73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!

கேரளாவில் 73 வயதான பாட்டி ஒருவர் அசால்ட்டாக விலையுயர்ந்த ஜாகுவார் எஃப் டைப் (Jaguar F Type) என்கிற ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி அசத்தி உள்ளார். யார் இந்த பாட்டி? எவ்வாறு இவ்வளவு வயதிலும் அசராமல் இந்த ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டியுள்ளார்? என்ற கேள்விகளுக்கு பதில்களாக, இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா என்றவுடனே நம் மனதிற்கு முதலாவதாக நினைவிற்கு வருவது, அந்த மாநிலத்தில் எங்கும் பரவி காணப்படும் தென்னை மரங்களும், யானைகளும் தான். அதேபோல், கேரள மக்கள் ஆட்டோமொபைல் வாகனங்களை பயன்படுத்துவதிலும் கூடுதல் ஆர்வம் கொண்டவர்கள். இந்தியாவிலேயே பழமையான கார் & பைக்குகளை கேரளாவில்தான் அதிகம் பார்க்க முடியும்.

73-year-old grandma drives jaguar f-type

அந்த அளவிற்கு, தாங்கள் வாங்கும் வாகனங்களுடன் ஓர் நெருக்கமான பிணைப்பை கேரள மக்கள் கொண்டிருப்பர். இதன் வெளிப்பாடாகவே, பைக் & கார்களை அதிகமாக மாடிஃபிகேஷன் செய்து கேரளாவில் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, பெரும்பாலான கேரள மக்களின் வாழ்வியல் ஆட்டோமொபைலை சுற்றியே இருப்பதை காண முடியும்.

ஆதலால், 73 வயதில் இந்த கேரள பாட்டி கார் ஓட்டியதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. ஆனால், இவர் ஓட்டியிருப்பது ஜாகுவார் கார் எனும்போதுதான் கொஞ்சம் சர்ப்பிரைஸாக உள்ளது. ஏனெனில், ஃபெராரி, லம்போர்கினி, ஜாகுவார் போன்ற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களை ஓட்டுவது அவ்வளவு ஒன்றும் சுலபமானது கிடையாது. இவை அதிவேகமாக இயங்கக்கூடியவை என்பதால், அதற்கேற்ப அவற்றை கண்ட்ரோல் செய்வதும் கொஞ்சம் கடினம்.

73-year-old grandma drives jaguar f-type

ஆனால், இதனை 73 வயதில் சர்வ சாதாரணமாக செய்து காட்டியிருக்கும் இந்த பாட்டியின் பெயர் ராதாமணி. இவர் கார்களை ஓட்டுவதை மிகவும் விரும்பக்கூடியவர். பல்வேறு விதமான கார்களை ராதாமணி அவர்கள் ஓட்டுவதை இணையத்தில் காண முடியும். அந்த வரிசையில், ஜாகுவார் எஃப் டைப் காரை இவர் ஓட்டும் வீடியோ ஏ2இசட் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், பச்சை நிறத்திலான ஜாகுவார் எஃப் டைப் காரின் டிரைவர் இருக்கையில் ராதாமணி அமர்ந்திருக்க, ராதாமணியின் பேத்தி பிஎம்டபிள்யூ இசட்4 என்கிற மற்றொரு ஸ்போர்ட்ஸ் காரில் அமர்ந்திருப்பதை காணலாம். "பிஎம்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் காரை டிரைவ் செய்யும் சமீபத்திய வீடியோ 1 கோடிக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டது மற்றும் பலரால் பகிரப்பட்டது...

ஒவ்வொரு முறையும் நான் புதிய வாகனத்தை ஓட்டும்போது, மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்... ஆனால் இன்று அனைவரும் அதை விரும்புகிறார்கள் என்பது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிற கேப்ஷன் உடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. எவ்வாறு இந்த பாட்டியால் இவ்வளவு அசால்ட்டாக ஜாகுவார் போன்ற கார்களை ஓட்ட முடிகிறது? என்கிற கேள்விக்கு பதில், ராதாமணி ஓர் அனுபவமிக்க டிரைவிங் ஸ்கூல் ஆசிரியர் ஆவார்.

ஏ2இசட் என்பது கொச்சியில் இவர் நடத்திவரும் டிரைவிங் ஸ்கூலின் பெயர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பெயரும் கூட. இதனால், ஏ2இசட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதாமணி இதற்குமுன் என்னென்ன மாதிரியான கார்களை ஓட்டியுள்ளார் என்பதை காணலாம். ஏ2இசட் டிரைவிங் ஸ்கூலை 1970இல் ராதாமணியின் கணவர் நிறுவினார். ராதாமணிக்கு கார் ஓட்ட சொல்லிக் கொடுத்ததும் அவர் கணவரே ஆவார்.

73-year-old grandma drives jaguar f-type

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராதாமணி தன்னுடைய 30ஆம் வயதில் கார் ஓட்ட கற்றுக் கொண்டார். கொஞ்சம் தாமதமாகவே கார் ஓட்ட இவர் பழகிக் கொண்டார் என்றாலும், இத்தனை வருடங்களில் பல்வேறு விதமான கார்களை ராதாமணி ஓட்டியுள்ளார். அதன் மூலம் கிடைத்த அனுபவமே ஜாகுவார் எஃப் டைப் போன்ற ஸ்போர்ட்ஸ் ரக கார்களையும் ராதாமணியை எளிதாக ஓட்ட வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2024, 11:59 [IST]
English summary
Grandma from kerala drives jaguar f type sports car video gone viral
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X