குரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...

பல லட்சம் மதிப்புள்ள புதிய மாருதி ஸ்விஃப்ட் காரினை அதன் உரிமையாளர் குரங்குக்காக நொறுக்கிய சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. எதற்காக தெரிஞ்சா கண்டிப்பா நீங்க அதிர்ச்சியடைவீங்க...

குரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...

பருவகால மாற்றமாக கோடை, மழை மற்றும் குளிர்காலம் என மாறி, மாறி வருவது வழக்கம். பூமியானது சூரியனை வலம் வரும்போது, 23 டிகிரி கோணத்தில் சாய்ந்திருப்பதால் இந்த மாற்றம் ஏற்படுகிறது.

குரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...

பூமத்திய ரேகைக்கு வடபகுதியில் இருப்பது வடக்கு அரைகோளம் என்றும், தெற்கு பகுதியில் இருப்பது தெற்கு அரைகோளம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் நேர் கதிர்கள் தெற்கு அரைகோளத்தில் விழும்போது குளிர்காலம் வருகிறது.

குரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...

இந்தியாவில் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் சூரியனின் சாய் கிரகணங்கள் நமது நிலப்பகுதியின் மீது விழும். அதன் காரணமாக நிலப்பகுதி அதிகமாக வெப்பம் அடையாமல் குளிர்ச்சியாகவே காணப்படும். இதன்காரணமாக இம்மாதங்களை குளிர்காலம் என்று அழைக்கிறோம்.

குரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...

மேலும், இந்த குளிரானது ஊருக்கு ஊர் மாறுபடும். அதேபோல இந்தியாவின் மற்றசில மாநிலங்களில் குளிரின் தாக்கம் கை, கால்களை உறையவைக்கின்ற அளவிற்கு மிக கடுமையாக இருக்கும். இதுபோன்ற காலங்களில் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை குளிரின் தாக்கத்தில் தப்பிக்க தங்களால் முடிந்த அளவுக்கு அனைத்து வழிகளையும் தேடிச் செல்வார்கள்.

குரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...

மனிதன், சூழலுக்கேற்ப தன் உடை, உணவு என தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் மாற்றிக்கொண்டு, ஓர் பாதுகாப்பு வளையத்தை உறுவாக்கிக் கொள்வான். ஆனால், விலங்குகள் அவ்வாறு இல்லாமல், இயற்கையின் சூழலில் சிக்கி செய்வதறியாமல் தவிக்கும்.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

குரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...

இதுபோன்ற சூழலில் தான், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் எஞ்ஜின் (பேனட்) பகுதிக்குள், குளிருக்கு இதமாக புகுந்த லங்கூர் குரங்கு, சிக்கிக்கொண்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

குரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...

தனது காருக்குள் குரங்கு புகுந்திருப்பது அறியாத காரின் உரிமையாளர், அந்த காரை எடுத்துக்கொண்டு பணி நிமித்தமாகப் புறப்பட்டுள்ளார். அவ்வாறு வதோதரா-அஹமதாபாத் விரைவுச் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வாகனத்தில் இருந்து நீண்ட நேரமாக குரங்கு ஒன்று அலறும் சத்தம் கேட்டுள்ளது.

குரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...

இதைத்தொடர்ந்து, காரின் உரிமையாளர் காரின் உட்பகுதி முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்துள்ளார். ஆனால், குரங்கு இருப்பதற்கான அடையாளம் எதுவும் தென்படவில்லை. பின்னர், தன் பயணத்தை மீண்டும் துவங்க ஆரம்பித்துள்ளார். அப்போது குரங்கின் வால் மட்டும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இதைக்கண்ட மற்றொரு ஓட்டுனர், காரின் எஞ்ஜின் பகுதிக்குள் குரங்கு சிக்கியிருப்பதாக எச்சரித்துள்ளார்.

குரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...

இதையடுத்து, காரை ஓரம் கட்டிய அவர், நீண்ட இரும்புக் கம்பியைக் கொண்டு எஞ்ஜினின் முன்பகுதியை உடைத்து குரங்கை வெளியேற்றினார். உடைக்கப்பட்ட அந்த காரானது, புத்தம் புதிய மாருதி ஸ்விஃப்ட் ரகத்தை மாடலாகும். குரங்குக்காக பல லட்சம் மதிப்புள்ள காரை நொறுக்கிய சம்பவம் குஜராத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

குரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...

மேலும், அந்த கார் உரிமையாளருக்கு விலங்கு நல ஆர்வளர்கள் உட்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். காரில் இருந்து விடுப்பட்ட அந்த குரங்கு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று தஞ்சமடைந்தது. ஆனால், தற்போது வரை அந்த குரங்கு எவ்வாறு காரின் எஞ்ஜின் பகுதிக்குள் நுழைந்தது என்று அந்த உரிமையாளருக்கு தெரியவில்லை.

குரங்குக்காக விலையுயர்ந்த புதிய காரை நொறுக்கிய உரிமையாளர்...

ஒருவேலை காரை பார்க்கிங் செய்தபோது குளிருக்கு இதமாக எஞ்ஜினில் நுழைந்திருக்கலாம் எனவும், அப்போது வாகனத்தை எடுத்தபோது அது எஞ்ஜினின் இரும்புக் கூட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Gujarat Langur Stuck In Hood Of Car Rescued. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X