சாலை வரி வேண்டாம்னு சொல்றது இந்த மாநில அரசின் தொலைநோக்கு பார்வையை காட்டுது! இது நம்ம தமிழ்நாடு கிடையாதுங்க!
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) இந்தியா உள்பட உலகம் முழுவதிலுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அமெரிக்கா, சீனா அளவிற்கு இல்லையென்றாலும், இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை சீரான வேகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் முயற்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காகவே ஃபேம்-2 (FAME-2) என்கிற பெயரிலான ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த திட்டத்தின்படி, எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கணிசமான தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசாங்கங்களும் தாங்களால் முடிந்த அளவிற்கு எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வருகின்றன. நம் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்த 2025-26ஆம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டில் கூட எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்தக்கூடிய பல திட்டங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த நிலையில், தற்போது இந்திய மாநில அரசாங்கம் ஒன்று எலக்ட்ரிக் வாகனங்களுக்காக அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் வாகனத்தின் விலையில் 6 சதவீதத்தை சாலை வரியாக செலுத்தாமல், வெறும் 1 சதவீதத்தை மட்டும் செலுத்தினாலே போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உதாரணத்திற்கு 1 லட்ச ரூபாயில் ஒரு எலக்ட்ரிக் 2-வீலரை வாங்குகிறீர்கள் எனில், அதன் விலையில் 6 சதவீதமான ரூ.6,000ஐ சாலை வரியாக செலுத்த வேண்டியது இல்லை. 1 சதவீதமான வெறும் ரூ.1,000ஐ செலுத்தினாலே போதுமானது.

1 லட்ச ரூபாய் விலை கொண்ட எலக்ட்ரிக் 2-வீலருக்கே இந்த அளவிற்கு வித்தியாசம் உள்ளது என்றால், பல இலட்ச ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) எந்த அளவிற்கு வித்தியாசம் இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். இப்படியொரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் மாநிலம், குஜராத் (Gujarat) ஆகும். சமீப காலங்களில் குஜராத் பொருளாதார ரீதியாக பல முன்னேற்றங்களை கண்டுள்ளது.
குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை இந்த மாநிலத்தில் கடந்த சில வருடங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக இவ்வாறான ஒரு அறிவிப்பை குஜராத் அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பானது இன்னும் 1 வருட காலத்திற்கு மட்டுமே குஜராத்தில் அமலில் இருக்க உள்ளது.
அதாவது, 2026 மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே எலக்ட்ரிக் வாகனங்களை இந்த சலுகை உடன் பெற முடியும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஆனது 2025-26ஆம் நிதியாண்ட்டிற்கான குஜராத் மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
புதியதாக எலக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்கள் வாஹான் 4.0 இணைய பக்கத்தில் தங்களை பதிவு செய்துக் கொண்டு இந்த சலுகையை பெறலாம் என குஜராத் மாநில நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். குஜராத்தின் இந்த சாலை வரி சலுகை திட்டத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே உட்படுகின்றன. பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் (Electric Motor) பொருத்தப்படும் ஹைப்ரீட் (Hybrid) வாகனங்கள் இதில் உட்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக வெப்பமயமாதலை மெதுவாக்க எலக்ட்ரிக் வாகனங்கள் போன்ற கார்பன் மாசுவை குறைவாக வெளிப்படுத்தக்கூடிய வழிகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. எலக்ட்ரிக் வாகனங்களையும், பேட்டரிகளையும் உருவாக்கும் தொழிற்சாலைகளில் இருந்தும் கார்பன் வெளியேற்றப்படுகிறது என்றாலும், அது வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையை காட்டிலும் நிச்சயம் குறைவாகவே இருக்கும். இத்தகைய சிறப்புமிக்க எலக்ட்ரிக் வாகனங்களை மக்களை அதிகம் வாங்க வைப்பதற்கு இவ்வாறான வரி சலுகைகள் தேவைப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








