இதை தாண்டுனா அப்புறம் அவ்வளவு தான்! சென்னை மக்களே இனி பைக்/ கார்ல போகும் போது கவனமா இருங்க!

சென்னையில் பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு அதிகமாகவும் இரவில் 50 கிலோமீட்டர் வேகத்துக்கு அதிகமாகவும் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள ஸ்பீடு கேமராவில் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளைக் கண்டறிந்து அபராதம் விதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

சென்னை பகுதியில் சமீப காலமாகச் சாலை விபத்துக்கள் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு அதிவேகமாக வாகனம் ஓட்டுவது தான் முக்கியமான காரணமாக இருக்கிறது. இதற்காக போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடும் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதித்தும் பார்த்தனர் ஆனால் அது பெரிய அளவில் பலன் இல்லை.

Chennai City Speed Limit

இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து போலீசார் சார்பில் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை பகுதியில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை ஸ்பீடு கேமரா மூலம் கண்காணித்து தானியங்கியாக அவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.போலீசார் அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இதற்காகச் சென்னை பெருநகர டிராபிக் போலீஸ் சார்பில் நகரில் முக்கியமான 30 பகுதிகளில் ஸ்பீட் ரேடார் கன்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் முக்கியமான 10 பகுதிகளில் இந்த ஸ்பீடு ரேடார் கன் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் சாலையில் செல்லும் வாகனங்களின் வேகம் கண்காணிக்கப்படுகிறது.

Chennai City Speed Limit

தற்போது இந்த ஸ்பீடு ரேடார் கண்ணில் அதிவேகமாக வாகனம் ஓட்டும் வாகனங்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் சென்னை பகுதியில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனங்கள் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கலாம் என்றும் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேகத்தை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து அந்த வாகனத்தின் புகைப்படத்தை ஸ்பீடு கேமரா மூலம் எடுத்து அதில் உள்ள வாகனப் பதிவு எண்ணிற்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேகம் பஸ், வேன் கார் மற்றும் பைக்குகளுக்கு மட்டும்தான் ஆட்டோவிற்கு அதிகபட்சம் 25 கிலோ மீட்டர் வேகம் வரை தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Chennai City Speed Limit

25 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாகப் பயணிக்கும் ஆட்டோவிற்கும் அபராதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அண்ணா அறிவாலயம் ஜங்ஷன், ஏர்போர்ட் டாக்டர் குருசாமி பிரிட்ஜ், புல்லா அவன்யூ, மதுரவாயல் ரேஷன் கடை ஜங்ஷன், ஈஞ்சம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா மற்றும் ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் இந்த ஸ்பீட் ரேட்டார் கன் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னையின் அடுத்த முக்கியமான 20 பகுதிகளில் இந்த ஸ்பீட் போட்டார் கன்னை பொருத்தச் சென்னை பெருநகர போலீசார் முடிவு செய்துள்ளனர். இது மட்டுமில்லாமல் சாலையில் ஆங்காங்கே வான ஓட்டிகள் எவ்வளவு வேகத்தில் செல்கிறார்கள் என்பதை அறிய டிஜிட்டல் போர்டுகளை பொருத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இதனால் வாகன ஓட்டிகள் செல்லும் போது அந்த போர்டில் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்ற தகவல் தெரியும், வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் சென்றால் இதில் கண்டறிந்து வேகத்தைக் குறைத்துக் கொள்ள முடியும்.இந்த போர்டில் அதிக வேகமாகச் செல்வது பதிவானால் அபராதம் விதிக்கப்படாது. ஸ்படு ரேடார் கன்னில் பதிவானால் மட்டுமே அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறாக விதிக்கப்படும் அபராத ரசீதுகள் வாகனத்தின் பதிவின் உடன் இணைக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இதற்கான அபராதத்தை ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ செலுத்தலாம். மீறி அபராதம் செலுத்த தவறினால் வாகன தணிக்கையின் போது மொத்தமாக அபராதம் விதிக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் நடக்கும் விபத்துகளுக்கு பெரும்பாலும் வேகம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கட்டாயம் அதிகம் இருக்கிறது. இதற்காக சென்னை போலீசார் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதே.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 20, 2023, 18:30 [IST]
English summary
Greater chennai traffic police introduced city speed limit rules and speed radar guns
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X