தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய சாதனை படைக்க இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3..!!

Written By:

இந்தியாவின் முதல் கனரக ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஏவுத்தளத்தில் இருந்து சரியாக இன்று மாலை 5.28 மணியளவில் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இன்று விண்ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3!

தகவல் தொழில்நுட்பத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிசாட்-19 செயற்கைகோளை தாங்கிக்கொண்டு, ஸ்ரீஹரிகோட்டா 2வது ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்த நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று விண்ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3!

கிரயோஜெனிக் எஞ்சின் மூலம் உருவான ஜிசாட்-19 செயற்கைகோள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

இன்று விண்ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3!

இன்று மாலை 5.28 மணிக்கு சதிஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து புற்பட நேற்றே இதற்கான கவுண்டோன் தொடங்கப்பட்டு விட்டது.

இன்று விண்ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3!

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பத்து ஆண்டுகால ஆயுள் காலத்துடன் ஜிசாட்-19 செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி எம்கே 3 - டி1 ரக ராக்கெட் உடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது

இன்று விண்ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3!

3,136 எடைக்கொண்ட இந்த செயற்கைகோளில் 4,500 வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்கள், 2.0 மற்றும் 1.4 மீட்டரில் 2 ஆண்டனாக்கள் உட்பட அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இன்று விண்ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3!

மூன்றுவித வாகனங்களை கொண்டுள்ள இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இன்று விண்ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3!

விண்ணில் ஏவப்பட்ட பிறகு ஜியோசைஞ்ச்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் (ஜி.டி.ஓ) என்ற வட்ட பாதைக்கு சென்று இதனுள் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தொலைத்தொடர்பு சாதனங்களை கொண்டுசென்று சேர்க்கும்.

இன்று விண்ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3!

ஜிசாட்-19 செயற்கைகோளின் பயணம் வெற்றி அடைந்தால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பெரிய உயரத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று விண்ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3!

அதுமட்டுமில்லாமல், ஜி-சாட் 19யை வைத்து இந்தியாவில் இருந்து பல வீரர்களை நாம் விண்ணிற்கு அனுப்பலாம். அதற்கான அடுத்தக்கட்ட முயற்சிகளை தற்போதே இஸ்ரோ தொடங்கிவிட்டது.

இன்று விண்ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3!

இதனுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டால், ஜிசாட்-19-ன் அடுத்தடுத்த இயக்கத்திற்காக மேலும் ரூ.12,500 கோடி ரூபாயை இஸ்ரோவிற்கு மத்திய அரசு வழங்க வேண்டி வரும்.

இன்று விண்ணில் செலுத்தப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3!

ஜிசாட்-19 விண்ணில் செலுத்தப்படவுள்ளதை குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோவின் தலைவர் கிரண் குமார்,

இனி வரும் காலங்களில் இந்தியாவில் இருந்து தொலைத்தொடர்பு செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்த ஜி-சாட் 19 செயற்கைகோள் வழிவகுக்கும் என்று கூறினார்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
GSLV MK III Indigenous Rocket Game Changer in Communications says ISRO. Click for more...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark