வரதட்சணையா மாருதி வேகன்ஆர் காரை தந்ததால் நின்றுபோன கல்யாணம்.. மணமகன் இப்ப எங்க இருக்காருனே தெரியல! என்ன ஆச்சு?
இந்தியாவில் வரதட்சணை கேட்பது சட்டவிரேதமானது ஆகும். இங்கு ஓர் நபர் தன்னுடைய பெண்ணுக்காக மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) காரை மணமகனுக்கு வரதட்சனையாக கொடுக்க முன் வந்த போதிலும் அந்த மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்திவிட்டு தற்போது தலைமறைவாகி இருக்கின்றார்.
ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி (Hyundai Creta SUV) காரை மணமகன் வரதட்சணையாக கேட்ட நிலையில், பெண் வீட்டார் மாருதி சுஸுகி வேகன்ஆர் காரை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். இதில் ஆத்திரமடைந்தே கடைசி நேரத்தில் மணமகன் திருமணத்தை நிறுத்தி இருக்கின்றார். இந்த வெட்கக்கேடான சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர் நகரிலேயே அரங்கேறி இருக்கின்றது.

திருமணம் கடைசி நேரத்தில் நின்றதால் தற்போது மணப் பெண் வீட்டார் கடும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். சம்பவம் குறித்து ஏற்கனவே மணப் பெண் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்களும், மணமகளின் தந்தையும், திருமணத்தை நிறுத்தியி மணமகன் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். ஆனால், அந்த நபர் ஏற்கனவே தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகின்றது.
எனவே தப்பியோடிய மணமகன் அமீர் ஆலம்-ஐ உபி காவல்துறை தேட தொடங்கி இருக்கின்றது. தன்னுடைய திருமணம் ஓர் காருக்காக நின்று இருப்பது குறித்த தகவலை மணப் பெண்ணே உள்ளூர் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

மிகுந்த மன வேதனையில் இருந்த போதிலும் அதை அப்படியே அடக்கிக் கொண்டு அந்த பெண் பேட்டி அளித்துள்ளார். எந்தவொரு தவறும் செய்யாமல் தன்னுடைய குடும்பம் வஞ்சிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திருமணத்திற்காக அனைத்து உறவினர்களும் கிராமத்தை வந்தடைந்திருக்கின்றனர். மேலும், உணவுகளும்கூட தயார் நிலையில் இருந்திருக்கின்றது.
இந்த நிலையிலேயே, ஹூண்டாய் கிரெட்டா இருக்க வேண்டிய இடத்தில் மாருதி வேகன்ஆர் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து அங்கிருந்து ஆத்திரமைடந்துக் கிளம்பியிருக்கின்றார். தாலி கட்ட இருந்த கடைசி நேரத்தில் மணமகன் இவ்வாறு திருமணத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடி இருக்கின்றார். அவர் அரசு ஊழியர் என கூறப்படுகின்றது.
இதனால்தான் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரை கேட்டு மணமகள் வீட்டாரிடம் கேட்டு அவர் டிமாண்ட் செய்திருக்கின்றார். ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களின் லிஸ்ட்டிலும் இந்த கார் மாடல் முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், மாருதி சுஸுகி வேகன்ஆர் ரூ. 5 லட்சத்து 54 ஆயிரத்து 500 லட்சம் என்கிற குறைவான ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த கார் மாடலின் இரண்டு யூனிட்டுகளின் விலையைக் கொண்டதே ஹூண்டாய் கிரெட்டா ஆகும். இத்தகைய அதிக விலைக் கொண்ட காரை கேட்டே அமிர் ஆலம் என்பவர் திருமணத்தை நிறுத்திவிட்டு தற்போது ஓட்டிஇருக்கின்றார். இந்த நிகழ்வு நாடு முழுக்க மிகப் பெரிய அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதும் வரதட்சணைக் கேட்பதும், அதற்காக பெண்களைக் கொடுமைப் படுத்தும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே உபி மாநிலத்தில் வரதட்சணைக்காக திருமணம் நின்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த மோசமான சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. விரைவில் அமிர் ஆலம் சட்டத்திற்கு முன்னர் தண்டிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் அரசு ஊழியர் என்பதால் அந்த வேலை பறிபோகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








