பழைய காரை வேறு யாருக்கும் விற்கவே கூடாதுனு நெனைக்குறாங்களா? OLX-ஐ எல்லாம் யாரும் தேடி போக போறது இல்ல!!
மத்திய அரசு (Union Government) பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான (Used Cars) ஜிஎஸ்டி (GST)-ஐ சமீபத்தில் அதிகரித்ததை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். யூஸ்டு கார்களை விற்பனை செய்வதற்கான ஜிஎஸ்டி 12%-இல் இருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அமல்படுத்தப்பட உள்ள இந்த புதிய வரி அதிகரிப்பை பற்றிய பேச்சு தான் எங்கு பார்த்தாலும் உள்ளது. மத்திய அரசின் இந்த புதிய ஜிஎஸ்டி வரி அதிகரிப்பு, நாட்டில் யூஸ்டு கார்கள் வணிகத்தில் ஒழுங்கற்ற கட்டமைப்பை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்படி என்ன மாதிரியான ஒழுங்கற்ற கட்டமைப்பை உருவாக்கும் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தலைமையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் நடைபெற்ற 55வது ஜிஎஸ்டி கவுன்சில் (Council) கூட்டத்தில் ஜிஎஸ்டி திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதாவது, நாட்டில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக விதிக்கப்பட்டுவரும் ஜிஎஸ்டி-இல் திருத்தங்கள் செய்யப்பட்டன.

இதன்படி, சில பொருட்கள் & சேவைக்கு ஜிஎஸ்டி குறைத்துக் கொள்ளப்பட்டது. அதேநேரம், சில பொருட்கள் & சேவைக்கான ஜிஎஸ்டி அதிகரித்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில், பயன்படுத்திய காரை வேறொருவருக்கு விற்பனை செய்வதற்கான ஜிஎஸ்டி 12%-இல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 4 மீட்டர்களுக்கும் அதிக நீளமுள்ள யூஸ்டு காரை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்த 18% ஜிஎஸ்டி ஆனது 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களுக்கும் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரி எல்லாம் யூஸ்டு கார்களை விற்பனை செய்வதையே தொழிலாக பார்த்துக் கொண்டிருக்கும் ஓ.எல்.எக்ஸ் ஆட்டோ (OLX Auto) போன்ற நிறுவனங்களுக்கு தான். ஏனெனில், அவைதான் எல்லா ஆவணங்களையும் சரியாக சமர்பித்து, வாகனத்தின் கண்டிஷனை ஒளிவு மறைவின்றி வாங்குவோரிடம் தெரிவிக்கின்றன.

மேலும், ஆர்டிஓ-இல் வாகனத்தின் உரிமையாளர் பெயரை மாற்றிக் கொடுப்பது, யூஸ்டு காருக்கான இன்ஸ்சூரன்ஸை வழங்குவது என எல்லா வேலைகளையும் செய்துக் கொடுக்கின்றன. அத்தகைய நிறுவனங்களுக்கு தான் தற்போது கொண்டுவரப்பட்டு இருக்கும் ஜிஎஸ்டி அதிகரிப்பானது பெரிய தலைவலியாக இருக்க போகிறது. ஏனெனில், அதிகரிக்கப்பட்டு இருக்கும் ஜிஎஸ்டி தொகையை அத்தகைய நிறுவனங்கள் காரை விற்பனை செய்பவரிடம் இருந்து பெற்றுக் அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்.
இதனால், தாங்கள் பயன்படுத்திய காரை விற்பனை செய்ய விரும்புபவர்கள் இதன்பின் அத்தகைய நிறுவனங்களை தொடர்பு கொள்ள விரும்ப மாட்டார்கள். முடிந்தவரையில், அக்கம் பக்கத்திலேயே விற்றுவிட முயல்வர். தற்போதைய புள்ளி விபரம் என்ன கூறுகிறது என்றால், இந்தியாவில் யூஸ்டு காரை விற்க வரும் 30 சதவீதத்தினர் தங்களது நெருங்கிய வட்டாரத்திலேயே விற்பனை செய்து விடுகின்றனராம். இந்த 30 சதவீதம் ஆனது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் 10 சதவீதத்தினர் மட்டுமே ஓ.எல்.எக்ஸ் போன்ற ஆன்லைன் தளங்களின் மூலம் விற்பனை செய்ய முன்வருகின்றனர். இது இல்லாமல், 25 சதவீதத்தினர் டீலர்ஷிப் ஷோரூம்களில் (Dealership Showroom)-களில் பழைய காரை கொடுத்துவிட்டு, புதிய காரை பெற்றுக் கொள்கின்றனர். ஜிஎஸ்டி அதிகரிப்பு இவ்வாறு ஷோரூம்களில் யூஸ்டு காரை மாற்றிக் கொள்வதையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், டீலர்ஷிப் ஷோரூம்கள் யூஸ்டு காரை விற்பனை செய்வதற்கான ஜிஎஸ்டி-ஐ வசூலிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு, ஜிஎஸ்டி-இல் கொண்டுவரப்பட்டு உள்ள சிறிய மாற்றம் நாட்டில் யூஸ்டு கார் மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 4 மீட்டர்களுக்கும் அதிக நீளம் கொண்ட கார்களுக்கு ஏற்கனவே 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருவதால், விலையுயர்ந்த யூஸ்டு காரை தனியார் நிறுவனங்கள் வாயிலாக விற்பனை செய்வதில் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது.
Source: Deccan Herald


Click it and Unblock the Notifications









