சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

சீனா உள்ளிட்ட உலக நாடுகள் போட்டி போட்டு கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டிருக்கின்றன.

By Arun

சீனா உள்ளிட்ட உலக நாடுகள் போட்டி போட்டு கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எலக்ட்ரிக் கார்களின் பேட்டரிக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு வெகுவாக குறைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபற்றிய விரிவான செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

காற்று மாசுபாடு

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தும் மோட்டார் வாகனங்களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் காற்று மாசுபாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

வருடத்திற்கு பத்து லட்சம் பேர் பலி

இந்தியாவுக்கே இப்படி என்றால், இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் நிலையை யோசித்து பாருங்கள். சீனாவின் முன்னணி நகரங்கள் பலவும் வெகுவாக மாசடைந்து விட்டன. சீனாவில் காற்று மாசுபாட்டினால் மட்டும் ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

எலக்ட்ரிக் வாகனம் பெஸ்ட்

இந்தியா, சீனா மட்டுமல்ல. பெட்ரோல், டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனங்கள் வெளியிடும் புகையினால், உலகின் பெரும்பாலான நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் மாற்றாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்தான்.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லை

மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் உலக நாடுகள் பலவும் தற்போது வேக வேகமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

காத்திருக்கும் பேராபத்து

குறிப்பாக இந்தியாவும், சீனாவும் உச்சக்கட்ட வேகத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறியாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பேராபத்துக்களை இரு நாடுகளும் சந்திக்க வேண்டியது வரும். இதை நன்றாக புரிந்து கொண்ட சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

சீனாவின் கிடு...கிடு...வளர்ச்சி

ஆம், சீனாவை குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எலக்ட்ரிக் பொருட்களுக்கு பெயர் பெற்ற சீனா, மின்னல் வேகத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் சீனாவில் 6,80,000க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதர உலக நாடுகள் அனைத்திலும் விற்பனையான எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

அமெரிக்காவினாலும் நெருங்க முடியவில்லை

உலக வல்லரசான அமெரிக்கா கூட எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் சீனாவை நெருங்க முடியவில்லை. அந்த அளவுக்கு சீனா வெகு வேகமாக முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் ஆக இருக்கும் உலகின் முதல் எகோ சிஸ்டம் சீனாவினுடையதாகதான் இருக்கும் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

இந்தியாவின் நிலை

சீனாவுக்கு நிகரான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவும் இதற்கு எல்லாம் ஈடுகொடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளது. இதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

பல்வேறு நடவடிக்கைகள்

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

ஜிஎஸ்டி வரி குறைப்பு?

இதனிடையே எலக்ட்ரிக் கார் பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது எலக்ட்ரிக் கார் பேட்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக உள்ளது. இது 12 சதவீதமாக குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

மகேந்திரா, டாட்டா

தற்போது இந்தியாவில் மகேந்திரா மற்றும் டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசின் முடிவு எலக்ட்ரிக் கார் உற்பத்தி செலவை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

எலக்ட்ரிக் கார் விலை குறையலாம்

எந்தவொரு எலக்ட்ரிக் வாகனம் என்றாலும், அதில் விலை உயர்ந்த பார்ட் என்றால், அது எலக்ட்ரிக் பேட்டரிதான். எனவே ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால், எலக்ட்ரிக் கார்களின் விலை குறையலாம்.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

முடியுமா?

இந்தியாவின் பேம் என்ற அமைப்பு 2020ம் ஆண்டுக்குள் 6-7 மில்லியன் எலக்ட்ரிக் வாகனங்களை சாலைகளில் ஓட வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

மலைக்க வைக்கும் ஆயில் தேவை

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், 2017-2030ம் ஆண்டு வரை இந்தியாவின் பயணிகள் வாகனங்களுக்கான ஆயில் தேவை 1.6 பில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

சீனாவுடன் போட்டி...மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு... என்னவென்று தெரியுமா?

பூஸ்ட்...!

இதுபோன்ற காரணங்களும், ஆயிலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான ஒரு மிகப்பெரும் ஊக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, May 11, 2018, 19:15 [IST]
English summary
GST On Electric Car Batteries Could Come Down Drastically. read in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+