செப் 22 முதல் கார், பைக் விலை குறையப்போகுது! ஜிஎஸ்டி குறைப்பால் அடித்தது ஜாக்பாட்!

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 12 மற்றும் 28 சதவீதம் ஆகிய இரண்டு ஸ்லாப்புகளும் நீக்கப்படுகின்றன.இனி 5 மற்றும் 18 சதவீத ஸ்லாப் மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது நேரடியாக வாகன விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பெரும்பாலான ஆட்டோமொபைல்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. சொகுசு வாகனங்களுக்கு கூடுதலாக செஸ் வரி விதிக்கப்படுகிறது. அதே நேரம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளது.

GST on Automobiles

அதன்படி இது பெரும்பாலான பொருட்களுக்கு 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் தான் வரி விதிக்கப்படும். சிகரெட், மது போன்ற பொருட்களுக்கும், சொகுசு பொருட்களுக்கும் 40 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இது வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் வாகனங்களின் விலையை இது பெரிய அளவில் குறைக்க வாய்ப்புள்ளது.

இதில் டூவீலர்களை பொருத்தவரை 350சிசிக்கும் குறைவான டூவீலர்களின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் 350 சிசிக்கு அதிகமான திறன் கொண்ட வாகனங்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. செஸ் வரிகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது.

GST on Automobiles

தற்போது ரூ10 லட்சம் கார் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ரூ2.8 லட்சம் வரியாக மட்டும் செலுத்தப்படுகிறது. இனி பெரும்பாலானா வாகனங்களுக்கான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் இனி ரூ10 லட்சத்திற்கு கார் வாங்கினால் அதற்கு ரூ1.8 லட்சம் மட்டுமே வரியாக அரசுக்கு செல்லும்.

அதனால் தற்போது ரூ10 லட்சத்திற்கு விற்பனையாகி வரும் கார்களின் விலை ரூ1 லட்சம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வரும் செப்22ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் வாகனங்களின் விலை கணிசமாக குறையும்.அதே நேரம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி அப்படியே 5 சதவீதத்தில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் எலெக்ட்ரிக் வாகன விலையில் எந்த மாற்றமும் இருக்காது. மாறாக பெட்ரோல், டீசல், ஹைபிரிட், சிஎன்ஜி ரக வாகனங்களுக்கான விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் பெரிய ரக கார்களுக்கான கூடுதலாக செஸ் வரிவதிக்கப்படுமா என்பது இதுவரை தெளிவான விபரம் வரவில்லை. இது குறித்த அறிவிப்புகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அதே நேரம் சொகுசு ரக கார்களுக்க 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது தற்போது சொகுசு கார்களுக்கும் கிட்டத்தட்ட இதே அளவிலான வரிகள் இருக்கிறது. இதனால் சொகுசு வாகனங்களின் விலையிலும் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட சில வாகனங்களின் விலை அதிகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு வாகனங்களுக்கும் எவ்வளவு ஜிஎஸ்டி என்ற விரிவான விபரங்கள் நாளை தான் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொகுசு வாகனங்களுக்கான விலை மட்டுமே அதிகமாக வாய்ப்புள்ளது. ஆனால் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பெரும்பாலான வாகனங்களின் விலை கணிசமாக குறையும்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது மக்களுக்கு நற்பலனை தரும் வகையில் அமையும். வாகனங்களின் விலை கணிசமாக குறைவதால் இதன் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு இந்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னரே வந்தது வாகன தயாரிப்பு நிறுவனங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 3, 2025, 22:39 [IST]
English summary
Gst for automobiles reduced to 18 percent from sep 22 know full details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+