புதுசா பெரிய கார் வாங்கப்போறீங்களா! 11ம் தேதிக்கு அப்புறம் விலை எல்லாம் ரொம்ப ஜாஸ்தியாக போகுது!
இந்தியாவில் எம்யூவி மற்றும் எக்ஸ்யூவி ரக கார்களுக்கு எஸ்யூவி கார்களை போல் 22 சதவீத ஜிஎஸ்டி வரிக்கு மேல் 22 சதவீத செஸ் வரியை விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் வரும் ஜூலை 11ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது. இந்த வரி விதிப்பு வந்தால் இந்தியாவில் எம்யூவி மற்றும் எக்ஸ்யூவி ரக கார்களின் விலை கணிசமாக அதிகரிக்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தற்போது சரக்கு மற்றும் சேவை வரி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான சிலாப்புகளில் வரிகள் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் வாகனங்களுக்கும் அதன் தன்மையை பொறுத்து வரிவிதிப்பு என்பது பின்பற்றப்படுகிறது. இப்படியாக சொகுசு கார்களுகு்கு அதிகபட்ச சிலாப்பான 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது. கூடுதலாக 22 சதவீத செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு எஸ்யூவி ரக கார்கள் என்றால் என்ன என்பதற்கான ஒரு விளக்கத்தை அளித்திருந்தது. அதன்படி ஒரு வாகனம் 4 மீட்டருக்கு அதிகமான நீளத்தில் இருக்க வேண்டும், 1500 சிசிக்கு அதிகமான இன்ஜின் திறனை கொண்டிருக்க வேண்டும், கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ அதிகமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.
இந்த ரக கார்கள் எல்லாம் எஸ்யூவி ரக கார்கள் என மத்திய அரசு விளக்கம் அளித்து இருந்தது. இந்த கார்களுக்கு தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரியுடன் சேர்த்து கூடுதலாக 22 சதவீதம் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது. இது சொகுசு கார் என்பதாலும் அத்தியாவசிய தேவையில்லாத பொருள் என்பதாலும் அதிகமான வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் சில மாநிலங்களில் எம்யூவி ரக காருக்கான விளக்கம் தேவை என ஜிஎஸ்டி கவுன்சில் முன் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுவாக எஸ்யூவி மற்றும் எக்ஸ்யூவி ஆகிய மூன்று கார்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த மூன்று கார்களக்கு எப்படி விரி விதிப்பு செய்யப்பட வேண்டும் என்பதற்கான விளக்கத்தை மாநில அரசுகள் கேட்டிருந்தன.
எஸ்யூவி ரக கார்கள் என்றால் ஸ்போர்ட்ஸ் யூடிலிட்டி வாகனங்கள், இந்த வாகனங்களில் பின்புறம் உயரமான அதே நேரம் பெரிய பூட் வசதி இருக்கும். அடுத்ததாக எம்யூவி ரக வாகனங்கள் இதில் பூட் வசதி குறைவாக தான் இருக்கும். ஆனால் அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் மூன்று வரிசை சீட்டர்கள் வழங்கப்பட்டிருக்கும்.

ஒரு கார் எஸ்யூவியாகவும் இல்லாமல் அதே நேரம் எம்யூவியாகவும் இல்லாமல் ஒரு யூட்டிலிட்டி வாகனமாக இருந்தால் அந்த வாகனத்தை கிராஸ் ஓவர் யூவி அதாவது எக்ஸ்யூவி என அழைக்கிறார்கள். எம்யூவி ரக கார்களை எம்பிவி ரக கார்கள் என்றும் அழைப்பார்கள். இதில் அதிகமான பயணிகள் பயணிக்க முடியும்.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 11-ம் தேதி ஜிஎஸ்டி கூட்டம் நடக்கிறது. அதில் இந்த எஸ்யூவி மற்றும் எஸ்யூவி ஆகிய கார்களுக்கான பிரச்சனை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். அதில் பெரும்பாலும் மத்திய அரசு எஸ்யூவி கார்களுக்கான அதே தகுதியே எம்யூவி மற்றும் எஸ்யூவி ஆகிய கார்களுக்கும் பொருந்தும் என அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
அப்படியான அறிவிப்பு வெளியானால் இனி எம்யூவி, எக்ஸ்யூவி, எஸ்யூவி என அனைத்து ரக கார்களும் எஸ்யூவி என்ற பொதுப் பெயரிலேயே அழைக்கப்படும். அதே நேரம் எம்யூவிமற்றும் எஸ்யூவி ரக கார்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 22 சதவீத செஸ் வரியும் விதிக்கப்படும். இதனால் இந்த கார்களின் விலை கணிசமான அளவு அதிகரிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தபின் பல்வேறு மாற்றங்கள் அதில் நிகழ்ந்துள்ளன. தற்போது இந்த எஸ்யூவி மற்றும் எம்பி ரக கார்களுக்கான வித்தியாசம் குறித்த விவாதம் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்த விலை உயர்வு பெறும் பணக்காரர்கள் வாங்கும் காருக்கான விளைவு உயர்வு என்பதால் இதைப் பற்றி சாமானிய மக்கள் கவலைப்பட தேவையில்லை


Click it and Unblock the Notifications









