தாத்தாவ பத்தி முழுசா தெரியாம பேரன் சொன்ன வார்த்தை! கார் சாவிய கையில குடுத்ததும் நடந்தத பாத்து மெரண்டுட்டாரு!
சமூக வலை தளங்களில் சுவாரஸ்யமான விஷயங்களை காட்டும் வைரல் வீடியோக்கள் (Viral Videos) அவ்வப்போது வேகமாக பரவும். இந்த வரிசையில் தற்போது பரவி வரும் வைரல் வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வைரல் வீடியோவில் வயதான தாத்தா ஒருவர், தனது பேரனின் ஃபோர்டு மஸ்டங் (Ford Mustang) காரை ஓட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? என நீங்கள் நினைக்கலாம். ஆச்சரியம் இருக்கவே செய்கிறது. ஏனெனில் அவர் ஃபோர்டு மஸ்டங் காரை சாதாரணமாக ஓட்டவில்லை.
மாறாக ஸ்டண்ட் (Stunt) செய்துள்ளார். உண்மையில் மோட்டார்ஸ்போர்ட்ஸில் அனுபவம் மிக்க நபர்களால் மட்டுமே இது போன்ற சாசகங்களை எல்லாம் செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு சாகசத்தை நாம் தற்போது பேசி கொண்டுள்ள வயதான தாத்தா அனாயசமாக செய்து, அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

உண்மையில் அவரது தோற்றத்தையும், வயதையும் பார்த்தால், இது போன்ற சாகசங்களை செய்ய கூடியவர் போல் தெரியவில்லை. ஆனால் யாரையும் தோற்றம் மற்றும் வயதை பார்த்து எடை போட கூடாது என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது டிரைவிங் திறன் இருந்தது. இதற்காக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் அந்த தாத்தாவை புகழ்ந்து தள்ளி கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் பேரன் ஃபோர்டு மஸ்டங் சாவியை தனது தாத்தாவிடம் கொடுக்கும்போது, மெதுவாகவும், கவனமாகவும் ஓட்டுங்கள் என கூறுகிறார். ஆனால் தனது தாத்தாவின் டிரைவிங் திறனை பற்றி அவருக்கே தெரியவில்லை போல! அதன்பின் நடந்த சம்பவத்தை பார்த்து, நம்மை போல், அந்த தாத்தாவின் பேரனும் மிரண்டு போய் விட்டார்.

இதன் காரணமாக, ''தாத்தா இப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?'' என அவர் ஆச்சரியமாக கேட்டார். இதற்கு தாத்தாவோ கொஞ்சம் கூட அலட்டி கொள்ளாமல், ''அந்த காலத்தில் நாங்கள் டிராக்டரிலேயே வீலிங் செய்வோம்'' என்று கூறினார். அதாவது முன் சக்கரங்களை தூக்கி கொண்டு சில கிலோ மீட்டர்களுக்கு பயணிப்போம் என்ற அர்த்தத்தில் அவர் பேசினார். தற்போது வைரலாக பரவி வரும் தாத்தாவின் ஃபோர்டு மஸ்டங் சாகச வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் காணும் ஃபோர்டு மஸ்டங் கார் செயல்திறனுக்கு பெயர் பெற்றது. இந்த காரில், சக்தி வாய்ந்த 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 395 பிஹெச்பி பவர் மற்றும் 515 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் தற்போது ஃபோர்டு மஸ்டங் கார் விற்பனையில் இல்லை. ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியேறியது. இதன் காரணமாக ஃபோர்டு மஸ்டங் காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. வேண்டுமென்றால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் இந்த காரை வாங்கலாம். ஆனால் அதிக 'டிமாண்ட்' காரணமாக, விலை சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையே இந்த வைரல் வீடியோவை பார்த்து விட்டு, பலரும் தங்கள் கார்களில், சாகசங்களை செய்ய முயற்சி செய்யலாம். கார் ஸ்டண்ட்களில் ஆர்வம் இருப்பதில் தவறில்லை. ஆனால் முறையான பயிற்சி பெற்ற பிறகு, கார் ஸ்டண்ட்களை செய்வது நல்லது. அத்துடன் பாதுகாப்பான இடத்தில், யாருக்கும் ஆபத்து இல்லாமல், முறையான பாதுகாப்பு உபகரணங்களுடன், விதிமுறைகளுக்கு உட்பட்டு கார் ஸ்டண்ட்களை செய்வது சிறந்தது.
குறிப்பாக பொது இடங்களில் எக்காரணத்தை கொண்டும் கார் ஸ்டண்ட்களை செய்து விட வேண்டாம். இது அபராதம், டிரைவிங் லைசென்ஸ் ரத்து மற்றும் கார் பறிமுதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கலாம். ஒரு வேளை விபத்து நடைபெற்றால், கிரிமினல் நடவடிக்கைகளும் பாயலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








