பிப்.17ல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி! இன்சாட்-3டி எஸ் செயற்கை கோளை நிலை நிறுத்த திட்டம்!
விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வரும் 17-ம் தேதி மாலை 5 30 மணிக்கு இன்சாட் 3டி எஸ் என்ற விண்கலத்தை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துகிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் குறித்தும் இந்த இன்சாட் 3டிஎஸ் விண்கலம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து சிறப்பான சாதனைகளை செய்து வருகிறது. சந்திரயான் விண்கலத்தை பாதுகாப்பாக நிலவில் தென்துருவ பகுதியில் தரையிறக்கியது முதல் ஆதித்யா எல்1 விண்கலத்தை சரியாக நிலை நிறுத்தியது வரை பல்வேறு விதமான ஆய்வுகள் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ககன்யான் திட்டத்தின் சோதனையும் முயற்சியையும் வெற்றிகரமாக செய்துள்ளது.

இந்நிலையில் வரும் 17ஆம் தேதி இஸ்ரோ தனது ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்துவது 16வது முறையாக செலுத்தப்படும் நிகழ்வாகும். இந்த நிகழ்வின் போது இந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் இன்செர்ட் 3டிஎஸ் என்ற சாட்டிலைட்டை சுமந்து செல்கிறது. இது ஜிடிஓ எனப்படும் பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.
இந்த ஏவுதலில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் எஃப்14 ரக ராக்கெட்டாக மாற்றப்பட்டு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது மொத்தம் மூன்று கட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 51.7 மீட்டர் உயரத்திற்கு இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 420 டன் எடை கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சாலிட், லிக்யூட் மற்றும் கிரோஜினிக் ஸ்டேஜ்கள் கொண்ட ராக்கெட்டாக இருக்கிறது.

இதில் முதல் ஸ்டேஜாக சாலிட் ஸ்டேஜ் இருக்கிறது. இதில் சுமார் 139 டன் எடை கொண்ட எரிபொருளுடன் பூமியிலிருந்து கிளம்பி செல்வதற்கு உதவி செய்கிறது. அடுத்ததாக இரண்டாவது ஸ்டேஜாக 40 டன் திரவ வடிவிலான புரொபலன்ட் இருக்கிறது. இறுதியாக கிரோஜினிக் ஸ்டேஜ் இருக்கிறது. இதுதான். சாட்டிலைட்டை பூமியின் ஜிடிஓ சுற்றுவட்டற்ற பாதைக்கு எடுத்து செல்கிறது. இந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் சமீப காலமாக பல்வேறு விதமான மிஷன்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இன்சர்ட் 3டிஎஸ் என்பது இதில் பொருத்தப்பட்டுள்ள சாட்டிலைட் ஆகும். இது மூன்றாவது தலைமுறை மெட்டாலஜிக்கல் சேட்டிலைட் ஆகும். ஜிடிஓ பகுதியில் இருந்து இது பூமியை கண்காணிக்கும். எர்த் சயின்ஸ் அமைச்சகத்தில் இருந்து இந்த சேட்டிலைட் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது பூமியில் உள்ள மெட்டலர்ஜி குறித்து ஆய்வுகளை செய்ய உதவுகிறது. நிலப்பரப்பு கடல் பகுதிகள் வானிலை பேரிடர் அபாயம் உள்ளிட்ட பல்வேறு விதமான ஆய்வுகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே இந்த பணியில் இன்சர்ட் 3டி மற்றும் இன்சார்ட் 3டி ஆர் ஆகிய இரண்டு விதமான சேட்டிலைட் பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது இன்சாட் 3 டி எஸ் என்ற சேட்டிலைட் விண்ணில் செலுத்தப்படுகிறது. தரவுகள் எல்லாம் இந்தியாவில் உள்ள எர்த் சயின்ஸ் துறையில் பயன்படுகிறது
இந்த துறையின் கீழ் வரும் மெட்டலர்ஜிகல் துறை, தேசிய மத்திய ரக வானிலை ஆய்வு மையம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிராபிகல் மெட்டாலர்ஜி, நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓசியன் டெக்னாலஜி, இந்தியன் நேஷனல் சென்டர் ஃபார் ஓஷன் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆகிய துறைகளுக்கு இந்த தரவுகள் பயன்படுத்தப்படும்.
இந்த ஏவுதலின் முக்கிய நோக்கமே கடல் பகுதிகளை பல்வேறு விதமான மெட்டாலஜிக்கல் சேனல் மூலம் கண்காணித்து தரும் தரவுகளை வைத்து நமக்கு தேவையான விஷயங்களை தெரிந்து கொள்ளவும் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை புரிந்து கொள்ளவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நடக்க போகும் விஷயங்களை முன்கூட்டியே அறிவதற்காக இது பயன்படுகிறது.
சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் தரையிறங்கிய சம்பவத்திற்கு பிறகு இஸ்ரோவை உலக விஞ்ஞானிகள் கவனித்துக் கொண்டு வருகிறார்கள். இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. சமீபத்தில் ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளது. அடுத்த சோதனைக்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிகச் சிறிய விண்வெளி ஆய்வு மையமாக துவங்கிய இஸ்ரோ தற்போது உலகையே திரும்பி பார்க்க வைக்கும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. சந்திரயான் 3யை தொடர்ந்து அடுத்தடுத்து பல திட்டங்கள் இஸ்ரோவால் துவங்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இஸ்ரோவின் இந்த முயற்சியை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்.


Click it and Unblock the Notifications








