனால், ஜிபிஎஸ் கருவி கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர் காரை நேராக ஓட்டிச் சென்றதாக தெரிகிறது.

ஏரிக்குள் சென்ற கார்
வலது பக்க திருப்பத்தை விட்டு நேராக சென்றதால், அங்கிருந்த ஜார்ஜியன் ஏரியில் படகு நிறுத்தும் துறையை தாண்டி போய் ஏரியில் பாய்ந்தது. இருளில் அவருக்கு சாலை சரியாக தெரியவில்லை.

ஆழம் அதிகம்
அந்த ஏரி 100 அடி முதல் 500 அடி வரை ஆழமிக்கது. காரில் மின்சாரம் துண்டிப்பதற்குள், ஜன்னலை திறந்து கொண்டு வெளியேறி நீந்தி கரை சேர்ந்துவிட்டார்.

அதிர்ஷ்டவசம்
அவருக்கு இந்த சம்பவத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அந்த ஏரியின் நீர் 4 டிகிரி செல்சியம் வெப்ப நிலையில் இருந்ததாலும், அதிர்ச்சியாலும், அவர் உடல்நிலை லேசாக பாதிக்கப்பட்டது.

உயிர் காவு
தொழில்நுட்ப சாதனங்கள் சமயத்தில் உயிரை காவு வாங்கும் அளவுக்கு சென்றுவிடுகிறது. இந்த விபத்துக்கு ஜிபிஎஸ் தந்த தவறான தகவல்தான் காரணம் என விபத்தில் சிக்கிய இளம்பெண் தெரிவித்தார்.

போலீசார் ஆய்வு
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜிபிஎஸ் கருவி தவறான தகவல் தந்திருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கார் மூழ்கியது
இந்த விபத்தில் இளம்பெண் ஓட்டி வந்த டொயோட்டா யாரிஸ் கார் ஏரியில் இருந்து பின்னர் மீட்கப்பட்டது.


Click it and Unblock the Notifications








