கிரேட் காலிக்கு அவரோட மனைவி இப்படி ஒரு பரிசை கொடுத்திருக்காங்களா! கட்டினா இப்படி ஒரு பெண்ணைதான் கட்டனும்!

உலகம் அறிந்த இந்தியர்களில் கிரேட் காலி-யும் ஒருவர் ஆவார். இவரின் உண்மை பெயர் தலிப் சிங் ஆகும். தன்னுடைய பிரமாண்ட உருவத்திற்கு பெயர்போனவராக இவர் இருக்கின்றார். இதுமட்டுமின்றி, உலக புகழ்பெற்ற டபிள்யூடபிள்யூஇ போட்டிகளிலும் அவர் கலந்திருக்கின்றார். இதன் வாயிலாகவே அவர் உலகம் அறிந்த நபராக மாறினார். இவருக்கே அவருடைய மனைவி விலை உயர்ந்த பொருளை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜீப் (Jeep) நிறுவனத்தின் மிகவும் காஸ்ட்லியான காரையே அவர் பரிசாக வழங்கி இருக்கின்றார்.

சொகுசு அம்சங்கள் நிறைந்த காம்பஸ் டிரைல்ஹாக் 4X4 (Jeep Compass Trailhawk 4×4) காரையே கிரேட் காலிக்கு அவருடைய மனைவி பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த கார் பரிசை கிரேட் அவருடைய இன்ஸ்டா பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றார். 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டே கார் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.

Great khali got surprise gift from wife

இதுவும் கிரேட் காலியின் பதிவின் வாயிலாக உறுதிச் செய்யப்பட்டு இருக்கின்றது. கிரேட் காலி, தற்போது இந்தியாவில் இல்லை. அவர் தன்னுடைய குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறி இருக்கின்றார். இந்த நிலையிலேயே அவருக்கு அவருடைய மனைவி இந்த காஸ்ட்லியான காரை பரிசாக வழங்கி இருக்கின்றார்.

ஆனால், இந்த காம்பஸ் டிரைல்ஹாக் மாடல் 2024 மற்றும் 2025 மாடல்களிடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளிப்பதை நம்மால் அறிய முடிகின்றது. எனவே இந்த கார் பயன்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கலாம். அதாவது, யூஸ்டு கார் மார்க்கெட்டில் இருந்து வாங்கப்பட்ட காராக இது இருக்கும் என யூகிக்க முடிகின்றது.

இதற்கேற்ப 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்த காம்பஸ் டிரைல்ஹாக் காரைபோல காட்சியளிக்கின்றது கிரேட் காலி வைத்திருக்கின்ற கார். இந்த காரிலேயே தற்போது கிரேட் காலி தன்னுடைய பயணங்களை மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றார். இவரிடத்தில் இந்த கார் மாடல் மட்டுமில்லைங்க இன்னும் பல ஆடம்பர கார்கள் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் உள்ளன.

அந்தவகையில், இவருக்கு துபாயிலும் சில கார்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. டொயோட்டாவின் மிகவும் காஸ்ட்லியான தயாரிப்புகளில் ஒன்றான லேண்ட் க்ரூஸர் காரையே அவர் துபாயில் வைத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு என்டியோவர் மற்றும் மாருதி சுஸுகி பலினோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கும் இவர் சொந்தக்காரராக இருக்கின்றார்.

இவற்றின் வரிசையில் தற்போது புதிதாக யூஸ்டு ஜீப் காம்பஸ் டிரைல்ஹாக் கார் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது என்ன விலையில் வாங்கப்பட்டது என்கிற விபரம் வெளியாகவில்லை. இருப்பினும், இப்போது புதிதாக இந்த கார் மாடலை இந்தியாவில் வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ. 19 லட்சம் செலவழிக்க வேண்டும்.

இது காம்பஸ் கார் மாடலின் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய அதிகபட்ச விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இதன் விற்பனை சற்றே குறைவாக உள்ளது. அதிக கவர்ச்சியான மற்றும் அதிக சொகுசு வசதிகளைத் தாங்கிய ஓர் கார் மாடலாகவே காம்பஸ் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கி இருப்பதில் தலை சிறந்த வாகனமாக இது காட்சியளிக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரேட் காலி அந்த காருக்கு அருகில் நிற்கும்போது அந்த கார் ஓர் குழந்தையைபோல தெரிகின்றது. குறிப்பாக, மிகவும் சிறியது போல தெரிகின்றது. ஓர் காருக்கே இந்த நிலைமை என்றால் பைக்கை பற்றி சொல்லவா வேண்டும். பைக்குகள் கிரேட் காலின் உருவத்திற்கு சைக்கிளை போல தெரியும். இந்த நிலை காரணமாகவே இவர் பெரும்பாலான பெரிய உருவம் கொண்ட கார்களில் பயணித்து வருகின்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 12, 2024, 18:36 [IST]
English summary
Great khali celebrates birthday with surprise gift of jeep compass from wife
மேலும்... #celebrity cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+