புரட்சிகர கண்டுபிடிப்பு... ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டராக மாற்றிய விவசாயி!

ஆள் பற்றாக்குறையால் விவசாயப் பணிகளில் எந்திரங்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. மேலும், விரைவாக பணிகளை செய்வதற்கும் இது ஏதுவாகிறது. இந்த நிலையில், உழவு நேரங்களில் டிராக்டர்களுக்கு ஏக கிராக்கி இருக்கும் என்பதால், பணிகளில் தொய்வு ஏற்படுவது வழக்கம்தான்.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டராக மாற்றிய விவசாயி!

ஏனெனில், சிறு விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்களை பிறரிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. மேலும், டிராக்டர் வாங்குவதற்கான முதலீடும், பராமரிப்பும் அதிகம்.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டராக மாற்றிய விவசாயி!

இந்த நிலையில், டிராக்டர் இல்லாமல் அவதிப்பட்ட குஜராத் விவசாயி ஒருவர் தனது ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டர் போல மாறுதல்களை செய்து பயன்படுத்தி வருகிறார். குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள மோட்டா தேவலியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மன்சுக் ஜகனி. இவரது பகுதியில் நிலவிய கடும் வறட்சி காரணமாக வருமானம் இல்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டராக மாற்றிய விவசாயி!

மேலும், தன்னிடம் இருந்த மாடுகளையும் விற்றுவிட்டார். விவசாயத்தை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலையில், மீண்டும் விவசாயப் பணிகளை துவங்கி இருக்கிறார். ஆனால், கையில் மாடுகள் இல்லாததால், அவரது நிலத்தை உழவு செய்வதற்கு பெரும் திண்டாட்டமாக போய்விட்டது. டிராக்டர் வாடகைக்கு எடுப்பதிலும் பிரச்னை இருந்துள்ளது.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டராக மாற்றிய விவசாயி!

மேலும், டிராக்டர் வாங்குவதற்கு பெரும் முதலீடு செய்யும் அளவுக்கு வசதி இல்லை. இந்த நிலையில், அவரது கிராமப் பகுதிகளில் மோட்டார்சைக்கிள்களை ரிக்ஷா போன்று மாறுதல்களை செய்து போக்குவரத்திற்கு பயன்படுத்தி உள்ளனர்.

Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டராக மாற்றிய விவசாயி!

இதனை பார்த்த அவருக்கு, தனது புல்லட் மோட்டார்சைக்கிளில் உழவுக்கான கலப்பையை வடிவமைத்து பொருத்தி இருக்கிறார். பின்புற சக்கரத்தை எடுத்துவிட்டு, புதிய ஆக்சில் ஒன்றை பொருத்தி, டிராக்டர்களின் முன்புறத்தில் பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான இரண்டு சக்கரங்களை மோட்டார்சைக்கிளின் பின்புறத்தில் பொருத்தி இருக்கிறார்.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டராக மாற்றிய விவசாயி!

பின்னர் தனது வயலில் வைத்து உழவுப் பணிகளை துவங்கிவிட்டார். இப்போதல்ல, 1994ம் ஆண்டு முதல் இவ்வாறு உழவுப் பணிகளை செய்து வருகிறார். இதுதவிர்த்து, அந்த சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு இதுபோன்று புல்லட் மோட்டார்சைக்கிளில் ஏர் கலப்பைகளை பொருத்தி தந்துள்ளார்.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டராக மாற்றிய விவசாயி!

இதற்காக ஒர்க்ஷாப்பையும் நடத்தி வருகிறார் ஜகனி. தான் கண்டுபிடித்த புல்லட் மினி டிராக்டரை வைத்து உழவு செய்வதன் மூலமாக செலவீனம் 40 சதவீதம் குறைவு என்று பெருமிதம் தெரிவிக்கிறார் ஜகனி. ஒரு ஏக்கர் நிலத்தை உழுவதற்கு வெறும் 1 லிட்டர் டீசல் மட்டுமே செலவாகிறதாம்.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டராக மாற்றிய விவசாயி!

இந்த மினி டிராக்டரில் கலப்பைகளை பொருத்துவதும், கழற்றுவதும் எளிது. உழவுப் பணிகள் தவிர்த்து, கடலை அறுவடை , விதை விதைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான கருவியையும் இவர் வடிவமைத்து புல்லட் மோட்டார்சைக்கிளில் பொருத்தி தந்து வருகிறார்.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டராக மாற்றிய விவசாயி!

பள்ளிக்கூடத்திலிருந்து பாதியில் படிப்பை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கிய ஜகனி தற்போது தனது ஐடியாவின் மூலமாக அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு உதவி செய்துள்ளதோடு, விவசாய செலவுகளையும் பெருமளவு குறைப்பதற்கான முயற்சிகளையும் செய்துள்ளது பலரின் பாராட்டுதல்களை பெற்றிருக்கிறது.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டராக மாற்றிய விவசாயி!

மேலும், கென்யாவில் ஜகனியின் டிராக்டர் சில ஆண்டுகளுக்கு முன் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முன்பதிவு அறிவித்தவுடன், 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து க்யூ கட்டியது நினைவுகூறத்தக்கது. பல நாடுகளிலும் இந்த டிராக்டரை விற்பனைக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளை டிராக்டராக மாற்றிய விவசாயி!

இதுமட்டுமில்லை, Bullet Santi என்ற தனது டிராக்டர் பெயரில் இணையதளத்தையும் நடத்தி வருகிறார். ஜகனியின் மினி டிராக்டருக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. அத்துடன், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான பல விருதுகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Gujarat farmer converts Royal Enfield into tractor.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more