இன்னோவா கார் என்னா விலை விக்குது... புனே போலீஸாரின் இன்னோவாவை அடித்து நொறுக்கிய உத்திர பிரதேச ரவுடிகள்!!

போலீஸார்களின் வாழ்க்கை மிகுந்த ஆபத்துகளை நிறைந்தது என்பதற்கு உதாரணமாக பல நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். அத்தகைய சூழலை எவ்வாறு கையாளுவது என்பதற்கெல்லாம் சேர்த்து தான் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இன்னோவா கார் என்னா விலை விக்குது... புனே போலீஸாரின் இன்னோவாவை அடித்து நொறுக்கிய உத்திர பிரதேச ரவுடிகள்!!

பயிற்சிகள் வழங்கப்பட்டாலும், போலீஸாருக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளன. அவ்வாறு உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

இன்னோவா கார் என்னா விலை விக்குது... புனே போலீஸாரின் இன்னோவாவை அடித்து நொறுக்கிய உத்திர பிரதேச ரவுடிகள்!!

தலைமை காவலர் ஒருவரின் கொலையில் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்வதற்காக புனேவை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட போலீஸார் குழு ஒன்று உத்திர பிரதேசம், காஸியாபாத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் மீது, தேடி வந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்னோவா கார் என்னா விலை விக்குது... புனே போலீஸாரின் இன்னோவாவை அடித்து நொறுக்கிய உத்திர பிரதேச ரவுடிகள்!!

இதில் புனே போலீஸார் எடுத்து சென்ற டொயோட்டா இன்னோவா கார் அந்த நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்திற்கு பிறகு தேடி வந்த பெண்ணை புனே போலீஸ் குழு கைது செய்துள்ளது.

இன்னோவா கார் என்னா விலை விக்குது... புனே போலீஸாரின் இன்னோவாவை அடித்து நொறுக்கிய உத்திர பிரதேச ரவுடிகள்!!

இதுகுறித்து புனே டிசிபி ப்ரியங்கா நர்னாவாரே கூறுகையில், எங்களது குழுவும், காஸியாபாத் போலீஸ் குழுவும் இந்த தாக்குதல் நடந்தப்போது தனித்தனியாக குற்றவாளி பெண்ணை தேடி கொண்டிருந்தோம். அந்த பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்னோவா கார் என்னா விலை விக்குது... புனே போலீஸாரின் இன்னோவாவை அடித்து நொறுக்கிய உத்திர பிரதேச ரவுடிகள்!!

அவரை புனேவுக்கு அழைத்து செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார். அந்த பெண்ணை கைது செய்யும்போது அந்த பெண்ணின் உறவினர்கள் போலீஸாரை தடுத்து நிறுத்தியுள்ளனர். விபரத்தை போலீஸார் கூறினாலும் கேட்காத அவர்கள் போலீஸாரையே திருப்பி தாக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்னோவா கார் என்னா விலை விக்குது... புனே போலீஸாரின் இன்னோவாவை அடித்து நொறுக்கிய உத்திர பிரதேச ரவுடிகள்!!

அப்போதுதான், போலீஸார் ஓட்டி சென்ற இன்னோவா கார் மரக்கட்டைகள் மற்றும் கற்கள் கொண்டு தாக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸாரின் மொபைல் போன்கள் மற்றும் அடையாள அட்டைகளையும் அவர்கள் பறிக்க முயன்றதாக செய்திகள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இன்னோவா கார் என்னா விலை விக்குது... புனே போலீஸாரின் இன்னோவாவை அடித்து நொறுக்கிய உத்திர பிரதேச ரவுடிகள்!!

இதில் ஒருவர் மட்டுமே தலைமறைவாக இருப்பதாகவும், அவரையும் விரைவில் கைது செய்துவிடுவோம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள வீடியோவில் காரின் முன்பக்க பொனெட், க்ரில், ஹெட்லைட், விண்ட்ஷீல்டு, ORVMகள் மற்றும் பம்பர் உள்ளிட்ட பாகங்கள் மிகுந்த சேதமடைந்திருப்பதை பார்க்கலாம்.

இதில் இருந்து தாக்குதல் நடத்தியவர்கள் காரின் முன்பக்க பொனெட்டின் மீது ஏறி தாக்குதல் நடத்தியிருப்பதை அறிய முடிகிறது. சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.16.91 லட்சமாக உள்ளது.

இன்னோவா கார் என்னா விலை விக்குது... புனே போலீஸாரின் இன்னோவாவை அடித்து நொறுக்கிய உத்திர பிரதேச ரவுடிகள்!!

இந்த டொயோட்டா காரில் 2.7 லிட்டர் என்ற ஒற்றை பெட்ரோல் என்ஜின் தேர்வும், 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் என இரு விதமான டீசல் என்ஜின் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. மேனுவல் மட்டுமின்றி ஆட்டோமேட்டிக் தேர்விலும் இன்னோவா கார் கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cops try to arrest accused Criminals brutally damage Toyota Innova Crysta of cops in retaliation.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X