விலை குறையப்போவது கன்ஃபார்ம்! இவங்களே கார் வாங்குவதை நிப்பாட்ட போறாங்க!

இந்தியாவில் பண்டிகை காலங்களில் வாகனங்களின் விற்பனை வழக்கமாக அதிகரிக்கும். ஆனால் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் தீபாவளி பரிசு காத்திருக்கிறது என பேசினார். இதில் ஜிஎஸ்டி வரி குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன விற்பனை மந்தமாகியுள்ளது. இந்நிலையில் டீலர்களே தங்கள் ஸ்டாக்கை குறைக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஜிஎஸ்டி வரிகுறைப்பு உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இந்தியாவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்பொழது நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு காத்திருப்பதாக பேசினார். இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது உள்ள தகவலின் படி இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடக்கப்போவதாகவும் தற்போது 4 ஸ்லாப்களாக உள்ள வரிகள் 2 ஸ்லாப்களாக குறையப்போவதாகவும் பேசப்படுகிறது.

GST Cut Diwali

வழக்கமாக இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, ஓணம், நவராத்திரி, தீபாவளி ஆகிய பண்டி காலங்களில் வாகனங்களின் விற்பனை அதிகமாக இருக்கும். ஒரு ஆண்டிற்கு ஆகும் வாகன விற்பனையில் 30-40 சதவீதம் வரை இந்த காலகடத்தில் மட்டுமே நடக்கும். இந்நிலையில் ஜிஎஸ்டி வரி குறையும் என பேசப்படுவதால் ஜிஎஸ்டி வரிகள் குறையும் பட்சத்தில் அதன் பிறகு வாகனம் வாங்கினால் அதிக காசை மிச்சப்படுத்தலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்துவிட்டது. இதனால் வாகன விற்பனை தற்போது மந்தமாகியுள்ளது.

மக்கள் பலர் வாகனங்கள் வாங்கும் திட்டத்தை தள்ளிபோட்டுள்ள நிலையில் இது ஷோரூம் நடத்தி வரும் டீலர்களிடமும் பிரதிபலித்துள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து டீலர்கள் குறிப்பிட்ட அளவு ஸ்டாக்கை எப்பொழுதும் இருப்பு வைத்திருப்பார்கள். கார்கள் விற்பனையாக விற்பனையாக ஸ்டாக்கையும் ஆர்டர் செய்வார்கள். இந்நிலையில் தற்போது டீலர்கள் புதிய ஆர்டர்களை தள்ளிப்போட்டு வருகின்றனர்.

GST Cut Diwali

ஜிஎஸ்டி வரி குறைந்தால் 28 சதவீத வரியில் காரை வாங்கி அதை 18 சதவீத வரியில் விற்பனை செய்ய வேண்டும். அதனால் 10 சதவீத வரிப்பணம் தேக்கம் அடையும் என்ற காரணத்தால் ஜிஎஸ்டி குறைவு குறித்த அறிவிப்பு வந்த பிறகு மொத்தமாக ஆர்டர் செய்யலாம். அதுவரை ஸ்டாக்கில் இருக்கும் கார்களை மட்டுமே விற்பனை செய்யலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறைத்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வரவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் இந்த பேச்சு அதிகமாக இருப்பதால் இப்படியான சூழ்நிலை வந்தால் எப்படி சமாளிப்பது என்பதை யோசித்து நஷ்டத்தை தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக உணர முடிகிறது. இதை எல்லாம் பாரக்கும் போது ஜிஎஸ்டி வரி குறைப்பு உண்மையிலேயே இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

GST Cut Diwali

தற்போது கார்களுக்கு 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது சிறிய ரக கார்களுக்கு 18 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காரின் விலையிலிருந்து 10 சதவீதம் வரை வரி குறைய வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு ரூ5 லட்சம் மதிப்பிலான காரை வாங்கினால் அதற்கு ரூ50 ஆயிரம் வரை வரி குறையும் என எதிர்பார்க்கலாம்.

அதே நேரம் உயர் ரக கார்களுக்கான வரி 40 சதவீதமாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த கார்களுக்கு ஜிஎஸ்டி வரி போக செஸ் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் சேர்ந்து 40 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தில் இந்த செஸ் உள்ளிட்ட வரிகளை நீக்கி ஒரேடியாக 40 சதவீத ஸ்லாப் வரும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜிஎஸ்டி வரி என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கும் நிலையில் இதில் தள்ளுபடி வருகிறது என்றால் நிச்சயம் இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது வியாபாரத்தை அதிகரிக்கும். அதே நேரம் டீலர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பது வரி குறைப்பை மேலும் உறுதி செய்யும் விதமாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 31, 2025, 9:45 [IST]
English summary
Gst cut diwali auto sales may drop amid customer uncertainty
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X