மோடியால் தலையில் தூண்டை போடும் கார் பைக் கம்பெனிகள்! தீபாவளி பரிசுன்னு இப்படி வேட்டு வச்சிட்டாங்களே!
வழக்கமாக இந்தியாவில் பண்டிகை காலங்களில் வாகன விற்பனை அதிகமாக இருக்கும். இபந்நிலையில் தற்போது இந்தியாவில் வரிசையாக பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் மாறாக இந்த காலகட்டத்தில் விற்பனை குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி பிரதமர் மோடி தீபாவளி அன்று மக்களுக்கு பரிசு காத்திருக்கிறது என்று சொன்னதன் விளைவாக இது ஏற்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வழக்கமாக பண்டிகை காலங்கள் மக்கள் அதிகமாக புதிய பொருட்களை வாங்குவார்கள். நல்ல நாளில் அதிக விலை கொண்ட பொருட்களை வாங்குவது நமது வாழ்விற்கு நன்மை தரும் என நினைப்பார்கள். இந்நிலையில் இந்தியாவில் தற்போது விநாயகர் சதுர்த்தி, ஓணம், நவராத்திரி, தசரா, தீபாவளி என வரிசையாக பண்டிகள் நடக்கவுள்ளன.

வழக்கமாக இந்த காலகட்டங்களில் விற்பனை என்பது அதிகமாக இருக்கும். இந்த நாட்களில் பலர் வாகனங்களை வாங்குவார்கள். இந்நிலையில் வழக்கத்தை விட இந்தாண்டு இந்த காலகட்டத்தில் விற்பனை கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி பிரதமர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
அப்பொழது வரும் தீபாவளிக்கு மக்களுக்கு பரிசு காத்திருக்கிறது என பேசினார். இது ஜிஎஸ்டியில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. குறிப்பாக குறைந்த விலை கார்களுக்கான ஜிஎஸ்டி வரி, எஸ்யூவி கார்களுக்கான ஜிஎஸ்டி வரி எல்லாம் குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

தற்போது வாகனங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் தீபாவளிக்கு பிறகு இது 18 சதவீதமாக குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால்வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து சுமார் 10 சதவீதம் விற்பனை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போது கார் வாங்கும் முடிவில் இருக்கும் மக்கள் ஜிஎஸ்டி வரி குறைந்த பிறகு தங்கள் வாகனம் வாங்கும் முடிவை தள்ளி போட திட்டமிட்டு வருகின்றனர். இதனால் தீபாவளிக்கு பிறகு தான் வாகன விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விற்பனை மிக மோசமான அளவிற்கு வீழ்ச்சியடையவும் வாய்ப்புள்ளது.

தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை விற்பனையை சிறப்பாக பெற்று வந்ததாகவும் 15ம் தேதிக்கு பிறகு விற்பனை மோசமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில் இந்தியா தற்போது உள்ள வரி அமைப்பை மாற்றி 2 ஸ்லாப் கொண்ட வரி அமைப்பிற்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஜிஎஸ்டி குறித்த குழப்பம் ஏற்பட்டதால் விற்பனையில் திண்டாடி வருகின்றனர். இதனால் அடுத்த 2 மாதங்களுக்கு விற்பனை குறையும். ஆனால் தீபாவளிக்க பிறகு இதை விட விற்பனவை டபுள் மடங்கு ஆனாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. தீபாவளிக்கு பிறகு வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தால் நீங்கள் எந்த வாகனத்தை வாங்குவீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









