கட்டுன ஜிஎஸ்டி திரும்ப கிடைக்குமா? GST Input Credit மூலம் எப்படி வாங்கனும் தெரியுமா?
இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. இதன்படி இந்தியா முழுவதும் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. இந்நிலையில் இந்த குறைந்த ஜிஎஸ்டி வரியை செலுத்தி வாகனம் வாங்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர். இப்படியாக நாம் வாகனங்களுக்கு செலுத்தும் ஜிஎஸ்டியை input கிரெடிட் மூலம் திரும்ப பெற முடியும். பலருக்கு இப்படி ஒரு ஆப்ஷன் இருப்பதே தெரியாது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படுகிறது. இது எல்லாம் தற்போது ஜிஎஸ்டி என்ற ஒரே வரிக்குள் வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது. குறிப்பாக கார், பைக் போன்ற வாகனங்களுக்கு கணிசமான ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வரப்போகிறது.

கார் பைக்குகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட நிலையில் சிறிய கார்கள், பைக்குகளுக்கு 18 சதவீதம் தான் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அதே போல சொகுசு கார், பைக்குகளுக்கு முன்னர் 50 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. தற்போது 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. இதை பயன்படுத்தி குறைந்த விலையில் வாகனம் வாங்க பலர் தயாராக இருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படியாக வாகனம் வாங்கும் போது நாம் செலுத்தும் ஜிஎஸ்டி வரியை input கிரெடிட் மூலம் திரும்ப பெற முடியும். பலருக்கு இப்படி ஒரு ஆப்ஷன் இருப்பதே தெரியவில்லை. ஆனால் இது அனைத்து விதமான வாகனங்களுக்கும் கிடையாது. குறிப்பிட்ட சில பயன்பாட்டிற்காக வாகனம் வாங்குபவர்கள் இந்த ஜிஎஸ்டி input credit எடுத்துக்கொள்ள முடியும். இதற்கு உங்களிடம் பதிவு செய்யப்பட்ட ஜிஎஸ்டி எண் இருக்க வேண்டும்.

நீங்கள் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறீர்கள் உங்கள் நிறுவனத்தின் பயன்பாட்டிற்காக நீங்கள் ஒரு கமர்ஷியல் வாகனம் வாங்குகிறீர்கள் அதாவது சரக்கு எடுத்து செல்ல ஒரு வாகனம் வாங்குகிறீர்கள் என்றால் அந்த வாகனம் வாங்கும் போது நீங்கள் செலுத்திய ஜிஎஸ்டி வரியை நீங்கள் உங்கள் நிறுவனத்தின் ஜிஎஸ்டி எண்ணை வழங்கி அதன் பெயரில் பில் போட்டால் அந்த வாகனத்திற்காக நீங்கள் செலுத்திய ஜிஎஸ்டி வரியை input credit மூலம் பெற முடியும்.
இது சரக்கு வாகனங்களுக்கு மட்டுமல்ல பயணிகள் வாகனங்களுக்கும் பொருந்தும். ஆனால் அதில் சில கட்டுப்பாடுகள் உள்ளது. நீங்கள் ஒரு டிராவல்ஸ் வைத்து நடத்துகிறீர்கள் அதற்காக வாகனம் வாங்கி வாகனத்தை வாடகை, அல்லதுலீஸ் மூலம் மற்றவர்களுக்கு வழங்கி அதன் மூலம் சம்பாதிக்கிறீர்கள் என்றால் நீங்கள் வாகனம் வாங்கும் போது செலுத்திய ஜிஎஸ்டியை input credit மூலம் நீங்கள் பெற முடியும்.

நீங்கள் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்துகிறீர்கள், உங்களுக்கு அதன் பயன்பாட்டிற்காக நீங்கள் ஒரு காரை வாங்குகிறீர்கள் என்றால் அந்த வாகனத்திற்கும் நீங்கள் ஜிஎஸ்டி input credit எடு்துக்கொள்ள முடியும். இது தவிர வேறு எந்த பயன்பாட்டிற்கும், சொந்த பயன்பாட்டிற்காக நீங்கள் வாகனம் வாங்கினால் நீங்கள் நிறுவனத்தின் பெயரில் வாகனம் வாங்கினால் கூட உங்களுக்கு input credit கிடைக்காது.
சிலர் வாகனங்களை சொந்தமாக வாங்காமால் நேரடியாக நிறுவனத்திடம் இருந்து லீஸ் முறைக்கு வாங்கி தங்கள் தொழிலுக்காக பயன்படுத்துவார்கள். இப்படியாக செலுத்தப்படும் லீஸ் பணத்திற்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இந்த ஜிஎஸ்டி வரியை அவர்கள் input credit மூலம் எடுத்துக்கொள்ள முடியும். இது எல்லாம் புதிய விதிமுறை எல்லாம் கிடையாது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விஷயம் தான். இது குறித்து பலர் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு பயனுள்ள தகவலாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வரி விதிப்பு குறைக்க முடிவு செய்துள்ள நிலையில் அந்த வரியையும் மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றி நாம் பலனாக்கிக்கொள்ள முடியும். இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் பலர் இருக்கிறார். அவர்களுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவை செய்துள்ளோம்.


Click it and Unblock the Notifications









