இது மட்டும் நடந்துட்டா மோடிதான் மறுபடியும் பிரதமர்! இனி வீட்டுக்கு வீடு புது கார் நிக்கும்! மத்திய அரசு அதிரடி

இந்தியா முழுக்க சுதந்திர தினம் நேற்று (ஆகஸ்ட் 15), கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi), நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது சரக்கு மற்றும் சேவைகள் வரி என சுருக்கமாக அழைக்கப்படும் ஜிஎஸ்டி வரி (Goods and Services Tax - GST) விதிப்பில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் அதிரடியாக அறிவித்தார்.

அதாவது இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகளில் அதிரடியாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த மாற்றங்கள், சாமானிய மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில், பெரும்பாலான சரக்கு மற்றும் சேவைகளுக்கு, மொத்தம் 4 ஸ்லாப்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

Narendra Modi

அவை 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகியவை ஆகும். பெரும்பாலான சரக்கு மற்றும் சேவைகள், இந்த 4 ஸ்லாப்களின் கீழ் ஏதாவது ஒன்றில் வரும். ஆனால் வரும் மாதங்களில், ஜிஎஸ்டி வரிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது இனி 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என 2 ஸ்லாப்கள் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி குறைப்பை மக்களுக்கு தீபாவளி (Diwali) பரிசாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் மூலமாக, இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விலையும் குறையவுள்ளது. குறிப்பாக வாகனங்களின் விலை, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Nexon

இந்தியாவில் தற்போதைய நிலையில் பெரும்பாலான கார்கள் மற்றும் டூவீலர்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆட்டோ தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், இனி பெரும்பாலான கார்கள் மற்றும் பைக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இனி பெரும்பாலான கார்கள் மற்றும் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், 10 சதவீதம் வரை பணத்தை சேமிக்க முடியும். எனவே ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள், இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. புதிய கார்கள் மற்றும் பைக்குகள் மட்டுமல்லாது, வாகன உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நடக்கும்பட்சத்தில், வாகனங்களின் பராமரிப்பு செலவும் குறையும். எனவே இதுவும் வாகன உரிமையாளர்களுக்கு பலன் அளிப்பதாக அமையும். ஆனால் இங்கே மற்றொரு விஷயத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) 5 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு அவற்றுக்கு மட்டும் ஏற்கனவே ஜிஎஸ்டி வரியை குறைவாகதான் நிர்ணயம் செய்துள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி தொடர்ந்து 5 சதவீதமாகவே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டால், பெரும்பாலான புதிய கார்கள் மற்றும் பைக்குகளின் விலை குறையும். இதன் காரணமாக புதிய கார்கள் மற்றும் பைக்குகளை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் முன் வருவார்கள். இதன் விளைவாக புதிய கார்கள் மற்றும் பைக்குகளின் விற்பனை அதிகரிக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருகிறது. இதனால் ஜிஎஸ்டி வரி குறைப்பு, பொதுமக்களுக்கு மட்டுமல்லாது, கார் மற்றும் பைக் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 16, 2025, 19:54 [IST]
English summary
Gst reform cars bikes to get cheaper check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+